பூமியின் வரலாற்றில் மிகவும் ஆபத்தான கொடூரமான இடம் இது தான் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

By Gizbot Bureau
|

பூமி வரலாற்றில் மிகவும் ஆபத்தான மற்றும் கொடூரமான இடமாக, பூமியின் இந்த பகுதி தான் பல கொடூரமான இராட்சஸ உயிரினங்களுடன் இருந்துள்ளது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். புவியியலாளர் நிசார் இப்ராஹாம் தலைமையிலான சர்வதேச விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வின் முடிவு, பூமியின் மிகவும் ஆபத்தான இடம் எது என்பதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.

பூமியின் மிகவும் ஆபத்தான இடம்

பூமியின் மிகவும் ஆபத்தான இடம்

மனிதர்கள் பல ஆண்டு காலமாகப் பூமியில் வசித்து வருகின்றனர், ஆனால் இன்னும் சில கேள்விகளுக்கு மனிதர்களால் சரியாகப் பதிலளிக்க முடியாது. ஆழமான கடல் எது? மிக நீளமான கடல் இது என்று கண்டறிந்த மனிதர்களுக்கு, பூமியின் மிகவும் ஆபத்தான இடம் எது? என்ற கேள்விக்கான பதில் கிடைக்காமலேயே இருந்து வந்தது.

கேள்விக்கான பதில்

கேள்விக்கான பதில்

பூமியின் வரலாற்றில் மிக மோசமான இடத்தை தேடித் திரிந்த ஆராய்ச்சியாளர் மற்றும் விஞ்ஞானி குழுவிற்கு தற்பொழுது இந்த கேள்விக்கான பதில் கிடைத்துவிட்டது.போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வின்படி, ஆப்பிரிக்காவின் கிடைத்த டைனோசர்களின் எலும்பு படிமங்களின் வயது குறிப்பு தகவல்களை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் பல உண்மைகள் வெளியாகியுள்ளது.

ஐன்ஸ்டீன் சொன்னது உண்மையானது! இரண்டு கருந்துளைகள் ஒன்றிணைத்த வீடியோ ஆதாரம்!ஐன்ஸ்டீன் சொன்னது உண்மையானது! இரண்டு கருந்துளைகள் ஒன்றிணைத்த வீடியோ ஆதாரம்!

100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு

100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு

100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த புதைபடிமங்களை ஆய்வு அந்த பகுதியில் கொடூரமான உயிர் உண்ணும் பிராணிகள், பறக்கும் ஊர்வன விலங்குகள் மற்றும் முதல் போன்ற இராட்சஸ உயிரினங்கள் இருந்ததற்கான தடயங்கள் இருப்பதை உறுதிசெய்துள்ளனர்.100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்களுடன், இந்த வேட்டையாடும் கொடூரமான பல உயிரினங்கள் உயிர் வாழ்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதைபடிவ எலும்புகள் சொன்ன உண்மை

புதைபடிவ எலும்புகள் சொன்ன உண்மை

இந்த அனைத்து புதைபடிவ எலும்புகளும் கண்டறியப்பட்ட பூமியின் மிகக் கொடூரமான இடம் என்று கருதப்படும் இடமாக, தென்கிழக்கு மொராக்கோவில் உள்ள கிரெட்டேசியஸ் பாறை அமைப்புகளின் ஒரு பகுதி கூறப்படுகிறது, இந்த பகுதி கெம் - கெம் குழு என்றும் அழைக்கப்படுகிறது.

ஜௌர்னெல் ஜூக்கிஸ்

ஜௌர்னெல் ஜூக்கிஸ்

டெட்ராய்ட், மொன்டானா, சிகாகோ, லீசெஸ்டர், போர்ட்ஸ்மவுத், காசாபிளாங்கா, மெக்கில் மற்றும் பாரிஸ் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்களால் தயாரிக்கப்பட்ட புதை படிவ நிறைந்த எஸ்கார்ப்மென்ட்டின் முதல் விரிவான மற்றும் முழுமையாக விளக்கப்பட்ட அறிக்கையை ஜௌர்னெல் ஜூக்கிஸ் என்ற பதிப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மே மாதக்குள் 4 கோடி பேரிடம் மொபைல் இருக்காது: அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க ICEA கோரிக்கை!மே மாதக்குள் 4 கோடி பேரிடம் மொபைல் இருக்காது: அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க ICEA கோரிக்கை!

இதுதான் அந்த கொடூரமான பகுதியா?

இதுதான் அந்த கொடூரமான பகுதியா?

இப்ராஹாமின் கூற்றுப்படி, கெம் கெம் குழு பகுதி ஒரு காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மற்றும் மிகவும் ஆபத்தான வேட்டையாடும் டைனோசர்களின் தாயகமாக இருந்துள்ளது. அதேபோல், போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தின் கூற்றுப்படி, தென்கிழக்கு மொராக்கோ சுமார் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு வகையான நீர் வாழ் மற்றும் நிலப்பரப்பு விலங்குகளால் நிரப்பப்பட்ட ஒரு பரந்த நதி அமைப்பைக் கொண்டிருந்தது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

கெம் கெம் குழு

கெம் கெம் குழு

கெம் கெம் குழுமத்தில் இதுவரை மூன்று மிகப்பெரிய இறைச்சி உண்ணும் டைனோசர்களின் புதைபடிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், சேபர்-டூத், டெல்டாட்ரஸ் (Deltadrous), கொடூரமான பறக்கும் ஊர்வன விலங்கான ஸ்டெரோசாரஸ்கள் (Pterosaurs) மற்றும் முதலை போன்ற வேட்டையாடும் விலங்குகள் இந்த பகுதியில் உயிர்வாழ்ந்துள்ளது.

கடல் உயிரினங்களை இரையாக உண்டு உயிர் வாழ்ந்த விலங்குகள்

கடல் உயிரினங்களை இரையாக உண்டு உயிர் வாழ்ந்த விலங்குகள்

அதேபோ, இங்கு வசித்த வேட்டையாடும் விலங்குகள் பெரும்பாலும் கடல் உயிரினங்களை இரையாக உண்டு உயிர்வாழ்ந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த இடம் முற்றிலுமாக மிக பெரிய மற்றும் மாபெரும் மீன் இனங்களால் நிறைந்துள்ளது.

மாபெரும் நன்னீர் சுறா, லங்பிஷ்

மாபெரும் நன்னீர் சுறா, லங்பிஷ்

குறிப்பாககோயிலகந்த் என்ற மீன் வகையும் லங்பிஷ் மீன் வகையும் இன்றைய காலகட்டத்தில் காணப்படும் மீன்களை விட நான்கு முதல் ஐந்து மடங்கு பெரியதாக இருந்திருக்கிறது. அதேபோல், முள் குத்துக்களைப் போன்ற பளபளப்பான பற்களைக் கொண்ட மாபெரும் மகத்தான நன்னீர் சுறா வகையும் இந்த பகுதியில் உயிர் வாழ்ந்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

கொடூரமான நீர்வாழ் விலங்குகள்

கொடூரமான நீர்வாழ் விலங்குகள்

ஆராய்ச்சியாளர்களின் இந்த கண்டுபிடிப்பு, மொரோக்கோ பகுதி முட்டிலுமாக பற்களால் நிரப்பப்பட்ட கொடூரமான நீர்வாழ் விலங்குகள் மற்றும் நிலத்தில் வாழும் உயிரினங்களுடன் செழிப்பான இடமாக இருந்துள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. சுமார் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, ஒருவேளை மனிதர்கள் உணவுச் சங்கிலியின் மேல் தளத்திலிருந்திருந்தால், இந்த இடம் ஒரு உயிர் வாழ மிக அருமையான இடமாக இருந்திருக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

வறண்ட பாலைவனமாகக் காட்சியளிக்க்கும் தற்போதைய நிலை

வறண்ட பாலைவனமாகக் காட்சியளிக்க்கும் தற்போதைய நிலை

பூமி வரலாற்றில் மிக கொடூரமான இடமாக இந்த இடம் தான் இருந்திருக்கிறது என்று அறிவியல் உண்மைகளுடன் விஞ்ஞானிகள் தற்பொழுது நிரூபித்துள்ளனர். 100 மில்லியன் ஆண்களுக்கு முன்பு மிகப்பெரிய நதிகள் பெருக்கெடுத்து ஓடி, பசுமையாகப் பல உயிர் வாழும் இடமாக விளங்கிய இந்த கொடூரமான பகுதி தற்பொழுது வறண்ட பாலைவனமாகக் காட்சியளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
The Most Dangerous Place In The History Of Planet Earth : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X