கோபி பாலைவனத்தில் பறந்த ராக்கெட் : வைரல் வீடியோ.!
விண்வெளி துறையில் சீனா முன்னேற்றம் அடைந்து வருகிறது. ‘லாங் மார்ச்-9’ என்ற அதிக சக்தி படைத்த ராக்கெட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
கோபி பாலைவனம் என்பது சீனத்தின் வடக்குப் பகுதியிலும் மங்கோலியாவின் தெற்குப் பகுதியிலும் பரவியுள்ள ஒரு பெரிய பாலைவனம் ஆகும். குறிப்பாக உலகின் மிகப் பெரிய பாலைவனங்களுள் ஒன்றான இது ஏறத்தாழ 1,3000, 000 சதுர கிலோ மீட்டர் பரந்து காணப்படுகிறது.

இதன் பெரும் பகுதி மணற்பாங்காக இல்லாமல் கற்பாங்கானதாகவே காணப்படுகிறது. பல முக்கியமான தொல்லுயிர் எச்சங்கள் இங்கேயே கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றுள் முதல் டைனோசர் முட்டையும் அடங்கும்.

வீடியோ
தற்சமயம் இந்த கோபி பாலைவனம் பகுதியில் உள்ள ராக்கெட் ஏவுதலத்தில் இருந்து ஒரு ராக்கெட் அனுப்பப்பட்டுள்ளது,குறிப்பாக வலுவான எரிபொருள் கொண்டு ராக்கெட் சென்ற 200 விநாடிகளின் ஆரம்ப தருணங்களைக் காண்பிக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சீனா
சீனாவின் OneSpace என்ற ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இது விண்வெளியில் திடமான எரிபொருளை கொண்டு பறந்தது, மேலும் இது இறுதியில் 21.7 மைல் நீளமான உயரத்தை அடைந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

140 டன் எடை
விண்வெளி துறையில் சீனா முன்னேற்றம் அடைந்து வருகிறது. ‘லாங் மார்ச்-9' என்ற அதிக சக்தி படைத்த ராக்கெட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி நாசாவை மிஞ்சும் வகையில் 140 டன் எடையை சுமந்து செல்லும் வகையில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் ராக்கெட்டை சீனா தயாரித்து வருகிறது.

2030-ம் ஆண்டில்
இந்த ராக்கெட் 10 மீட்டர் அகலம் கொண்டது. 4 சக்தி வாய்ந்த ‘பூஸ்டர்'கள் பொருத்தப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தலா 5 மீட்டர் அகலம் கொண்டவை. இது பூமியின் கீழ்மட்ட சுற்று பாதையில் 140 டன் எடையை சுமந்து செல்லும் திறன் படைத்தது. இந்த ராக்கெட் வருகிற 2030-ம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. சீன தொழில்நுட்ப அகாடமி இதை உருவாக்கி வருகிறது.


Click it and Unblock the Notifications