நிலநடுக்கம் நடந்த போது விண்வெளியிலிருந்து பூமி மீதான பார்வை! விண்வெளி புகைப்படங்கள்!
விண்ணில் இருந்து பார்த்தால் எப்படி இருக்கும் என்று கொஞ்சம் யோசித்து பாருங்கள். உலகை சுற்றி நடக்கும் அனைத்து விஷஸ்யங்களை பல தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் ஊடகங்கள் செய்திகளாக மக்களுக்கு வழங்கிவருகிறது. ஆனால் நாம் இருக்கும் பூமியில், கடந்த வாரம் என்ன நிகழ்வுகள் நடந்தது என்று உங்களுக்கு தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள்.

கடந்த வாரத்தில் நடைபெற்ற சூரிய கிரகணம், நிலநடுக்கம், சூறாவளி போன்ற பல நம்ப முடியாத விண்வெளி சார்ந்த விஷயங்களை விண்வெளி வீரர்கள் விண்ணிலிருந்து படம்பிடித்துள்ளனர். அந்த புகைப்படங்களை இப்பொழுது பார்க்கலாம்.

1. விண்ணிலிருந்து எடுக்கப்பட்ட பேரி வெப்பமண்டல புயல்
நாசா விண்வெளி வீரர் கிறிஸ்டினா கோச், ஜூலை 11 ஆம் தேதி, சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னாள் தாக்கப்பட்ட பேரி வெப்பமண்டல புயலின் மேகங்களை படத்தில் காணலாம். இந்த புயலின் போது லூசியானா மற்றும் மிசிசிப்பி பகுதிகளில் 64 சென்டி மீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2. ஹயாபூசா 2 டச் டவுன்
ஹயாபூசா 2 விண்கலத்தில் அமைந்துள்ள கேமரா, ஜூலை 10 ஆம் தேதி இந்த புபாய்ப்படத்தை எடுத்துள்ளது. ரியுகு என்ற சிறுகோள் மேற்பரப்பில் ஹயாபூசா 2 விண்கலம் தரையிறங்கிய 4 வினாடிகளுக்குப் பிறகு இந்தப் புகைப்படம் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

3. சூரிய கிரகணத்தைக் அருகில் படம்பிடித்த புரோபா -2
ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் புரோபா -2 செயற்கைக்கோள், நான்கு விதமான சூரிய கிரகணங்களைக் விண்வெளியில் கண்டுள்ளது. ஜூலை 2, 2019, அன்று நிகழ்ந்த சூரிய கிரகணத்தை படம்பிடித்துள்ளது. சூரியனுக்கு மிக அருகில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
4. பூகம்பத்தால் ஏற்பட்ட சிதைவு
பாலைவன நகரமான ரிட்ஜெக்ரெஸ்ட்சில், கடந்த வாரம் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது. இந்த நிகழ்வை டோம்ப் செயற்கைக்கோள்கள் ஜூலை 6 ஆம் தேதி விண்ணிலிருந்து படம்பிடித்துள்ளது. பூகம்பத்தால் ஏற்பட்ட சிதைவுகளை இப்படத்தில் காணலாம்.

5. நிலவின் ஒளியில் பூமியின் ஏர்கிளோ
சர்வதேச விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர் எடுத்த இந்த புகைப்படத்தில் "ஏர் க்ளோ" என்று அழைக்கப்படும் பூமியின் வளிமண்டலத்திற்கு நுட்பமான பச்சை ஒளியை நிலவின் ஒலியுடன் படம்பிடித்துள்ளனர்.

6. நட்சத்திர தடங்கள்
விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட மின்னல் புயல்களின் நீண்ட வெளிப்பாடு புகைப்படம் இதோ.

7. சோலார் பிரோமினன்ஸ்
கடந்த செவ்வாய்க்கிழமை ஜூலை 2 ஆம் தேதி அன்று மொத்த சூரிய கிரகணத்தின்போது, சூரியனின் வளிமண்டலத்தை சுற்றி பிரகாசமான-இளஞ்சிவப்பு சோலார் பிரோமினன்ஸ் தெரிந்தன, அதை விண்வெளி வீரர்கள் புகைப்படம் பிடித்துள்ளனர்.
8. செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட தூசி புயல்
ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் (ஈஎஸ்ஏ) மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிட்டர், கடந்த சில மாதங்களாக செவ்வாய் கிரகத்தின் வட துருவத்திற்கு அருகே ஏற்பட்டுள்ள பல தூசி புயல்களைப் கண்காணித்து வருகிறது. மே 29 ஆம் தேதி அன்று நிகழ்ந்த தூசி புயலின் தாக்கத்தை இந்த செயற்கைகோள் படம்பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications