பண்டைய கிரேக்கர்கள் நம்பமுடியாத கணிப்புகள்; புட்டுப்புட்டு வைக்கும் அமெரிக்கர்!
வரலாற்று பக்கங்களை புரட்டினால் அதில் பண்டைய கிரேக்கர்களின் பெயர்களை அதிகம் காணலாம். இன்னும் சொல்லப்போனால் அவர்கள் வரலாறு முழுவதும் பல விஷயங்களில் சிறந்து விளங்கினர் என்பது தெரிய வரும்.
வரலாற்று பக்கங்களை புரட்டினால் அதில் பண்டைய கிரேக்கர்களின் பெயர்களை அதிகம் காணலாம். இன்னும் சொல்லப்போனால் அவர்கள் வரலாறு முழுவதும் பல விஷயங்களில் சிறந்து விளங்கினர் என்பது தெரிய வரும். நம்பமுடியாத கட்டிடக்கலையில் இருந்து வலிமை வாய்ந்த வீரர்கள் மற்றும் புரட்சிகர சிந்தனையாளர்கள் வரை என பண்டைய கிரேக்கர்கள் இந்த உலககிற்கும், அதன் வாழ்வியலிற்க்கும் பெரும் பங்கை ஆற்றி உள்ளனர்ஏ என்பதில் சந்தேகமே இல்லை.

இருந்தாலும் கூட கிரேக்கர்களை பற்றி நாம் அறிந்ததும், வரலாற்றில் பதிவாகி இருப்பதும் மிக குறைவு தான். அவர்களின் பங்கீடு இன்னும் அதிகம் என்கின்றனர் சில ஆராய்ச்சியாளர்கள். அந்த அடிப்படையின் கீழ் புதிதாக வெளியிடப்பட்ட புத்தகம் ஒன்றின் படி, பூர்வ கிரேக்கர்கள் செயற்கை நுண்ணறிவு, கொலை செய்யும் நோக்கம் கொண்ட சுயமாக ஓடும் வாகனங்கள் ஆகியவற்றின் எழுச்சியை கணித்துள்ளது.

தொழில்நுட்பங்கள்
சரித்திர ஆசிரியர் டாக்டர் அட்ரியென் மேயரின் படி, பண்டைய கிரேக்க மொழியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே நாம் இப்போது பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. டாக்டர் மேயரின் விளக்கத்தின் படி, கிரேக்க கடவுளான ஹெபீஸ்டஸ் வடிவமைப்பின் போது உருவாக்கம் பெற்ற கணக்கில் அடங்காத மெஷின்களின் கண்டுபிடிப்பு மற்றும் உலோக வேலைப்பாடு ஆனது, உண்மையில் வரும் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித உருவிலான ரோபோக்களின் எழுச்சியின் ஆரம்ப முன்கணிப்புகளாக இருந்துள்ளன.

ஆர்கோனட்ஸ், மெடியா
மேலும் டாக்டர் மேயரின் விளக்கங்கள் மற்றும் வாதங்கள் அனைத்துமே ஹெபீயஸையே சுற்றியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. கிரேக்கர்களின் தானியங்கி சார்ந்த கணிப்பை ஜேசன் மற்றும் ஆர்கோனட்ஸ், மெடியா, டயடாலஸ் மற்றும் பிரோமெடியஸ் ஆகியவற்றை விவரிக்கும் தொன்மவியல்களில் நாம் அதிகம் (வாசிக்கலாம்) காணலாம்.

'வெண்கல கொலையாளி ரோபோ'
மேலும் கிரேக்க புராணத்தின் படி, கிரீக் மற்றும் பண்டோரா தீவுகளை தலாஸ் என்னும் பலமான 'வெண்கல கொலையாளி ரோபோ' தான் பாதுகாத்து வந்தது என்கிற குறிப்பையும் டாக்டர் மேயர் குறிப்பிட்டு உள்ளார், இந்த இடத்தில தான் கிரேக்கர்களையும் போஸ்டன் டைனமிக்ஸ் நிறுவனத்தையும் டாக்டர் மேயர் ஒப்பிட்டு பார்க்கிறார்.

மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி
போஸ்டன் டைனமிக்ஸ் என்பது 1992 ஆம் ஆண்டில் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜிஸில் இருந்து ஒரு சுழற்சிக்காக நிறுவப்பட்ட ஒரு அமெரிக்க பொறியியல் மற்றும் ரோபாட்டிக்ஸ் வடிவமைப்பு நிறுவனம் ஆகும். தற்போது இது கொலை செய்ய தயங்காத கில்லர் ரோபோட்களை வடிவமைத்து தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தலாஸ்
கிரேக்க புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தலாஸ் ('Τάλως') என்னும் கில்லர் ரோபோட் தான், மனித இதிகாசத்தின் முதல் 'ரோபோ-போன்ற' உயிரினமாக கடுத்தப்படுகிறது. டாக்டர் மேயரால் விளக்கப்பட்டதைப் போல, இந்த ரோபோ ஆனது மனிதகுலத்தின் மீது நித்திய துன்பத்தை வெளிப்படுத்துவதற்காகவே உருவாக்கம் பெற்றுள்ளது.

பண்டைய கனவு தொழில்நுட்பம்
இது மட்டுமின்றி அவரது, 'கடவுள்கள் மற்றும் ரோபோக்கள்: தொன்மங்கள், இயந்திரங்கள், மற்றும் பண்டைய கனவு தொழில்நுட்பம்' என்னும் புத்தகத்தில், பண்டைய கிரேக்கர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு பின்பு உருவாகப்போகும் தொழில்நுட்பத்தை அன்றே எப்படி கணித்துள்ளார்கள் என்பதற்கு ஏராளமான உதாரணங்களை கொடுத்து உள்ளார்.

பூர்வ கிரேக்க நாகரிகத்தை ஆராயும் போது
டாக்டர் மேயரின் கருத்துப்படி, பண்டைய கிரேக்கர்கள் குறிப்பிட்ட தொழில்நுட்பம் ஆனது எப்படி செயல்படும் என்பதை அறிந்திருக்கவில்லை என்றாலும் கூட, அவர்கள் வருங்கால சமூகத்தில் அதன் எழுச்சிக்கு கணித்து இருந்தனர். பூர்வ கிரேக்க நாகரிகத்தை ஆராயும் போது, தானாக இயங்கும் வாகனங்கள் பற்றிய துப்புகளும் கிடைத்தனவாம். அதாவது வாகன ஓட்டிகள் இல்லாத வாகனங்களின் சான்றுகள் காணப்பட்டு உள்ளன.

ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தை போன்றே இருக்கிறது
உதாரணத்திற்கு, ஒடிஸியஸின் கப்பலோட்டி இல்லாத ஃபாய்சியன் கப்பல்களை கூறலாம். இந்த கப்பல் இவன் இத்காவுக்கு வீடு திரும்ப வழிநடத்தியதாக கூறப்படுகிறது. டாக்டர் மேயரின் கூற்றுப்படி, இன்றும் நாம் பயன்படுத்தி கொண்டிருக்கும் ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தை போன்றே இருக்கிறது என்று கூறினால் சந்தேக படாமல் இருக்க முடியவில்லை.

டாக்டர் மேயர்
ஹெபீஸ்டஸ், தங்கத்தால் பொறிக்கப்பட்ட இயந்திர மனித உருவங்களைக் கட்டியெழுப்பினார். அவைகள் கற்றல் மற்றும் திறமை ஆகியவற்றை கொண்டிருந்ததாக டாக்டர் மேயர் விளக்குகிறார். அந்த தங்க இயந்திரங்கள் தான், இன்றைய சுய-கற்றல் இயந்திரங்களுக்கான ஆரம்ப புள்ளி என்கிறார் டாக்டர் மேயர். மேலும், ஹோமரின் காவிய கவிதையில், தானாக இயங்கும் சக்கரங்கள் ஆனது தேன் மற்றும் அம்ப்ரோஸியாவை எடுத்துச் செல்கிறது என்று குறிப்பிடப்பட்டு உள்ளத்தையும் டாக்டர் மேயர் சுட்டிக்காட்டுகிறார்.


Click it and Unblock the Notifications