டைனோர்சர்கள் அழிந்த கதை தெரியும், இந்த கிரேட் டையிங் பற்றி தெரியுமா?
உலகின் மிகப்பெரிய அழிவு ஆனது,பல விலங்குகளுக்கு முன்னால் பூமியில் இருந்த தாவரங்களை முற்றிலுமாக துடைத்து விட்டது என்று கூறுகிறது ஒரு புதிய ஆய்வு.
ஆக்கம் உண்டெனில் அழிவும் உண்டு. இந்த கோட்பாடு பூமி எனும் கிரகத்திற்கும் பொருந்தும். அதில் சந்தேகமும் இல்லை, சரியான ஆதாரமும் இல்லை. அதற்கான ஆதாரத்தை தேடும் பொருட்டில் தான், கடந்த காலங்களில் நிகழ்ந்த அழிவு சம்பவங்கள் சார்ந்த பல ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

அப்படியான ஒரு ஆய்வின் கீழ், சிக்கிய ஒன்று தான் - கிரேட் டையிங் (மாபெரும் மரணம்). அதாவது புவியின் மிகப்பெரிய முதல் அழிவு நிகழ்வை பற்றிய ஆதாரமும், அந்த அழிவின் விளைவுகளை பற்றியும் ஆதாரங்கள் கிடைத்து உள்ளது.

சுமார் 252 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு!
உலகின் மிகப்பெரிய அழிவு ஆனது,பல விலங்குகளுக்கு முன்னால் பூமியில் இருந்த தாவரங்களை முற்றிலுமாக துடைத்து விட்டது என்று கூறுகிறது ஒரு புதிய ஆய்வு. இந்த நிகழ்வு ஆனது சுமார் 252 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த அழிவானது சைபீரியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பினாலும், அதன் விளைவாக உருவான நிக்கலாலும் தொடங்கி வைக்கப்பட்டு ஆஸ்திரேலியா வரை சென்று உள்ளது.

முதுகெலும்பு கொண்ட விலங்குகளின் வாழ்க்கை?
அதனால் தான் இது "கிரேட் டையிங்" என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இந்த அழிவானது வரலாற்றில் ஏற்படாத புவிசார்-புவியியல் பேரழிவுகளில் முக்கியமானதாக மற்றும் முதன்மையானதாக கருதப்படுகிறது. இந்த எரிமலை வெடிப்பானது சுமார் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு வளிமண்டலத்தில் கார்பன் மற்றும் மீத்தேனை நிரப்பி வைத்து இருந்ததாம். மேலும் இந்த வெடிப்பினால் 96 சதவிகிதம் கடல் வாழ்க்கை மற்றும் 70 சதவிகிதம் நில அடிப்படையிலான முதுகெலும்பு கொண்ட விலங்குகளின் வாழ்க்கை அழிந்து போனதாம்.

சுமார் 400,000 ஆண்டுகளுக்கு முன்பே!
ஆனால் நெப்ரல்-லிங்கன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வில் - இந்த நிக்கல் விளைவால் - சில ஆஸ்திரேலிய தாவர உயிர்கள் ஆனது பல கடல் இனங்கள் அழிக்கப்படுவதற்கு சுமார் 400,000 ஆண்டுகளுக்கு முன்பே அழிந்து போயிருக்கலாம் என்று கூறுகிறது.

இதற்கு முன்னர் யாரும் இதை கண்டறியவில்லை!
"இது ஒரு பெரிய செய்தி ஆகும், மக்கள் இதை சமிக்ஞை செய்துள்ளனர், ஆனால் இதற்கு முன்னர் யாரும் இதை கண்டு அறியவில்லை. இப்போது எங்களுக்கு ஒரு காலக்கெடு உண்டு," என்கிறார் முன்னணி எழுத்தாளர் ஆன கிறிஸ்டோபர் ஃபீல்டிங். இந்தக் குழு, புதைக்கப்பட்ட மகரந்தம், ரசாயன கலவை மற்றும் பாறை வயது மற்றும் தென்கிழக்கு ஆஸ்திரேலியாவின் மலைப்பகுதிகளில் வண்டல் அடுக்கு ஆகியவற்றை ஆராய்ந்து வருகிறது.

ஆச்சரியம் என்னவெனில்!
இந்த குழு ஆனது சிட்னி பசின் மண்-பாறையில் நிக்கலின் அதிக செறிவுகளைக் கண்டறிந்து உள்ளனர். இதில் ஆச்சரியம் என்னவெனில், குறிப்பிட்ட உறுப்புகள் ஆனது உள்ளூரில் கிடைக்க பெறுவது இல்லை. அதாவது வெளியில் இருந்து வந்து தங்கியுள்ளது. இந்த கண்டுபிடிப்பானது நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் பத்திரிகையில் விவரிக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி, சைபீரிய எரிமலை வெடிப்பையும் தொடர்புப்படுத்தி சுட்டிக்காட்டுகிறது, இந்த தகவலை பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ட்ரேசி பிராங் கூறி உள்ளார்.

நச்சுத்தன்மையை உருவாக்கி இருக்கலாம்!
அந்த எரிமலை வெடிப்பின் மூலம் கிளம்பிய நிக்கல் ஆனது தூசிப்படலாமாக மாற்றப்பட்டிருக்கலாம், அது ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து, ஏகப்பட்ட தாவரங்கள் இருந்த தெற்கு நோக்கி சென்று இறங்கி, நச்சுத்தன்மையை உருவாக்கி இருக்கலாம் என்றும், உலகின் பிற பகுதிகளில் கிடைத்த நிக்கலிலும் இதேபோன்ற பதிவுகள் உள்ளன என்றும் ட்ரேசி பிராங் கூறி உள்ளார்.

பற்றாக்குறையின் விளைவாக!
இந்த நிகழ்வு ஆனது தொடர்ச்சியான சில தூண்டுதல்களை நிகழ்த்தி உள்ளது. அதாவது தாவரங்களின் பற்றாக்குறையின் விளைவாக இறக்கும் தாவரங்கள்,தாவிர உண்ணிகளின் பற்றாக்குறையால் இறக்கும் ஊன் உண்ணிகள், ஏற்கனவே உயரும் கார்பன் டை ஆக்சைடு, அமிலமயமாக்கல் மற்றும் வெப்பநிலைகளால் தள்ளாடும் கலந்த நச்சு வண்டல் ஆகியவைகளை நம் பூமி சந்தித்து உள்ளது.

எச்சரிக்கையாக பார்ப்பது நல்லது!
கிரேட் டையிங்கின் கால அளவு மற்றும் அளவுகோல் ஆனது கிரகத்தின் தற்போதைய சுற்றுச்சூழல் நெருக்கடிகளை விட மோசமாக இருந்த போதிலும், கிரீன்ஹவுஸ் வாயுக்களில் உள்ள கூர்முனைகள் மற்றும் இனங்கள் தொடர்ச்சியாக காணாமல் போவது போன்ற தற்கால ஒற்றுமைகளையும் அது கொண்டு இருந்துள்ளது. ஆக இதை வெறும் ஒரு கண்டுபிடிப்பாக பார்க்காமல், எச்சரிக்கையாக பார்ப்பது பூமிக்கு நல்லது.


Click it and Unblock the Notifications