18 மாதங்கள் இருளில் மூழ்கிய நமது பூமி கிரகத்தின் கதை இது.!

65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் டைனோஸர்கள் என்றவொரு இனம் பூமியில் இருந்தது.

|

ஒரு முழு சூரிய கிரகணமானது, பூமியின் குறிப்பிட்ட பகுதியை சிறிது நேரம் இருளில் ஆழ்த்தும். ஆனால் அந்த இருளெல்லாம் - பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு இயற்கை நிகழ்வோடு ஒப்பிடும்போது - ஒன்றுமே இல்லை என்றுதான் கூறவேண்டும்.

18 மாதங்கள் இருளில் மூழ்கிய நமது பூமி கிரகத்தின் கதை இது.!

அந்த நிகழ்வில் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக பூமிக்கான சூரியன் காணாமல் போயிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அது என்ன சம்பவம்.? பூமி கிரகத்திற்கு என்ன நேர்ந்தது.? அது மீண்டும் நடக்குமா.? போன்ற பல கேள்விகளுக்கான பதிலே இந்த தொகுப்பு.!

பெரும்பாலான தொன்மாக்களுடன் சேர்த்து

பெரும்பாலான தொன்மாக்களுடன் சேர்த்து

65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் டைனோஸர்கள் என்றவொரு இனம் பூமியில் இருந்தது. ஒரு மாபெரும் விண்கல் மோதலின் விளைவாக அழிந்த பெரும்பாலான தொன்மாக்களுடன் சேர்த்து டைனோஸர் இனமும் அழிந்தது என்ற தெளிவு உங்களுக்கு இருந்தால் நாம் நேரடியாக பூமியின் அந்த 18 மாத கால இருளுக்குள் நுழையலாம்.

வளிமண்டலத்தில் வீசப்பட்ட துகள்கள்

வளிமண்டலத்தில் வீசப்பட்ட துகள்கள்

ஓவர் மிகப்பெரிய இனமே அழிய காரணமாய் இருந்த அந்த விண்கல் தாக்கத்தின் சக்தி மட்டுமே பூமிக்கு ஒரு பிரச்சினை அமையவில்லை. அதன் மூலம் வளிமண்டலத்தில் வீசப்பட்ட துகள்கள் சுமார் 18 மாதங்கள் வரை பூமி மீது சூரிய ஒளி விழாமல் தடுத்துள்ளது.

மோசமான வெடிப்பு அழிவு

மோசமான வெடிப்பு அழிவு

அதன் விளைவாக பூமி கிரகத்தின் தாவரங்களின் ஒளிச்சேர்க்கைகள் தகர்த்தெறியப்பட்டுள்ளது. அதுதான் உலகம் கண்டிராத மிக மோசமான வெடிப்பு அழிவு நிகழ்வுகளில் ஒன்றாகும். அப்படியான, கிரெடிசியஸ்-பலியோஜீன் (Cretaceous-Paleogene - K-Pg) அழிவு நிகழ்விற்கு காரணமான அந்த விண்கல் குறைந்தபட்சம் 10 கிமீ (6.2 மைல்கள்) பரப்பளவைக் கொண்டதாய் இருந்துள்ளது.

டைனோஸர் இனம் உட்பட

டைனோஸர் இனம் உட்பட

அதன் தாக்கம் தான் புவியியல் வரலாற்றில் அசாதாரண அடுக்குகள் மற்றும் பெரிய சிக்சுலூப் பனிக்கட்டிகளை (மெக்ஸிகோ வளைகுடா) ஏற்படுத்தியுள்ளது. மறுபக்கம் இந்த தாக்கம் டைனோஸர் தொன்மாக்களை மிகவும் அதிக அளவில் அளித்துள்ளது. விஞ்ஞானிகளின் மதிப்பீட்டின்படி, டைனோஸர் இனம் உட்பட அப்போது பூமி கிரகத்தில் வாழ்ந்த 93 சதவிகித பாலூட்டி இனங்களையும் அந்த விண்கல் அழித்துள்ளது.

பூகம்பங்கள், சுனாமிகள், எரிமலை வெடிப்புகள் மற்றும் பரந்த தீ புயல்

பூகம்பங்கள், சுனாமிகள், எரிமலை வெடிப்புகள் மற்றும் பரந்த தீ புயல்

1 கிமீ அளவில் உள்ள அதாவது 0.6 மைல் பரப்பிலான எந்தவொரு விண்கல் மோதலும் பூமியில் - பூகம்பங்கள், சுனாமிகள், எரிமலை வெடிப்புகள் மற்றும் பரந்த தீ புயல்களை தூண்டும் - பூகோள பேரழிவை உண்டாக்கும் பட்சத்தில் 10கிமீ அளவிலான விண்கல் மோதல் பாதிப்பை சற்று கற்பனை செய்துபார்த்து கொள்ளுங்கள்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு விளைவுகள் நீளும்

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு விளைவுகள் நீளும்

பிரளய நிகழ்வுகள் ஓய்ந்த பின்னரும் கூட அடுத்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு அதன் விளைவுகள் நீளும். இது சார்ந்த தெளிவை வளிமண்டல ஆராய்ச்சிக்கான தேசிய மையம் (NCAR) தலைமையின் புதிய ஆய்வொன்றின் கீழ் பெறப்பட்டுள்ளது. அதாவது "நிலத்திலுள்ள பல பெரிய விலங்குகள் அழிவின் உடனடி தாக்கத்தின் கீழ் அழிவை சந்திக்க, கடல்களில் வாழ்ந்த விலங்குகள் அல்லது நிலத்தடி நீரில் வாழ்ந்த உயிரினங்கள் தற்காலிகமாக உயிர்ப்பிழைத்துள்ளன.

தடிமனான போர்வைகள்

தடிமனான போர்வைகள்

பூகம்பங்கள் மற்றும் சுனாமிகள் போன்ற ஆரம்ப விளைவுகளுக்கு பின்னல் என்ன நடந்தது என்பதை கிடைக்கப்பெற்ற விலங்குகளின் மீதங்கள் கொண்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து சூரிய மண்டலத்தின் பெரும்பகுதியைத் தடுக்கக்கூடிய வண்ணம் பூமி கிரகத்தின் மீது ஒரு தடிமனான போர்வைகள் உருவாகியுள்ளதும், அது மேல் வளிமண்டலத்தில் கூரை போல செயல்பட்டுள்ளது என்பது ம் கண்டறியப்ட்டுள்ளது.

முழுமையாக 18 மாதங்கள்

முழுமையாக 18 மாதங்கள்

தாக்கம் ஏற்பட்ட உடனேயே, இரவை விட மிக அடர்த்தியான சூழ்நிலை உருவாகியுள்ளது. காலப்போக்கில் வானம் மெதுவாக தனது இயல்பு நிலைக்கு திரும்பி, பிரகாசமானதாக மாறியுள்ளது. ஆனால் அந்நிலையை அடைய அதாவது சூரிய ஒளி பூமி மேல் பட முழுமையாக 18 மாதங்கள் ஆகியுள்ளது. அதன் பின்பே தாவரங்கள் ஒளிச்சேர்க்கை நிலைக்குத் திரும்பியுள்ளன.

Best Mobiles in India

English summary
The long night: Dinosaur-destroying asteroid darkened Earth for 18 months. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X