வானில் தென்பட்ட மிக அசாதாரணமான மர்ம பறக்கும் பொருள்.!
அந்த விசித்திரமான மர்ம பறக்கும் பொருளானது வேற்றுகிரகவாசிகளின் பறக்கும் தட்டாக இருக்கும் எனவும், அவை நம்மை கண்காணிப்பதற்காக பூமிக்கும் வந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
இவ்வளவு வருடங்களில் கேமராவில் படம்பிடிக்கப்பட்ட மிக அசாதாரணமான மர்ம பறக்கும் பொருளை நீங்கள் கண்டுகளிக்கும் வகையில் உங்களுக்கு இங்கு அறிமுகப்படுத்துகிறோம்.

கடந்த ஜூன் 11 அன்று லிமா பெரு என்ற இடத்தில் பதிவுசெய்யப்பட்ட இந்த காணொளியானது, தொடக்கத்தில் வானில் ஒரு விசித்திரமான ஒளி தோன்றுவது போல சாதாரணமாகத்தான் துவங்குகிறது. கேமராமேன் படம்பிடிக்கும் போது அதை கவனித்தவுடன் ஜூம் செய்கையில் தான் மிகவும் அசாதாரணமான ஒன்றாக புலப்படுகிறது.
அந்த பொருள் அளவில் பெரிதாகிக்கொண்டே சென்று, இருபரிமாண வைரத்திலிருந்து கண் ஒன்று வெளியே வருவது போல தோற்றமளிக்கிறது. அனைவரும் பார்க்கும் வகையில் அதனுள் இருக்கும் கண் மிகவும் பிரகாசமாக உள்ளது. அந்த விசித்திரமான மர்ம பறக்கும் பொருளானது வேற்றுகிரகவாசிகளின் பறக்கும் தட்டாக இருக்கும் எனவும், அவை நம்மை கண்காணிப்பதற்காக பூமிக்கும் வந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

சமீபத்தில் நீங்கள் பார்த்தவற்றில் இது விசித்திரமான ஒன்றாக உங்களுக்கு தெரியவில்லை எனில், நீங்கள் பார்த்ததையும் யூடியூபில் பதிவேற்றம் செய்யுங்கள். ஆனால் வானில் தெரியும் அந்த கண்ணை உற்று நோக்காதீர்கள், ஏனெனில் அந்த மர்ம பறக்கும் தட்டில் உள்ள ஏலியன்கள் உங்களை நியாபகம் வைத்துக்கொள்ளக்கூடும்.
உங்களுக்கும் அந்த காணொளியை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறதா? இதோ உங்களுக்காக அந்த விசித்திரமான மர்ம பறக்கும் தட்டு உள்ள காணொளி..


Click it and Unblock the Notifications