Home
Scitech

உலகின் மறுபக்கத்தில் தலைகீழாக இருக்கும் நிலவு!

"நாம் தெற்கில் பார்க்கும் போது, வடமேற்கு மூலையை ஒப்பிடும் போது, தென்கிழக்கு மூலையில் நிலவின் இருளான "ஓசோனஸ் ப்ரோசெலாரம்" எனும் கிரகணத்தை காண முடியும்" .

நீங்கள் விமானத்தில் ஏறி எதிர் துருவத்தை நோக்கி உலகம் முழுவதும் பயணம் செய்தால், காலநிலை பின்னோக்கி செல்லும் மற்றும் நீங்கள் முழு நிலவை பார்க்கையில் அது சரியான திசையில் இல்லாமல் இருப்பதையும் உணர முடியும்.

உலகின் மறுபக்கத்தில் தலைகீழாக இருக்கும் நிலவு!

இது மட்டுமே நம்பமுடியாத அளவிற்கு விசித்திரமானது அல்ல(ஆனால் இதை ஏன் நாம் முன்னரே உணரவில்லை). ஆனால் நம் கிரகத்தை சுற்றியுள்ள ஆச்சர்யமூட்டும் திடீர்திருப்பங்கள், விண்வெளியை ஆராய முயலும் விஞ்ஞானிகளுக்கு உண்மையில் ஆச்சர்யமான தாக்கங்களை ஏற்படுத்தும்.

வானியல் அறிஞர் ஜேக் கிளார்க்

வானியல் அறிஞர் ஜேக் கிளார்க்

"எங்களுடைய பார்வையில், நமது வட துருவத்துடன் ஒப்பிடும் போது வானமும், நிலவும் 180டிகிரி கோணத்தில் திரும்பியுள்ளது" என்கிறார் ஆஸ்திரேலியாவின் தெற்கு குயின்லாண்ட் பல்கலைகழகத்தை சேர்ந்த வானியல் அறிஞர் ஜேக் கிளார்க்.

"நாம் தெற்கில் பார்க்கும் போது, வடமேற்கு மூலையை ஒப்பிடும் போது, தென்கிழக்கு மூலையில் நிலவின் இருளான "ஓசோனஸ் ப்ரோசெலாரம்" எனும் கிரகணத்தை காண முடியும்" . ஆனால் அது ஏன் இப்படி காட்சியளிக்கிறது. ஒருவர் எதிர்எதிர் துருவங்களில் நிற்கும் போது பூமியின் மேலேயும் கீழேயும் இருப்பார். கீழே உள்ள புகைப்படம் இதை தெளிவாக விளக்குகிறது.

பூமத்திய ரேகைக்கு அருகில்

பூமத்திய ரேகைக்கு அருகில்

இது நிலவின் பிறையையும் நீட்டிக்கச்செய்கிறது. உலகில் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை பொறுத்து பிறையின் வெவ்வேறு சுழற்சிகள் அமையும்.

"அடுத்த முறை உங்களது விடுமுறை பயணத்தை திட்டமிடும் போது,பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள நாட்டை பிறைமதி உள்ள நாளாக தேர்வுசெய்யுங்கள். எனவே நிலவை பார்க்கும் போது சிரிக்கும் முகம் போல தோற்றமளிக்கும்" என்கிறார் கிளார்க்.

180டிகிரி கோணமாறுபாட்டில் இருக்கும்

180டிகிரி கோணமாறுபாட்டில் இருக்கும்

நிலவு மட்டுமே இந்த திசை மாற்றங்கள் நிகழுவதில்லை. நாம் பார்க்கும் அனைத்து நட்சத்திரங்களும் வேறு திசையிலோ அல்லது தலைகீழாகவோ இருக்கும்.

"இதுவும் நீங்கள் பூமியில் எங்கிருந்து பார்க்கிறீர்கள் என்பதை பொறுத்ததே. தென்துருவத்தை பார்க்கும் நட்சத்திர கூட்டம் வடதுருவத்தில் 180டிகிரி கோணமாறுபாட்டில் இருக்கும்" என்கிறார் கிளார்க்.

சமையல் பாத்திரம் போல இருக்கும்

சமையல் பாத்திரம் போல இருக்கும்

ஆஸ்திரேலியாவில் ஓரியன் நட்சத்திர கூட்டம் கடாய்( Saucepan) என அழைக்கப்படும். ஏனெனில் அது பார்ப்பதற்கு மிகப்பெரிய பழைய சமையல் பாத்திரம் போல இருக்கும். ஆனால் உலகின் மறுபக்கத்தில் இருப்பவர்கள் இதை எப்படி பார்ப்பார்கள் என்ற கேள்விக்கு, தெற்கு குயின்லாண்ட் பல்கலைகழகத்தின் ஹார்னர் கூறும் சிறப்பான முறை " தலைகீழாக பாருங்கள்"

காணமுடியாத நட்சத்திரங்களை ஆராய்வது சற்று கடினம்

காணமுடியாத நட்சத்திரங்களை ஆராய்வது சற்று கடினம்

இது வானியல் அறிஞர்கள் மத்தியில் எந்தவித தாக்கத்தை ஏற்படுத்துகிறது? ஏனெனில் அவர்கள் வெளிகிரகங்களில் ஏற்படும் நிறம் அல்லது ஒளி அடர்த்தி போன்ற சிறு மாற்றங்களை கவனித்து வருகின்றனர்.

" பல ஆயிரம் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள அவை உள்ளதால், அவற்றின் அம்சங்களில் இது எந்தவித மாற்றங்களையும் ஏற்படுத்தாது. ஆனால் உலகின் மறுபுறம் உள்ள உங்களால் காணமுடியாத நட்சத்திரங்களை ஆராய்வது சற்று கடினம். அதாவது வடதுருவ பகுதியில் உள்ள ஆய்வாளர் தென்துருவ பகுதிகளை அவரின் வீட்டிலிருந்து ஆராய முடியாது" என்கிறார் கிளார்க்.

பிரபஞ்சத்தின் மர்மங்களை ஆராய அமைந்துள்ளன

பிரபஞ்சத்தின் மர்மங்களை ஆராய அமைந்துள்ளன

இதன்காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளில், ஏன் விண்வெளியில் கூட தொலைநோக்கிகள் நிறுவப்பட்டுள்ளன. துருவங்களை கணக்கில் கொள்ளாமல், ஹவாயின் மவுண்ட் மயூனாவிலிருந்து, குயின்லாண்டின் மவுண்ட் கென்ட் வரை உலகத்தரம் வாய்ந்த தொலைநோக்கிகள், பிரபஞ்சத்தின் மர்மங்களை ஆராய அமைந்துள்ளன"

என்ன இவையெல்லாம் சேர்ந்து உங்களை சிறிது குழப்பிவிடுகிறதா? உலகின் எல்லாபுறமும் தண்ணீர் கீழே தானே செல்கிறது, அது எங்கே என்பதையும் மறந்துவிடாதீர்.

Best Mobiles in India

English summary
The Moon Is Upside Down on The Other Side of The World And It's Freaking Us Out : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X