Subscribe to Gizbot

சும்மாவே இந்தியாவை கையில் பிடிக்க முடியாது; இது வேறயா.? எதிரி நாடுகள் BE CAREFUL!

Written By:

முதலில் இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணையை பார்த்து உலக நாடுகள் அச்சம் கொள்வது ஏன் என்பதை அறிந்துகொள்ளவோம். பிரம்மோஸ் - ஆனது இரண்டு நிலைகள் கொண்ட திட எரிபொருள் பூஸ்டர் என்ஜீன் கொண்ட ஒரு ஏவுகணையாகும். சூப்பர்சோனிக் வேகத்தில் பாயும் இதன் முதல் நிலை பாய்ச்சலானது இரண்டாம் நிலையில் அவ்வேகத்தில் இருந்து பிரிக்கப்படும்.

சும்மாவே இந்தியாவை கையில் பிடிக்க முடியாது; இது வேறயா.?

இதன் ஸ்டீல்த் டெக்னலாஜி வழிகாட்டி மற்றும் மேம்பட்ட உட்பொதிக்கப்பட்ட மென்பொருளானது ஏவுகணையின் தாக்குதல் சக்தியோடு சேர்த்து எதிரிகளின் பயத்திற்கும் தீனி போடுகிறது.

சும்மாவே இந்தியாவை கையில் பிடிக்க முடியாது; இது வேறயா.?

சூப்பர்சோனிக் வேகத்தில் சுமார் 290கிமீ என்கிற தாக்குதல் தூரம் (அல்லது விமான வரம்ப) கொண்டுள்ள பிரம்மோஸ் ஆனது உலகின் எந்தவொரு ஆயுத அமைப்பாலும் இடைமறிக்கமுடியாத ஒரு ஏவுகணை ஆகும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
அதிக விமான வரம்பு

அதிக விமான வரம்பு

குறைவான ஒளிச்சிதறல், தாக்குதலுக்கான வேகமான முடிவுகளை கையாளும் இந்தியாவின் பிரம்மோஸ் ஆனது உலக நாடுகளின் இதர சப்சோனிக் (ஒலி வேகத்தை விடக் குறைந்த) ஏவுகணைகளுடன் ஒப்பிடும் போது பல மடங்கு சிறப்பானதாகும். அதாவது 3 மடங்கு அதிக வேகம், 1.5 முதல் 3 மடங்கு அதிக விமான வரம்பு (தாக்குதல் எல்லை), 3 முதல் 4 மடங்கு அதிக தேடல் வீச்சு, 9 மடங்கு அதிகமான இயக்க நேரம் கொண்டுள்ளது.

கோடிக்கணக்கான ரூபாய் மிச்சமாகும்

கோடிக்கணக்கான ரூபாய் மிச்சமாகும்

அப்படியான உலகின் அதிவேகமான சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணையான பிரம்மோஸ்-ன் பூஸ்டர் (திட எரிபொருள்) இனி இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளது. இதன் வழியாக கோடிக்கணக்கான ரூபாய் மிச்சமாகும்" என்று கடந்த புதன்கிழமை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Nuclear Weapons : எந்தெந்த நாடுகளிடம் எத்தனை அணுவாயுதங்கள் உள்ளன.? இந்தியாவின் நிலை என்ன.?
ஒப்பந்தம்

ஒப்பந்தம்

சென்னையில் நடந்த பாதுகாப்புத் துறை வளர்ச்சி சந்திப்பின் போது, டி.ஆர்.டி.ஓ நிறுவனம் ஒரு நாக்பூரை சார்ந்த தனியார் நிறுவனத்துடன் பூஸ்டர் தயாரிப்பிற்கான டிஓடி (டிரான்ஸ்பர் ஆப் டெக்னலாஜி) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

ரஷ்யா

ரஷ்யா

இதற்கு முன்னர் டி.ஆர்.டி.ஓ நிறுவனமானது ரஷ்யாவுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து அதன் ஹை எனர்ஜி மெட்டீரியல்ஸ் ரிசர்ச் லேபோரட்டரியில் (High Energy Materials Research Laboratory - HEMRL) பிரம்மோஸ் ஏவுகணைக்கான பூஸ்டரை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு உற்பத்தி

உள்நாட்டு உற்பத்தி

தற்போது வரையிலாக ​​ஆண்டுதோறும் 35 பூஸ்டர்களை இந்தியா இறக்குமதி செய்கிறது. அதிக எண்ணிக்கையிலான ஏவுகணைகளை போர் விமானங்களில் இணைப்பதின் வழியாக இந்த பூஸ்டர் தேவை எதிர்காலத்தில் அதிகரித்து கொண்டே போகும் என்பதை மனதிற்கொண்டு உள்நாட்டு உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்

பட்ஜெட்

உள்நாட்டு உற்பத்தியானது பராமரிப்பு முறையை சரியான நேரத்தில் நிகழ்த்த உதவுவதோடு சேர்த்து செலவுகளையும் கடுமையாக குறைக்கும் என்பதில் சந்தேகமமே வேண்டா. ஏனெனில் ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்திடம் நிகழ்த்தும் இறக்குமதிகளுக்காக, இந்தியா அதன் 15 சதவிகித பட்ஜெட்டை செலவழித்து வருகிறது.

வெற்றி

வெற்றி

இந்த பிரம்மோஸ் ஏவுகணையானது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய விமானப்படையின் சுக்கோயி-30 எம்கேஐ போர் விமானத்திலிருந்து முதல் முறையாக வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு வெற்றிகண்டதென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
The Booster For The World's Fastest Cruise Missile Brahmos Is Now Being Made In India. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot