Subscribe to Gizbot

இஸ்ரோவை "சைக்கிள் கேரியர்" என்று கிண்டலடித்த நாடுகள் தற்போது க்யூவில் நிற்கின்றன.!

Written By:

மாபெரும் சக்திவாய்ந்த நாடுகள் என்று மார்தட்டிக்கொள்ளும் உலக நாடுகளால், கற்பனை கூட செய்து பார்க்கமுடியாத மிகக்குறைந்த செலவில் இஸ்ரோவின் மங்கள்யான் விண்கலம் செய்வாய் கிரகத்தை அடைந்தது.

அதை பாராட்டும் மனப்பக்குவம் இல்லாத 'தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிக்கை, இந்தியாவை கிண்டல் செய்யும் நோக்கத்தில் கேலி சித்திரம் ஒன்றை வெளியிட்டது.

இஸ்ரோவை

அதில் மாடு மேய்க்கும் ஒருவர் தனது மாட்டை கையேடு பிடித்துக்கொண்டு விண்வெளி ஆய்வில் சிறப்பாக செயல்படும் சங்கத்தில் இணைந்துகொள்ள, வாசலில் நின்று கதவை தட்டுவதை அந்த கேலிச்சித்திரம் காட்சிப்படுத்தியது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை பதிலடி.!

ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை பதிலடி.!

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பெயரிடப்படாத ஒரு அமெரிக்க விண்கலமொன்று விண்ணில் ஏவப்பட்ட போது வெடித்து சிதறிய போது, ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை, ஒரு கேலி சித்திரத்தை வெளியிட்டது. அதில், விண்வெளி ஆய்வில் சிறப்பாக செயல்படும் சங்கத்தில் ஏற்பட்ட ராக்கெட் வெடிப்பை, மாட்டை கையில் பிடித்தப்படி மாடு மேய்ப்பவர் வேடிக்கை பார்ப்பது போலவும், இந்தியாவின் ராக்கெட் அறிவியல் உயர்ந்த நிலையில் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

சைக்கிள்களிலும், மாட்டு வண்டிகளிலும்..

சைக்கிள்களிலும், மாட்டு வண்டிகளிலும்..

இஸ்ரோவிற்கு இதெல்லாம் ஒன்றும் புதிதல்ல "ராக்கெட் பாகங்களை சைக்கிள்களிலும், மாட்டு வண்டிகளிலும் வைத்து தள்ளிகொண்டு போய் ராக்கெட் உற்பத்தி செய்த நாடு தானே இந்தியா.!?" என்று இஸ்ரோவின் ஆரம்ப கால வளர்ச்சியை கேலி செய்த உலக நாடுகள் தற்போது, எங்களது செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த உதவுங்கள் என்று இஸ்ரோவின் வாசலில் க்யூவில் நிற்கின்றன.

இந்தியாவின் உதவியை நாடிய அமெரிக்கா.!

இந்தியாவின் உதவியை நாடிய அமெரிக்கா.!

இஸ்ரோவின் அபாரமான ராக்கெட் சயின்ஸ் வளர்ச்சியானது, அமெரிக்காவையும் வரிசையில் நிற்கவைக்க மறுக்கவில்லை. கடந்த 2015 தொடங்கி 2016 வரை என்ற ஓராண்டு கால இடைவெளியில் மொத்தம் 9 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த இந்தியாவின் உதவியை அமெரிக்கா நாடியதும், அமெரிக்க செயற்கைகோள்களை இந்தியா விண்ணில் ஏவியது அதுவே வரலாற்றில் முதல் முறை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

பகல் கனவாக திகழும் இஸ்ரோ.!

பகல் கனவாக திகழும் இஸ்ரோ.!

இப்படியான பெருமைகள் மிக்க நமது இஸ்ரோவிற்கும் வரவிருக்கும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கும் ஒரு தொடர்பு இருக்கிறதென்பது பற்றி உங்களுக்கு தெரியுமா.? இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ 48 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1969-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி தான் தொடங்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் உலக நாடுகளின் கேலி பேச்சுக்கு உள்ளான இஸ்ரோ, இப்போது உலக விண்வெளி ஆராய்ச்சி மையங்களால் எட்டிப்பிடிக்க முடியாத விடயங்களை அசாதாரணமாக முடித்துக்காட்டும் பகல் கனவாக இஸ்ரோ திகழ்கிறது என்பது வெளிப்படை.

இஸ்ரோவிற்கு எல்லாமே ஏறுமுகம் தான்.!

இஸ்ரோவிற்கு எல்லாமே ஏறுமுகம் தான்.!

தொட்டதெல்லாம் பொன்னாகியது என்பது போல இஸ்ரோவின் ஒட்டுமொத்த விண்வெளி வளர்ச்சி பயணமும் ஏறுமுகமாகவே இருந்தது. அப்படியான மகத்தான மற்றும் மறக்கமுடியாத இஸ்ரோவின் சாதனைகள் பல. அதில் குறிப்பிடத்தக்க வண்ணம் - முதல் இந்திய செயற்கைக்கோளை ஆர்யபட்டா (பிரபல இந்திய வானியலாளர் பெயர்) ஏப்ரல் 19, 1975 அன்று விண்ணில் செலுத்தப்பட்டது. முற்றிலும் இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட அந்த செயற்கைகோள் ஆனது சோவியத் கோஸ்மோஸ் -3எம் ராக்கெட் மூலம் தொடங்கப்பட்டது. அது தான் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைத்தல் அடிப்படை சார்ந்த இந்தியாவின் கற்றல் ஆகும்.

செயற்கைக்கோள் தொழில்நுட்பம்

செயற்கைக்கோள் தொழில்நுட்பம்

பின்னர், 1975 முதல் 1976 வரை இஸ்ரோ, அமெரிக்க விண்வெளி நிறுவனம் தேசிய விமானவியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (நாசா) உடன் இணைந்து தொலைக்காட்சி ஒலிபரப்பு விண்வெளி தொடர்புகள் முறையை உருவாக்கியது (ப்ராஜக்ட் சைட் - Project SITE). 1976-ல் இருந்து 1977 வரை, செயற்கைக்கோள் தொலைத்தொடர்புகள் சோதனை திட்டம் நிகழ்த்தப்பட்டது (ஸ்டெப் -Project STEP) அதில் உள்நாட்டு தொடர்புகளை மேம்படுத்த செயற்கைக்கோள் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள்

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள்

இந்தியாவின் முதல் தொலை உணர்வு எனப்படும் ரிமோட் சென்சிங் சோதனை செயற்கைக்கோளான பாஸ்கரா- ஒன்று, ஜூன் 07,1979 கட்டமைக்கப்பட்டது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் செயற்கைக்கோளான ரோகிணி ஜூலை 18, 1980 அன்று விண்ணில் செலுத்தப்பட்டது.

ராகேஷ் ஷர்மா

ராகேஷ் ஷர்மா

ஏப்ரல் 2, 1984 இல், முதல் இந்திய-சோவியத் விண்வெளி பணி தொடங்கப்பட்டது, அத்திட்டத்தில் விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர் ராகேஷ் ஷர்மா ஆவார். அக்டோபர் 22, 2008 அன்று, சந்திராயன் -1 இந்திய நாட்டின் முதல் சந்திர கிரக பயணம் இஸ்ரோவின் மூலம் தொடங்கப்பட்டது.

மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்

மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்

உலக சரித்திரம் படைத்த இஸ்ரோவின் (மங்கள்யான்) மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் நவம்பர் 5, 2013 அன்று விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை அடைந்தது. ஜூன் 22 , 2016 அன்று, இஸ்ரோ ஒரே ஏவுதலில் துருவ எஸ்.எல்.வியை ( பி.எஸ்.எல்.வி.) ராக்கெட் மூலம் மொத்தம் 20 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தி சாதனை படைத்தது.

ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்கள்

ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்கள்

எல்லாவற்றிற்கும் மேலாக இந்தாண்டு பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சத்தீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஒரே பாய்ச்சலில் 104 செயற்கைக்கோள்களை, இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இதன் மூலம் ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக செலுத்திய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு செயற்கைக்கோளில் 23 செயற்கைக்கோள்களை வெளியிட்ட பின்னர் இஸ்ரோ நிகழ்த்திய இரண்டாவது வெற்றிகரமான முயற்சி இதுவாகும்.

மங்கள்யான் -2

மங்கள்யான் -2

இதற்கிடையில் உலக நாடுகளை மீண்டுமொரு முறை வாய்பிளக்க வைக்கும் நோக்கத்தில், இஸ்ரோ நிறுவனம் செவ்வாய் கிரகம் மீதான அதன் இரண்டாம் திட்டத்தை, அதாவது மங்கள்யான் -2 விஞ்ஞான திட்டங்களை வகுத்து வருகிறது. மங்கள்யான்-2 வின் கட்டமைப்பு, இலக்குகள் மற்றும் அறிவியல் சோதனைகள் இன்னும் வடிவமைக்கப்படவில்லை என்றாலும் கூட விரைவில் அதுசார்ந்த தகவல்கள் வெளியாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
The Name is ISRO and the Job is Achieving Strategic Goals. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot