சந்திராயன்-2 மூலம் பிற நாடுகளையும் திரும்பி பார்க்க வைக்கும் இஸ்ரோ.!

சந்திராயன் -2 இஸ்ரோ வெற்றிகரமாக ஏவ பல்வேறு பணிகளையும் மேற்கொண்டு வருகின்றது. இந்த பணிக்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் எதிர் கொள்ள வேண்டியுள்ள சாவால்கள் மற்றும் வெற்றிகரமாக பணியை முடிக்க உதவும் கருவிகள் குறி

|

சந்திராயன் -2 இஸ்ரோ வெற்றிகரமாக ஏவ பல்வேறு பணிகளையும் மேற்கொண்டு வருகின்றது. இந்த பணிக்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் எதிர் கொள்ள வேண்டியுள்ள சாவால்கள் மற்றும் வெற்றிகரமாக பணியை முடிக்க உதவும் கருவிகள் குறித்தும் காணலாம்.

சந்திராயன்-2  மூலம் பிற நாடுகளையும் திரும்பி பார்க்க வைக்கும் இஸ்ரோ.!

மேலும், இஸ்ரோ வேறு எந்த நாடும் செய்யாத ஆய்வுகளையும் மேற்கொள்ளாத ஆய்வுகளையும் செய்து சாதனை படைக்கவும் காத்திருக்கின்றது.

அடுத்த மாதம் (ஜூலை 9ம்) தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவ இருக்கின்றது சந்திராயன் 2 செயற்கைகோள். இதுகுறித்து காணலாம்.

ஸ்ரீஹரிகோட்ட விண்வெளி மையத்தில் ஏவுதல்:

ஸ்ரீஹரிகோட்ட விண்வெளி மையத்தில் ஏவுதல்:

சந்திராயன்-2 செயற்கைகோள் அடுத்த மாதம் 9ம் தேதி விண்வெளியில் ஏவப்படுகின்றது.
இதற்காக வரும் 19ம் தேதி பெங்களூர் இஸ்ரோ மையத்திற்கு கொண்டு வரப்படுகின்றது. பிறகு அங்கியிருந்து வரும் 20ம் தேதி ஸ்ரீஹரிகோட்ட ராக்கெட் ஏவுதளத்திற்கு ராக்கெட் மற்றும் விண்கலன் கொண்டு செல்லப்படுகின்றது.

இஸ்ரோ சந்திக்கும் முக்கிய 7 சவால்கள்:

முதல் சவால்:

முதல் சவால்:

பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தூரத்தை மிகச்சரியாக கணிப்பது. இரண்டுக்கும் இடையே 3,844 கிலோ மீட்டர் தூரம் இருந்தாலும், பூமியும் சந்திரனும் சுழன்று கொண்டே இருப்பதால், விண்கலன் இறங்க வேண்டிய இடத்தை மிக சரியாக கணிக்க வேண்டும். நிலவின் ஒவ்வொரு இடத்திலும் ஈர்ப்பு விசை மாறுபடும்.


இதைபோல விண்வெளியல் உள்ள சூரிய கதிர் வீச்சு உள்ளிட்ட அம்சங்களும் விண்கல பாதையில் தடங்கலை உருவாக்கும். இவற்றை மாளித்து வெற்றி காண்பது முதல் சவால்.

இரண்டாவது சவால்:

இரண்டாவது சவால்:

தூர விண்வெளி பயணத்தில் தகவல் தொடர்பை தொடர்ந்து பராமரிப்பது, கையிருப்பில் உள்ள எரிபொருளை சிக்கனமாக கையாள்வதாகும். தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து அனுப்பும் கட்டளை ஓரிரு நிமிடத்தில் தாமத்திற்கு பின்பே விண்கலத்தை சென்று அடையும்.
இந்த இடைவெளியை சரியாக கணித்து தகவல் தொடர்பை முறையாக பராமரிக்க வேண்டும்.

மூன்றாவது சவால்:

மூன்றாவது சவால்:

சுழன்று கொண்டு இருக்கும் நிலாவில் எந்த இடத்தில் தரையிங்குவது என்பதை முன் கூட்டியே மிகச்சரியாக கணிப்பது.

 நான்கவாது சவால்:

நான்கவாது சவால்:

நிலாவின் ஒவ்வொரு இடத்திலும் நிலவும் ஒவ்வொரு விதமான ஈர்ப்பு விசை, அதன் சுற்றி வரும் விண்கலத்தை பாதிக்கும்.

மேலும் 100 கிலோ மீட்டர் உயரத்தில் பறந்து சுற்றி வரும் விண்கலகத்தின் பாதை நெடுகிலும் மாறுபடும் தட்ப வெப்பத்தை மிகச் சரியாக கணிப்பதும் சவாலாகும்.

ஐந்தாவது சவால்:

ஐந்தாவது சவால்:

நிலாவில் தரையிறங்குவது நிலாவில் உள்ள தகவல் தொடர்பு கிடைக்காத இடத்தில் தரையிறங்கினால் மொத்த திட்டமும் பாழாகி விடும்.

இஸ்ரோவை உலகறிய செய்த 4 பச்சை தமிழர்கள்.! பாகிஸ்தான், சீனாவுக்கு ஆப்பு.!இஸ்ரோவை உலகறிய செய்த 4 பச்சை தமிழர்கள்.! பாகிஸ்தான், சீனாவுக்கு ஆப்பு.!

ஆறாவது சவால்:

ஆறாவது சவால்:

நிலாவின் புழுதி விண்கலன் தரையிறங்கும் போதும், அங்கு ஊர்ந்து ஆய்வு செய்யும் போதும் புழுதி பறக்கும். அந்த புழுதி விக்ணல கருவிகளில் படிந்தால் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பது உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படும்.

இஸ்ரோ வரை சாதித்த கொங்கு மகன்: மயில்சாமி அண்ணாதுரையின் மற்றொரு முகம்?இஸ்ரோ வரை சாதித்த கொங்கு மகன்: மயில்சாமி அண்ணாதுரையின் மற்றொரு முகம்?

அத்தோடு கருவிகளின் இயக்கும் பாதிப்பிற்கு உள்ளாகும். ஏழாவது சவால், நிலாவில் ஒரு நாள் என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமம். அங்கு பகல் நேரத்தில் உருவாகும் அதீத வெப்பம், சுற்றுச்சூழலுக்கு ஏற்ப விண்கலத்தின் செயல்பாட்டை தகவமைப்பது இறுதி சவாலாகும்.

13 முக்கிய கருவிகள்  இஸ்ரோ:

13 முக்கிய கருவிகள் இஸ்ரோ:

இந்த சவால்களை எதிர்கொண்டே இஸ்ரோ நிலாவுக்கு விண்கலத்தை அனுப்ப உள்ளது. இந்த விண்வெளி பயணத்தில், 13 முக்கிய கருவிகளை சந்திரயான் -2 விண்கலத்தில் வைத்து இஸ்ரோ அனுப்ப உள்ளது.

எதிரி ரேடாரை நோட்டமிடும் இந்திய சேட்லைட் கதறும் பாக்.-சீனா: மீண்டும் விண்வெளியில் சாதனை.!எதிரி ரேடாரை நோட்டமிடும் இந்திய சேட்லைட் கதறும் பாக்.-சீனா: மீண்டும் விண்வெளியில் சாதனை.!

முக்கிய கருவிகள்:

முக்கிய கருவிகள்:

இதில் நிலாவை சுற்றி வரும் விண்கலத்தில், நிலாவின் தரை பரப்பை முப்பரிமாணத்தில் படம் பிடிக்கும் கேமரா, நிலாவின் பாறைகளை ஊடுருவி ஆராயும் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர், நிலாவில் விழும் சூரிய கதிர்களை ஆராயும் சூரிய எக்ஸ் ரே கண்காணிப்பு கருவி, நிலாவை படம் பிடிக்கும் உயர் தொழில் நுட்ப கேமிரா, தண்ணீர் மூலக்கூறுகளை கண்டறிய உதவும் அகச்சிவப்பு கதிர் வீச்சு கருவி, நிலாவின் புறச்சூழலை ஆராயும் கருவி, நிலாவின் புறவெளியில் காணப்படும் அணுக்களின் தன்மயை ஆராயும் கருவி ஆகியவை இடம் பெற்றிருக்கும்.

 தட்ப வெப்ப நிலையை ஆய்வு:

தட்ப வெப்ப நிலையை ஆய்வு:

இதே நேரத்தில் நிலாவில் தரையிறக்கும் கலத்தில், நிலாவின் புறச்சூழல், அணுக்களின் தன்மையை ஆராயும் கருவி, நிலாவின் தட்ப வெப்பத்தை அளக்கும் கருவி, அதன் துருவங்களில் உள்ள நிலவரத்தை கணிக்கும் கருவி, நிலாவில் விழும் சூரிய கதிரின் வீரியத்தையும், நிலவின் தரையின் தன்மை, மேல் பரப்பில் உள்ள பொருட்கள் ஆகியவற்றை ஆராயும் கருவிகள் இருக்கும்.

எக்ஸ்ரே கருவி மூலம் ஆய்வு:

எக்ஸ்ரே கருவி மூலம் ஆய்வு:

நிலாவில் ஊர்ந்து சென்று ஆராயும் கலத்தில், நிலவின் தரையில் கலந்துள்ள வேதிப்பொருட்களை அடையாளம் காணும் லேசர் மூலம் இயங்கும் ஸ்பெக்ட்ரோ மீட்டர், பாறை மற்றும் மண்ணில் கலந்துள்ள தனிமங்களை பிரித்து அறியும் எக்ஸ்ரே கருவி ஆகிய முக்கிய கருவிகள் இருக்கும்.

இவற்றின் மூலம் நிலாவின் புறச்சூழலிலோ, அதன் தரையிலோ, அல்லது அடியிலோ நீர் மூலக்கூறுகள் உள்ளதா, என்னென்ன தனிமங்கள் அங்கு உள்ளன, தட்ப வெப்பம் எப்படி உள்ளது, நிலாவின் துருவங்களின் நிலவரம் என்ன என்பது உள்ளிட்ட ஆய்வுகளில் இஸ்ரோ ஈடுபட உள்ளது.

Best Mobiles in India

English summary
The Launch Of Chandrayaan-2 Spacecraft Is ISRO : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X