Subscribe to Gizbot

நாசிஸம் நடத்திய கொடூரங்கள்; மன்னிக்கவே முடியாத குற்றங்கள்.!

Written By:

ஹிட்லரும், நாஸிப்படையும் உலகின் மீது திணித்த தீமைகள் எல்லாம் வரலாற்றின் கருப்பு பக்கங்கள் முழுக்க நிறைந்து கிடக்கும் மறுபக்கம், நாஸி மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் மூடிய கதவுகளுக்குள் நிகழ்த்திய மிக மோசமான, கொடூரமான மனித சோதனைகள் எல்லாம் பெரும்பாலும் எங்குமே அறிய கிடைக்கவில்லை. அவைகள் பொதுவாகவே செவிவழி செய்தியாக மட்டுமே அறியப்படுகின்றன.

நாசிஸம் நடத்திய கொடூரங்கள்; மன்னிக்கவே முடியாத குற்றங்கள்.!

மனிதர்களை பரிசோதனை எலிகளை போல் பயன்படுத்தி நடத்தப்பட்ட அந்த நாஸி சோதனைகளின் விளைவாக கற்பனைக்கு எட்டாத வலி, கை கால் துண்டிப்பு, இயலாமை மற்றும் இறுதியில் மரணம் போன்ற பல விபரீதங்கள் ஏற்பட்டன. கிட்டத்தட்ட 30 வகையான மனித பரிசோதனைகளை சித்திரவதை முகாமில் அடைக்கப்பட்டு கிடந்த கைதிகள் மீது நிகழ்த்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

ஜெர்மனி நாட்டின் பவேரியா மாநிலத்தின் நியூரம்பெர்க் நகரில் நடந்த விசாரணையில், 23 மருத்துவர்களில் 15 பேர் என்ற விகிதத்தில் சிந்திக்க முடியாத, கற்பனைக்கு எட்டாத போர்க்குற்றங்களில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகளில் மிகவும் அதிர்ச்சியான மற்றும் சாத்தான் தனமான சில மனித பரிசோதனைகளும் அடங்கும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
உறைபனி நீருக்குள்

உறைபனி நீருக்குள்

ஜெர்மன் விமானிகள் பனிக்கட்டி கடல்நீர் பிரதேசங்களை சமாளிக்க உதவும் நோக்கத்தில், உறைநிலைக்கு ஏற்ற மனிதர்களை உருவாக்க நடந்த சோதனையின் கீழ், முகாம் கைதிகள் சுமார் 5 மணி நேரம் வரையிலாக உறைபனி நீருக்குள் மூழ்கடிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்.

1000 ஜோடி இரட்டையர்கள் மீது ஆய்வு

1000 ஜோடி இரட்டையர்கள் மீது ஆய்வு

ஜெர்மன் இனத்தை விரைவாக பெருக்குவதற்காக நிகழ்த்தப்பட சோதனை ஒன்றின் கீழ், இரட்டை குழந்தைகள் மற்றும் அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் குழந்தைகள் பிறப்பு எப்படி நடக்கிறது என்பதை அறிந்து, மிக விரைவாக ஜெர்மன் இனத்தை பெருக்க நினைத்தார் டாக்டர் ஜோசப் மென்கிலி. அதற்கான சோதனையில் 1000 ஜோடி இரட்டையர்கள் மீது ஆய்வு நிகழ்த்தப்பட்டது, அந்த ஆய்வின் முடிவில் வெறும் 200 பேர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்த சோதனைக்கு இதற்கு மேல் இவர்கள் பயன்படமாட்டார்கள் என்று ஒதுக்கப்பட்டவ்ரகளுக்கு எல்லாம் நேரடியாக இதயத்தில் குளோரோபார்ம் ஊசி போடப்பட்டுள்ளது.

காசநோய்க்கான குண மருந்து

காசநோய்க்கான குண மருந்து

நாஸி மருத்துவர்கள் காசநோய்க்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மக்களை தேடினார்கள் , அவர்கள் மூலம் காசநோய்க்கான மருந்தை கண்டுபிடிக்கலாம் என்று எண்ணினர். இதற்காக காசநோய் கிருமிகள், முகாம் கைதிகளில் நுரையீரலுக்குள் நேரடியாக செலுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

போஸ்ஜின் எரிவாயு, கலவை மாற்று மருந்து சோதனை

போஸ்ஜின் எரிவாயு, கலவை மாற்று மருந்து சோதனை

போஸ்ஜின் - முதலாம் உலகப்போரில் ஒரு உயிரியல் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது. அதற்கு மாற்று கலவை கண்டுபிடிக்கும் நோக்கத்தில் 52 முகாம் கைதிகள் போஸ்ஜின் எரிவாயு செலுத்தப்பட்டு சோதிக்கப்பட்டனர். நுரையீரலுக்குள் எரிச்சலை ஏற்படுத்தும் அந்த வாயு ஏற்கனவே பலவீனமாக இருந்த கைதிகள் பலரை விரைவாக கொன்று குவித்தது.

மூட்டுகள் மாற்று சோதனைகள்

மூட்டுகள் மாற்று சோதனைகள்

ஒரு நபரின் மூட்டுகள் மற்றும் மூட்டு எலும்புகள் நீக்கப்பட்டு வேறு ஒரு நபருக்கு பொருத்த முடியுமா என்று நாஸி மருத்துவர்கள் பரிசோதிக்க விரும்பினர். இந்த சோதனைக்காக முகாம் கைதிகளின் மூட்டுகள் மற்றும் மூட்டு எலும்புகள் தேவையில்லாமல் துண்டிக்கப்பட்டது. மிகப்பெரிய தோல்வியில் முடிந்த இந்த சோதனைக்காக பலர் கொல்லப்பட்டனர், முடமாக்கப்பட்டனர்.

கடல் நீரை குடிநீராக்கும் சோதனை

கடல் நீரை குடிநீராக்கும் சோதனை

நாஸி விஞ்ஞானிகள் கடல் நீரை குடிநீராக மாற்ற முயற்சித்தனர், இதற்காக சுமார் 90 நாடோடிகளை உணவு, நல்ல குடிநீர் இன்றி வெறும் கடல் நீரை மட்டுமே குடிக்க செய்தனர். தோல்வியில் முடிந்த இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் அனைவருக்கும் தீவிர உடல் காயங்கள் ஏற்பட்டன.

மரண தண்டனைக்கான புதிய விஷம்

மரண தண்டனைக்கான புதிய விஷம்

முகாம் கைதிகள் விஷம் செலுத்தப்பட்டும் நாஸிக்களால் கொலை செய்யப்பட்டனர். அப்படியாக, மரண தண்டனைக்கான புதிய முறைகளை உண்டாக்க, புதுவகை விஷங்கள் கண்டறியப்பட்டு கைதிகளை வைத்து பரிசோதிக்கப்பட்டது.

செயற்கை கருவூட்டல் சோதனை

செயற்கை கருவூட்டல் சோதனை

பெண் கைதிகள் செயற்கையாக கருவுற பல்வேறு சோதனை முறைகளை நிகழ்த்தியது நாஸி மருத்துவ மற்றும் விஞ்ஞானிகள் குழு. இதற்காக சுமார் 300 பெண் முகாம் கைதிகள் மீது இரக்கமற்ற பரிசோதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது. மிருகத்தனமான மனிதர்கள் பிறக்க வேண்டும் என்பதற்காக சில பெண்களின் உடல்களுக்குள் விலங்குகளின் விந்தணுக்களை செலுத்தியும் சோதனை செய்துள்ளன நாஸிக்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
The Most Disturbing Human Experiments in the History of Nazism. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot