Home
Scitech

அதிர்ச்சியில் நாசா: உளர் திராட்சை போல சுருங்கும் நிலவு; எங்கு போய் முடியும்?

நிலவு - எவ்வளவுக்கு எவ்வளவு அழகானதோ, அவ்வளவுக்கு அவ்வளவு மர்மமானதும் கூட. பூமியின் இயற்கையான செயற்கைகோள் (சுற்றி வருவதால்) என்று அழைக்கப்படும் சந்திர கிரகமானது, நமது பால்வெளி மண்டலத்தில் உள்ள வேறு எந்த ஒரு நிலவை காட்டிலும் மிகவும் விசித்திரமான ஒன்றாகும்.

துல்லியமான சுற்றுவட்ட பாதை

துல்லியமான சுற்றுவட்ட பாதை

கவராயம் (காம்பஸ்) வைத்து வரைந்தது போன்ற மிகவும் துல்லியமான சுற்றுவட்ட பாதை கொண்ட ஒரே நிலவு, நமது சந்திர கிரகம் தான். இதுபோன்ற சில சுவாரசியமான காரணங்களால் தான், மனித இனத்திற்கு (ஆராய்ச்சியாளர்களுக்கு) நிலவின் மீது பேரார்வங்கள் பல ஏற்பட்டன. அதன் விளைவாகவே அது தொடர்ச்சியான சுழற்சியில் கண்காணிக்கவும் பட்டது, பல வரலாற்று உண்மைகள் கண்டறியவும் பட்டது. அந்த பட்டியலில் மேலுமொரு உண்மை இணைந்துள்ளது. மேலும் இந்த குறிப்பிட்ட உண்மையானது சற்று பீதியளிக்கும் ஒன்றாகவும் உள்ளது.

 உட்புற வெப்பநிலைகள்

உட்புற வெப்பநிலைகள்

சந்திரனின் குளிரூட்டும் உட்புற வெப்பநிலைகள் ஆனது நூறாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு மேல் சுமார் 150 அடி (50 மீ) அளவிலான திடமான நிலப்பரப்பை (லூனார் ஆர்ப்) உருவாக்கியிருக்கின்றன. சந்திரன் உட்புறமானது மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால், ​​சந்திரனின் வெளிப்புறத்தில் "சுருக்கங்கள்" ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு திராட்சை எப்படி மெல்ல மெல்ல சுருங்கி ஒரு உலர்ந்த திராட்சையாக உருமாறுமே அப்படியான ஒரு நிலைபாட்டிற்குள் சந்திரன் உள்ளதாம்.

டெக்டோனிக் தபிழைகள் உருவாகும்

டெக்டோனிக் தபிழைகள் உருவாகும்

இந்த நம்பமுடியாத செயல்முறை ஆனது முதலில் சந்திரனின் நுண்துளை மேற்பரப்பில் விரிசல்களை ஏற்படுத்தும், பின்னர் பிளவுகளை ஏற்படுத்தும், அது நிலவின் டெக்டோனிக் தபிழைகள் உருவாகும். அதன் விளைவாக பிளவுபடுத்தப்பட்ட நிலவின் மேலோடு பகுதிகள் ஆனது மேற்பரப்பின் அண்டை பகுதிகளை நோக்கி நகரும்போது, ​​பூகம்பங்களைத் தூண்டும் அல்லது அதற்கு மாறாக, மூன்க்வாக்ஸ் எனப்படும் நிலவுநடுக்கங்களை உண்டாக்கும்.

சந்திரன் நிலநடுக்கம்

சந்திரன் நிலநடுக்கம்

வாஷிங்டனில் இருக்கும் ஸ்மித்சோனியன் தேசிய விமான மற்றும் விண்வெளி அருங்காட்சியகத்தின் விஞ்ஞானி ஆன தாமஸ் வாட்டர்ஸ் கூற்றின் படி, "இந்த சந்திரன் நிலநடுக்கம் நம்பமுடியாத சக்திவாய்ந்ததாக இருக்க முடியும்."


மேலும் அவர் கூறுகையில்: "நிலவின் இந்த குறைபாடுகள் இன்னமும் செயலில் தான் உள்ளன என்பதை நிரூபிக்கும் முதல் ஆதாரங்களை நாம் பெற்றுள்ளோம். சந்திரன் படிப்படியாக குளிர்ச்சியடைவதால் சுருங்கி கொண்டே வருவதால், நிலவு நடுக்கங்கள் நிகழ சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. இவ்வகை பூகம்பங்களில் சில மிகவும் வலுவானதாக இருக்கும், அதாவது ரிக்ட்ர் அளவில் சுமார் ஐந்து என்கிற புள்ளியை கூட எட்டலாம்."

 டாக்டர் வாட்டர்ஸ்

டாக்டர் வாட்டர்ஸ்

இந்த நம்பமுடியாத கண்டுபிடிப்புகள் ஆனது ஜர்னல் நேச்சர் ஜியோசிசைஸன்ஸ் பத்திரிகையில் வெளியாகி உள்ளது. அப்போலோ விண்கலங்கள் மூலம் சந்திரனில் சேகரிக்கப்பட்ட சீஸ்மோமீட்டர் தரவுகளை ஆராய்ந்து டாக்டர் வாட்டர்ஸ் ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டார். அந்த ஆய்வில், நாசாவின் அப்பல்லோ 11, 12, 14, 15 மற்றும் 16 ஆகியவற்றின் விண்வெளி வீரர்களால் சந்திரனில் சேகரிக்கப்பட்ட சீஸ்மோமீட்டர் தரவுகள் பயன்படுத்தப்பட்டன. ஆய்வின் படி, அப்போலோ 11 இயந்திரம் ஆனது 28 வாரங்கள் என்கிற குறுகிய காலத்திற்குள் மொத்தம் 28 நிலநடுக்கங்களை அளவிட்டது. அந்த நிலநடுக்கங்கள் ஆனது தீவிரத்திற்கு ஏற்றபடி ரிக்டர் அளவுகோலில் 2 முதல் 5 என்கிற புள்ளியை எட்டியுள்ளது.

அப்பல்லோ தரவுகள்

அப்பல்லோ தரவுகள்

புதிய வழிமுறைகளின் உதவியுடன் அப்பல்லோ தரவுகளை மீண்டும் திரும்பிப் பார்த்த பின்னரே, நிலவில் சத்தமின்றி உருவான இந்த சந்திர குறைபாடு கண்டு அறியப்பட்டுள்ளது. டாக்டர் வாட்டர்ஸின் கூற்றின் படி, அப்பல்லோ தரவுகள் ஆனது நிலவு சுருங்கி கொண்டே போவதையும், அது இன்னமும் செயலில் இருப்பதையும் உறுதி செய்கிறது."

 சந்திரன் மட்டும் அல்ல

சந்திரன் மட்டும் அல்ல

சரி சந்திர கிரகம் மட்டும் தான் சுருங்குகிறதா என்று கேட்டால் - இல்லை. நமது சூரிய குடும்பத்தில் சுருக்கத்தின் விளைவுகளை அனுபவிப்பது சந்திரன் மட்டும் அல்ல. ஆம் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் கருத்துப்படி, மெர்குரியிலும் (புதன் கிரகம்) உந்து குறைபாடு இருக்கிறது. சுமார் 1000 கிமீ நீளம் மற்றும் மூன்று கிமீ உயரம் என்கிற அளவில் இருக்கும் இந்த குறைபாடு ஆனது புதனின் சுருங்கி விரியும் தன்மையினாலேயே உண்டாகி இருக்கிறது.


நாசாவின் கூற்றின் படி: "புதனின் பாறைகளானது வெப்பத்தின் போது விரிவடைவதும், குளிரின் போது திடமாவதுமாக உள்ளது. குறிப்பிட்ட சூழ்நிலையில், இப்பாறைகள் உருவாக்கம் பின்னர் முழுமையாக உருகிய போதும் கூட போதுமான அளவிலான வெப்பத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் - புதன் கிரகம் அதன் குறைபாட்டை சந்திக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
The Moon is SHRINKING 'like a raisin' triggering EARTHQUAKES on the Moon : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X