பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா-33 திட்டத்துடன் ராணுவத்திற்கு உதவும் இஸ்ரோ.!

இஸ்ரோ உளவு செயற்கைகோள் துணையுடன் இந்தியா இரண்டு முறை வெற்றிகரமாக சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும், எல்லையில் தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி வருவதால் ராணுவத்திற்கு பயன்பட

|

பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் எல்லையை மீறி இந்தியாவுக்குள் நுழைந்து அத்துமீறி தாக்குதல் நடத்துக்கின்றனர்.

இதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றது. எல்லை மீறி தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளை தடுக்காமல் பாகிஸ்தான் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வருகின்றது.

இஸ்ரோ உளவு செயற்கைகோள் துணையுடன் இந்தியா இரண்டு முறை வெற்றிகரமாக சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியுள்ளது.

பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா-33 திட்டத்துடன் ராணுவத்திற்கு உதவும் இஸ்ரோ

மேலும், எல்லையில் தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி வருவதால் ராணுவத்திற்கு பயன்படும் விதமாக 33 திட்டங்களை தடால் அடியாக களமிறக்கியுள்ளது.

இதனால் பாகிஸ்தான் மட்டும் இல்லாமல் சீனாவும் கதறி வருகின்றது.

33 செயற்கைகோள் ஏவும் இந்தியா:

33 செயற்கைகோள் ஏவும் இந்தியா:

பாதுகாப்பு படையினருக்கு உதவும் வகையில் ஜிசாட் தொகுப்பு செயற்கைக் கோள்கள் உட்பட 33 புதிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

 ராணுவத்திற்கு 5 செயற்கைகோள்:

ராணுவத்திற்கு 5 செயற்கைகோள்:

பாதுகாப்பு படையினரின் கண்காணிப்பை அதிகரிப்பதற்காக இந்த ஆண்டில் ராணுவ பயன்பாட்டிற்கான 5 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதுதவிர ரிசாட் செயற்கைக்கோள்கள் நான்கையும் கார்ட்டோசெட் 3 என்ற செயற்கைக் கோளையும் இந்த ஆண்டு இஸ்ரோ விண்ணில் செலுத்தும்.

 தீவிரவாதிகளை அழிக்க உதவியது:

தீவிரவாதிகளை அழிக்க உதவியது:

முன்பு அனுப்பிய ரிசாட் செயற்கைக் கோள்களின் உதவியால்தான் 2016ம் ஆண்டில் தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவத்தினர் துல்லியத் தாக்குதல் நடத்தினர். இதே போன்று இந்த ஆண்டில் பாகிஸ்தான் எல்லையில் உள்ள பாலக்கோட்டில் ஜெய்ஷே முகமது தீவிரவாத பயிற்சி முகாம்களை குண்டு வீசி அழித்ததற்கும் இந்த செயற்கைக் கோள் அனுப்பிய வரைபடம் மற்றும் தகவல்கள் காரணமாக கூறப்படுகிறது.

 33 திட்டம் நிறைவேறுகிறது:

33 திட்டம் நிறைவேறுகிறது:

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரண்டு செயற்கைக் கோள்களை கண்காணிப்புக்காக இஸ்ரோ செலுத்தியது. இதில் ஒன்று ஏசாட் ஏவுகணை சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேலும் புதிய செயற்கைக் கோள்களை செலுத்த உள்ளது. இது குறித்து பேசிய இஸ்ரோ தலைவர் கே.சிவன், இந்த ஆண்டு 33 திட்டங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாக கூறினார்.

 எதிரிகளை துல்லியமாக தாக்கும்:

எதிரிகளை துல்லியமாக தாக்கும்:

மே மத்தியில் பி.எஸ்.எல்.வி சி46 ராக்கெட் ரிசாட் 2 பி என்ற செயற்கைக்கோளையும், ஜூன் மாதத்தில் பி.எஸ்.எல்.வி சி 47 ராக்கெட் மூலம் கார்ட்டோசாட் 3 செயற்கைக் கோளையும் விண்ணில் செலுத்த உள்ளதாக தெரிவித்தார். எதிரிகளின் ஆயுதங்கள், பதுங்கு குழிகள் போன்றவற்றை துல்லியமாக அறிய இந்த செயற்கைக் கோள் உதவும் என்றும் சிவன் தெரிவித்துள்ளார்.

ஜிசாட் செயற்கைகோள்:

ஜிசாட் செயற்கைகோள்:

இதே போன்று செப்டம்பர் மாதம் முதல் புதிய ஜிசாட் தொகுப்பு செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. தற்போதுள்ள ஜிசாட் செயற்கைக் கோள் ஒரு நிலப்பகுதியை 22 நாட்களுக்கு ஒருமுறைதான் படம் எடுத்து அனுப்பும்.

சந்திராயன் 2 ரெடி:

சந்திராயன் 2 ரெடி:

ஆனால் இந்த புதிய ஜிசாட் தினமும் அவ்வாறு அனுப்ப முடியும். ராணுவ செயற்கைக் கோள்கள் தவிர இந்த ஆண்டில் சந்திராயன் 2 செயற்கைக்கோளையும் விண்ணில் செலுத்த உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

 கதறும் பாக்கிஸ்தான்-சீனா:

கதறும் பாக்கிஸ்தான்-சீனா:

இந்நிலையில் இந்தியாவின் நிலைபாடுகள் சற்றுவேகமாக வளர்ந்து கொண்டு செல்வதால், பாகிஸ்தானும், சீனாவும் தற்போது கதறும் நிலைக்கு உள்ளாகியுள்ளன.
மேலும், இது தீவிரவாதிகளை துல்லியமாக இந்தியா தாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Best Mobiles in India

English summary
the announcement was made by isro chairman k sivan to announce that 33 projects will be implemented this year : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X