40 ஆண்டுகளுக்கு முன் நாசா செய்த முட்டாள்தனம் இன்று உலகை அச்சுறுத்துகிறது.!

  வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின், நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் உருவாக்கப்பட்டு, செப்டம்பர் 5 ஆம் தேதி 1977 ஆண்டு இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்கலமாகும்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  வொயேஜர் 1 விண்கலம்

  722 கிலோகிராம் எடையுள்ள இந்த விண்கலம், டிசம்பர் 6 ஆம் தேதி 2018 வரை 41 ஆண்டுகள், 3 மாதங்கள், 1 நாள் காலத்தை விண்வெளியில் நிறைவு செய்துள்ளது. சூரியனில் இருந்து 125 ஒளி ஆண்டு தூரத்தில் சென்று கொண்டிருக்கும் ஒரே விண்கலம் இதுதான். பூமியில் இருந்து மிக அதிக தூரத்திற்குச் சென்ற மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு முதல் விண்கலம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  கோல்டன் ரெக்கார்ட் டிஸ்க்

  வொயேஜர் விண்கலத்தின் தனி சிறப்பு என்னவென்றால், அதில் பொருத்தப்பட்டிருக்கும் கோல்டன் ரெக்கார்ட் டிஸ்க் தான். இந்த கோல்டன் ரெக்கார்ட் டிஸ்க் தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இல் மனித இனத்தைப் பற்றியும் பூமியைப் பற்றியும் பல தகவல்கள் ஃபோனோகிராஃப் பதிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  கோல்டன் ரெக்கார்ட் டிஸ்க் ஏலியன்களின் கைகளில் கிடைக்குமா?

  விண்வெளியில் உள்ள வேற்றுகிரகவாசிகளுக்கு பூமியைப் பற்றிய தகவலைத் தெரிவிக்கும் விதம், தங்கம் பூச பட்ட இந்த 12 இன்ச் ஃபோனோகிராஃப் கோல்டன் ரெக்கார்ட் டிஸ்க் வொயேஜர் விண்கலத்தில் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவபட்டு 41 வருடங்கள் ஆகிவிட்டது. தற்பொழுது சூரிய குடும்பத்தை விட்டு அதிக தூரம் பயணம் செய்து கொண்டிருக்கும் கோல்டன் ரெக்கார்ட் டிஸ்க் ஏலியன்களின் கைகளில் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

  ஏலியன்களுக்கு என்ன செய்தியை மனிதர்கள் அனுப்பியுள்ளனர் என்று தெரியுமா?

  பூமியிலிருந்து ஏலியன்களுக்காக அனுப்பப்பட்ட முதல் தகவல் பரிமாற்றம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்படி பூமியிலிருந்து ஏலியன்களுக்கு என்ன செய்தியை மனிதர்கள் அனுப்பியுள்ளனர் என்று தெரியுமா? வாங்க சொல்றோம். 1977 ஆம் ஆண்டில் இப்படி ஒரு வேலையை செய்தார்களானு ஷாக் ஆகிடுவீங்க.

  பூமியின் தகவல்

  பூமியிலிருந்து அனுப்பட்ட வொயேஜர் விண்கலத்தில் உள்ள இந்த கோல்டன் ரெக்கார்ட் டிஸ்க்கில், பூமியிலுள்ள வாழ்க்கை பற்றியும், கலாச்சாரம் பற்றியும், பூமியில் கேட்ப்படும் சத்தம் மற்றும் படங்கள் கொண்ட தொகுப்பு பதிவு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

  கோல்டன் ரெக்கார்ட் டிஸ்க் கவரில் உள்ள விபரங்கள்:

  இடது மேல் மூலையில் உள்ள படம் ஃபோனோகிராஃப் ரெக்கார்டின் மேல் எப்படி ஸ்டைலஸ் பயன்படுத்த வேண்டுமென்பதற்காகப் வரைபடம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதைச் சுற்றி உள்ள கோடுகள் என்ன வியாண்டியில் பதிவுகள் பிளே செய்யவேண்டும் என்பதற்கான பைனரி விபரங்கள்.

  புகைப்படங்களுக்கான சிக்னல் விபரங்கள்

  வலது மேல் மூலையில் உள்ள படம் டிஸ்கில் உள்ள புகைப்படங்களுக்கான சிக்னல் விபரங்கள். அதன் கீழ் உள்ள அடுத்த படம் 512 செங்குத்து கொடிகளுடன் விவரிக்கும் பிக்சர் ராஸ்டெர் மற்றும் பதிவில் உள்ள முதல் படத்தினம் விபரம். சிக்னல் சரியான முறையில் படமாக மாற்றப்பட்டதற்கான தகவல் தான் முதல் படத்தின் வட்ட வடிவம்.

  பூமிக்கான மேப்:

  இடது கீழ் மூலையில் உள்ள படம் விண்வெளியில் சூரிய குடும்பத்தை அடைவதற்கான 14 வகையான பல்சர் அலைவரிசை கொண்ட மேப்பிற்கான விபரங்கள். வலது கீழ் மூலையில் உள்ள படம் ஹைட்ரஜன் அணுக்களின் அடிநிலை தகவலுடன் கூடிய நிலை மாற்றத் தகவல் பதிவிடப்பட்டுள்ளது.

  4.51 பில்லியின் ஆண்டு வரை அழியாத கோல்டன் டிஸ்க்

  ரெக்கார்ட் டிஸ்க்கின் வெளி கவர் அல்ட்ரா ப்யூர் யுரேனியம்-238 என்பது கதிர்வீச்சுடன் 0.00026 மைக்ரோ செறிவுகள் கொண்டது. ரெக்கார்ட் டிஸ்க்கின் மேல் பூசப்பட்டுள்ள யுரேனியம்-238, அதில் ஏற்படும் சிதைவுகள் மூலம் ஒரு கடிகாரத்தை போல் செயல்படுகிறது. 4.51 பில்லியின் ஆண்டுகளில் கோல்டன் ரெக்கார்ட் டிஸ்க் கவரில் பாதி மட்டுமே சிதைவு ஏற்பட்டிருக்குமென்பது குறிப்பிடத்தக்கது.

  கோல்டன் ரெக்கார்ட் டிஸ்க்கில் உள்ள தகவல்:

  கார்னெல் பல்கலைக்கழகத்தின் கார்ல் சாகன் தலைமையிலான ஒரு குழுவால் 115 படங்கள் மற்றும் பலவிதமான இயற்கை ஒலிகளை கோல்டன் டிஸ்க்கில் பதிவேற்றம் செய்துள்ளனர். அவற்றில் கடல் அலையும், காற்றும், இடியும், பறவைகள், திமிங்கிலங்கள் மற்றும் பிற விலங்குகளின் ஒலிகள் பதிவிடப்பட்டுள்ளது. இதற்காக அவர்கள் வேறுபட்ட கலாச்சாரங்களிலிருந்தும் மற்றும் காலங்களிலிருந்தும் இசைத் தேர்வுகளைச் சேகரித்து 90 நிமிடத்திற்குப் பதிவிட்டுள்ளனர்.

  6000 ஆண்டுகள் பழமையான அக்காடியன் மொழி

  அதுமட்டுமின்றி பூமியில் இருந்து ஐம்பத்து ஐந்து மொழிகளில் வரவேற்கும் வாழ்த்துக்கள் மற்றும் ஜனாதிபதி கார்ட்டர் மற்றும் ஐக்கிய நாட்டின் செயலாளர் வால்டிம்மில் தெரிவிக்க விரும்பிய செய்திகள் கோல்டன் டிஸ்க்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 6000 ஆண்டுகள் பழமையான அக்காடியன் மொழி முதல் வூ என்று அழைக்கப்படும் நவீன சீனா மொழி வறை அனைத்து மொழியின் வரவேற்பு வார்த்தைகளும் ஆடியோ வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  கோல்டன் ரெக்கார்ட் டிஸ்க் உருவாக்கம்:

  பல விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் சேர்ந்து கோல்டன் ரெக்கார்ட் டிஸ்க்கை உருவாகியுள்ளனர். அமெரிக்காவின் தலைசிறந்த முன்னணி நிறுவனங்கள் நாசாவுடன் ஒன்றிணைந்து இந்த கோல்டன் ரெக்கார்ட் டிஸ்க்கை உருவாக்கியுள்ளனர். "To the makers of music - all worlds, all times" என்ற வாசகத்துடன் கோல்டன் டிஸ்க் உருவாக்கப்பட்டு வொயேஜர் விண்கலத்தில் பொருத்தப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்டது.

  ஏலியன்கள் பூமிக்குள் நுழையும்:

  இப்பொழுது வொயேஜர் விண்கலம் கோல்டன் ரெக்கார்ட் டிஸ்க்குடன், விண்ணில் ஏலியன்களை எதிர்பார்த்து பயணம் செய்துகொண்டிருக்கிறது. இன்னும் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு மேல் இந்தத் தகவல் அழியாமல் இருக்குமென்று நாசா உறுதியாகச் சொல்வதைவைத்து பார்க்கும் பொழுது, நிச்சயம் ஏலியன்களின் கையில் கோல்டன் ரெக்கார்ட் டிஸ்க் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏலியன்கள் பூமிக்குள் நுழையும் நாள் நமக்கு மட்டுமே அவர்களைப் பற்றிய தகவல் எதுவும் தெரியாமல் இருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.

  வொயேஜர் விண்கலம் லிங்க்

  பூமியைப் பற்றிய முழு தகவல்களுடன் சூரிய குடம்பத்தை விட்டு வெகு தூரத்தில் ஏலியன் கிரகத்தை எதிர்பார்த்து பயணம் செய்துகொண்டிருக்கும் வொயேஜர் விண்கலத்தின் தற்போதைய இடத்தை அறிவதற்கு இந்த லிங்க் கிளிக் செய்யுங்கள்.

  https://voyager.jpl.nasa.gov/

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  The Golden Record : Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more