திகைப்பூட்டி புதிர் போடும் ஏலியன்கள்.! நாம் அறியாத விஷயங்கள்.!

|

ஏலியன் ஆய்வாளர்கள் பலர் அவைகள் நம்மை உயர் தொழில் நுட்பம் வாயிலாகவும் தொடர்ந்து தொடர்பு கொள்கிறார்கள் என்கிறார்கள்.

ஆண்டு தோறும் பல காஸ்மிக் சிக்னல்களை நாம் பெற்று கொண்டு இருக்கின்றோம் . பிக் பாங் நேரத்தில் உண்டான சிக்னல்கள் கூட இன்றைய சாதாரண தொலை காட்சி மூலம் கிரகிக்க படுகிறது . டிவி யில் திடீரென தோன்றும் சில புள்ளிகள் ஹிஸ் சப்தம் அது தான் .

திகைப்பூட்டி புதிர் போடும் ஏலியன்கள்.! நாம் அறியாத விஷயங்கள்.!

ஆனால் இப்படிபட்ட பல காஸ்மிக் சிக்னல்களில் பல அடையாளம் தெரியாத இனம் காண முடியாதவை. சாதாரணமாக நட்சத்திரங்களிலோ பிளாக் ஹோலிலோ உண்டாகாத அந்த மர்ம சிகனல்கள் எங்கிருந்து எப்படி வருகிறது என்பதை அறிய முடியாதவை . சிலர் அதை இணை பிரபஞ்சத்தில் இருந்து வருகின்றன என்கிறார்கள் சிலர் அதை வேற்றுகிரக வாசிகளின் சிக்னல் என்கிறார்கள்.

அப்படி பட்ட சந்தேக சிக்னல்களில் சங்கேத சிக்னல் ஒன்றை பற்றி நீங்கள் கேள்வி பட்டு இருப்பீர்கள் அது தான் 1977 இல் பதிவு செய்ய பட்ட wow சிக்னல்.

நாள் முழுதும் பல வகையான கண்ணுக்கு தெரியாத கதிர்களை ரேடியோ சிக்னல்களை பூமி உள்வாங்கி கொண்டு இருக்கிறது அப்படி பட்டதில் ஏதாவது பூமி சாராத அல்லது விசித்திரமான வேற்றுகிரக சிக்னல் வந்தால் அதை பதிவு செய்ய அமைக்க பட்டது தான் Ohio State University யின் Big Ear radio telescope .

 வாவ் சொன்ன ஏலியன்கள்:

வாவ் சொன்ன ஏலியன்கள்:

அது குறிப்பாக 1420 megahertz அதிர்வெண்ணில் வரும் சிக்னல்களை உள்வாங்கும் படி தயார் செய்ய பட்ட ரேடியோ டெலஸ்கோப் ஆகும் .(1420 mhz என்பது ஹைட்ரஜன் வெளியிடும் அதிர்வெண் ஆகும் மேலும் நமக்கு தெரியும் பிரபஞ்சம் எங்கும் நீக்க மற நிறைந்து இருப்பது ஹைட்ரஜன் தான் என்று )

1977 ஆம் வருடம் ஆகஸ்ட் 15 இல் jerry ehaman என்பவர் அங்கே ஒரு ரெடியோ சிக்னலை பதிவு செய்தார் அது மிக வலிமையான சிக்னலாக 72 வினாடிகள் நீடித்தது . அதை டீகோட் செய்து சாதாரண எழுத்தாக மாற்றி பார்த்த போது அது "wow "என ஆங்கிலத்தில் கிடைத்தது . மேலே இருந்து நமக்கு யாருப்பா வாவ் னு சிக்னல் அனுபறது என்று விஞ்ஞானிகள் சுறுசுறுபானார்கள். இது எதோ ஏலியன் அனுப்பிய சிக்னல் தான் என்றார்கள்.

40 ஆண்டுகள் கழித்து அதை ஆராய்ந்த டீம் ஒன்று அதற்கான விடையை கண்டு பிடித்து விட்டதாக சொன்னார்கள் அந்த அலைவரிசையில் அந்த சிக்னலை வெளியிட்டது ஒரு வால் நட்சத்திரம் என்றார்கள். அதை இரண்டு மூன்று முறை மறு பதிவு செய்து உறுதி செய்தார்கள் ஆனால் மிக சரியாக அந்த வால் நட்சத்திரம் wow என்று ஏன் சிக்னல் கொடுத்தது மேலும் அன்றைய தினம் அது அதற்கு மேல் ஏன் மீண்டும் சிக்னலை கொடுக்க வில்லை போன்ற கேள்விக்கு அவர்களிடம் சரியான விடை இல்லை.

ஏலியன் நமக்கு சிக்னல் கொடுப்பது இருக்கட்டும் நாம் ஒரு பக்கம் ஏலியனுக்கு சிக்னல் கொடுத்து கொண்டிருக்கின்றோம் தெரியுமா ? பூமியில் இருந்து இது வரை "மிக அதிக தொலைவு சென்ற மனிதனால் படைக்க பட்ட பொருள்" என்ற பெருமை கொண்ட வாயெஜெர் 1 என்ற விண்கலத்தில் நாம் ஒரு காரியத்தை செய்து வைத்து இருக்கின்றோம் அதில் உள்ள தங்க டிஸ்கில் 24 மணிநேரமும் ஒலிபரப்பாகும் படி சிக்னலை வைத்து இருக்கிறோம். மேலும் அதில் பூமியில் உள்ள பல வகை ஒலிகள் உதாரணமாக கடல் அலை சப்தம் ,பறவை சப்தம், குழந்தை அழும் குரல் ,அமெரிக்க ப்ரேஸிடெண்ட் பேச்சு இப்படி பலதையும்

பதிவு செய்து "கேட்க காது உடையவன் கேட்கட்டும் "என்ற பைபிள் வசனம் போல அநாமத்தாக அனுப்பி இருக்கின்றோம் .

இருட்டில் கல்லெறியும் முயற்சி தான் இது என்றாலும் நம்மை போல ஏலியனை தேடும் ஏலியன் யாரவது அதை பார்க்கும் பட்சத்தில் கேட்கும் பட்சத்தில் நம்மை தொடர்பு கொள்வான் என்று தான் இந்த ஏற்பாடு.

ஏலியன்களின் அடையாளம்:

ஏலியன்களின் அடையாளம்:

Alien பற்றி பேசும் போது von daniken என்ற ஆய்வாளரை பற்றி வெகு நிச்சயமாக நாம் குறிப்பிட்டாக வேண்டும்.

ஆதி காலத்தில் பூமியில் ஏலியன்கள் நடமாட்டமும் ஆதிக்கமும் இருந்தது என்று நம்பிய அவர் அது சார்ந்த ஆய்வுகளில் இறங்கிய போது பல அதிசய தக்க உண்மைகளை கண்டு கொண்டார். குறிப்பாக ஏலியன்கள் பூமிக்கு வந்ததை துளியும் நம்பாதவர்கள் அவரது ஆதாரங்களையும் ஆய்வு அறிக்கையும்

பார்த்த பின் வாய் அடைத்து போனார்கள்.

நம் நாட்டில் நாம் பண்டைய வரலாறை செப்பேடுகளில் கல்வெட்டில் தேடுவது போல அவர் ஏலியன் வருகையை பண்டைய காலத்து கட்டிடங்கள் ,கோவில்கள் , சிற்பங்கள், ஓவியங்கள், புராணங்களில் தேடினார் அதுவும் உலகம் முழுவதும் . அதில் அவர் கண்டு கொண்ட ஒரு விஷயம் மத வாதிகளிடையே பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியது. மத நூல்களில் சொல்ல பட்ட தேவ தூதர்கள் எல்லாம் ஏலியன்களாக இருக்கலாம் என்றார். காரணம் அவர் உலகமெங்கும் உள்ள பண்டைய மத நூல்கள் .

புராணங்களில் ஒரு ஒற்றுமையை கவனித்தார். அவை எல்லாவற்றிலும் ஒரே மாதிரியாக ஏலியன் வருகையை பற்றிய தகவல் இருப்பதை கண்டு ஆச்சர்யம் அடைந்தார் அவைகள் வெவேறு பெயர்களில் குறிப்பிட பட்டு இருந்தன சிலதில் தேவர்கள் என்று சிலதில் கந்தவர்கள் என்று சிலதில் ஏஞ்சல்கள் என்று. அவை அனைத்திலும் நிறைய ஒற்றுமை இருபதை கண்டார் .

அவர்கள் மந்திரம் போட்டது போல சூப்பர் மேன் போல பறப்பது இல்லை. அவர்கள் வந்து செல்ல நெருப்புக்கும் நெறய சப்தம் எழுப்பும் வாகனம் தேவை பட்டது. அவைகள் வானத்தில் இருந்து வரும் போது மக்கள் பார்த்த வர்ணனைகள் நெருப்பு கக்கி செல்லும் விதம் இன்ஜின் போல நெருப்பு உமிழும் காட்சி இவைகளை பார்த்து அவருக்கு ஒன்று தோன்றியது. பறந்து வந்து செல்ல இவைகள் எல்லாம் கடவுளுக்கு அவசியமே இல்லையே. பிறகு அச்சர்யமாக தான் கண்டு கொண்டதை உலகிற்கு உரக்க சொன்னார்.

"அட வந்தது கடவுள் எல்லாம் இல்லை அதுங்க எல்லாம் வேற்றுகிரக வாசிங்க" அவர் பல மதவாதிகள் சாபத்திற்கு ஆளானலும் அவர் ஒரு நாத்திகர் அல்ல மிகவும் கடவுள் நம்பிக்கை கொண்ட தவறாமல் பூஜை செய்யும் ஒரு ஆள் அவர்.

அவர் சொன்னது எல்லாம் கடவுளை பற்றி அல்ல கடவுள் தூதர்கள் என்று நாம் அழைப்பது வேற்றுகிரக வாசிகளை என்பதை தான் அவர் சொன்னார். இதை குறித்து ஆராய்ந்து பல ஆதாரங்களை கொண்டு 1968 இல் அவர் எழுதிய "chariots of the god" புத்தகம் பல பெயரை இந்த துறையில் ஆர்வம் கொள்ள செய்தது. அதன் பிறகு பல வருடம் இந்த துறையில் கொஞ்சம் ஆழமாக அவர் இறங்கி தேடிய தேடல் அதிர்ச்சிகரமான பல உண்மைகளை கொண்டு வந்தது.

லேசர் தொழில்நுட்பம் வைத்து இருந்த ஏலியன்கள்:

லேசர் தொழில்நுட்பம் வைத்து இருந்த ஏலியன்கள்:

அவர் பல இடங்களில் இக்காலத்தாலும் கட்ட முடியாத தொழில் நுட்பதை பயன்படுத்தி கட்ட பட்ட பல கட்டிட அமைப்பை கண்டார். அதில் சில ராட்சத எடை கொண்ட பாறைகள் . சில வெட்ட முடியாத லேசர் வெட்டுகள், பண்டைய காலதில் இங்கிருந்த தொழில் நுட்பத்திற்கு சம்பந்தபடாமல் இருப்பதை கண்டார்.

உதாரணமாக ஒரு இடத்தில் ஏதோ பிளாஸ்டிக்கை உருகி வைத்து ஒட்டியதை போல பாறைகளை சூடாக்கி ஒட்டி ஒரு சுவர் செய்யப்பட்டிருந்ததை பார்த்தார் . அவ்வளவு டிகிரி சூட்டை உண்டாகும் கருவி அன்றைய காலத்தில் எப்படி வந்தது ? மாயன் கல்லறை ஒன்றில்" kinich janab pacal " என்பரின் கல்லறையில் செதுக்கி வரைய பட்டிருந்தது சித்திரம் ஒன்றை அவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது . அதில் அங்கே பண்டைய காலத்தில் வருகை புரிந்த "அவர்'' ராக்கெட் மாதிரி இயந்திரத்தை ஓட்டி வானதிற்கு செல்வது செதுக்க பட்டிருந்தது. (மூக்கில் ஆக்சிஜன் சப்ளை கூட ) நான் சொன்னவை வெறும் "மாதிரிகள்" தான். இப்படி பட்ட ஆதாரங்கள் அவரிடம் ஏக்கச்சமாக உண்டு.

பிரமிட் போன்ற கட்டிடத்தை மனிதன் கட்டினான் என்பதை அவர் மறுக்க வில்லை ஆனால் ஏலியன் தனது அறிவை அவர்களுக்கு கொடுத்து கட்ட வைத்தது என்றார். பல கோடி ஆண்டுகள் பரினாம வளர்ச்சியில் மந்தமாக வளர்ச்சி கொண்ட உயிரினம் சில ஆயிரம் ஆண்டுகளில் இவ்வளவு அறிவு திறன் உடன் வானில் பயணம் செல்லும் அளவு வளர்ந்தது தற்செயலானது அல்ல என்கிறார் அவர். அவர் பார்வையில் ஏலியன்கள் வில்லன்கள் அல்ல நமக்கு அறிவை பரிசளித்த தேவ தூதர்கள். (அவர் கண்டு பிடிப்பை பற்றி விவரமாக ஹிஸ்ட்ரி டிவி சேனலில் வந்த anciant aleans சீசன் 5 இல் தேடி பாருங்கள் )

ஏலியன்களின் உருவம்:

ஏலியன்களின் உருவம்:

இந்த ஏலியன்கள் உண்மையில் பார்க்க எப்படி இருக்கும் என்று என்றாவது யோசித்தது உண்டா... ஹாலிவூட் புண்ணியத்தில் பல வகை ஏலியன்களை நாம் கற்பனை பண்ண முடிகிறது .. பிரடேட்டர் படத்தின் ஏலியன் ஒருவகை என்றால் alien படத்தின் ஏலியன் ஒரு வகை.

அவதார் , எட்ஜ் ஆப் டுமாரோ, ஜான் கர்டர், ட்ரான்ஸ்பார்மர், சூப்பர் மேன், அண்டர் தி ஸ்கின், ஸ்டார் வார், இண்டிபெண்டன்ஸ் டே , ஈடி , மென் இன் பிளாக், ப்ரோமித்தியஸ், தி அரைவல், ரிட்டிக் .. இப்படி பல கணக்கற்ற படங்களில் தங்கள் கற்பனைக்கேற்ற ஏலியன்கள் பல வடிவங்களில் காட்ட பட்டுள்ளன. ஆனால் உண்மையில் அவைகள் படத்தில் காட்ட படுவதை போல மனிதனை ஒத்த சாயலில் தான் இருக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. அது நம் வசதிக்காக உருவாக்க பட்ட கதாபாத்திரங்கள் (இதில் ஸ்பைடர் மேன் 3 ஆம் பாகத்தில் வரும் ஒரு ஒட்டுணி போல செயல் பட்டு தங்கள் இறையின் குணத்திற்கு ஏற்றாற்போல மாறி இறையை அடிமையாக்கி இயக்கும். நீர் போல வடிவம் மாற கூடிய. கன்னங்கரேல் என்ற நிறம் கொண்ட தார் போன்ற விச்சித்திர ஏலியன் ஜந்துவான " venaom "அந்த கருப்பு ஜந்து தான் என்னை மிக கவர்ந்தது )

பொதுவாக ஏலியன் என்று சொன்னால் நமக்கு கற்பனைக்கு வருவது சாம்பல் நிற அந்த குள்ளர்கள் தான் அதற்க்கு காரணம் உலகமெங்கும் இப்படி பட்டவர்களை பார்த்ததாக மக்கள் சொல்வது தான் . தான் வணங்கும் கடவுளை மனிதன் தனது சாயலில் செய்து கொண்டது போல ஏலியன் ஐ யும் அவன் தனது சாயலிலேயே கற்பனை செய்து கொண்டான். (அல்லது நம்மை தொடர்பு கொள்ள வசதியாக அவர்கள் நம்மை போல தற்காலிக உருமாற்றத்துடன் வந்து போகிறார்களா ? )

 ஏலியன் தோற்றம்  ஆய்வாளர்களின் கருத்து:

ஏலியன் தோற்றம் ஆய்வாளர்களின் கருத்து:

ஒரு வேற்றுகிரக வாசி எப்படி வேணா இருப்பான். மனித வடிவத்தில் அல்லது வடிவமே இல்லாமல் அல்லது அவ்வபோது வடிவம் மாற கூடிய அல்லது பாக்ட்ரியாவை விட சின்னதாக அல்லது நாம் நேரடியாக உணர முடியாத ரேடியோ அலைகள் போல அலை வடிவத்தில். யோசித்து பாருங்கள் நம்மை சுற்றி உள்ள பல்வேறு வகை அலைகளை நாம் தகுந்த கருவிகள் இல்லாமல் உணர முடிவது இல்லை அதே போல நம்மால் உணர முடியாத... ஏன் இன்னும் அவனை உணரும் கருவிகள் கண்டுபிடிக்க படாத படி ஒரு பரிமாணத்தில் கூட வேற்று கிரகத்தினன் இருக்கலாம். பொதுவாக விஞ்ஞானிகள் அதிகம் பரிந்துரைப்பது பாக்டிரியா போன்ற நுண்ணுயிர் ஏலியன்களின் இருப்பை தான். அதுவும் அவைகளை தேடி அதிக தூரம் செல்ல தேவை இல்லை நம்ம சூரிய குடும்பத்தில் சனியின் நிலவின் பனிக்கு அடியிலோ அல்லது வியாழனின் நிலவிலோ இருக்கலாம் என்கிறார்கள்.

ஸ்டீபன் ஹாக்கின்ஸ் இதை பற்றி சொல்லும் போது அங்கே உறைந்த நீருக்கு அடியில் இருக்கும் ஜந்துக்கள் என்றால் கிட்ட தட்ட பூமி உயிர்கள் போல தான் அவைகள் இருக்கும் காரணம் நாமும் நீரை அடிப்படையாக கொண்டு உருவாகி வந்தவர்கள் தான்.

ஆனால் நமது சூரிய குடும்பத்தை தாண்டின ஏலியன்களை பற்றி சொல்வதற்கு இல்லை. அவைகள் நுண்ணுயிரியாக இல்லாமல் ஒரு நட்சத்திரத்தையே தங்கள் வண்டிக்கு எரிபொருளாக பயன்படுத்தும் அளவு சக்தியும் பிரமாண்டமும் கொண்டவர்களாக இருக்கலாம் ஆம்.. அப்படி ஒரு சந்தேகம் இருக்கிறது.

நட்சத்திரன் ஏலியன்கள்:

நட்சத்திரன் ஏலியன்கள்:

இங்கிருந்து மிக தொலைவில் இருக்கும் KIC 8462852 என்ற நட்சத்திரத்தில் தான் உள்ளது அந்த சந்தேகம். அதன் இன்னோரு பெயர் TABBY'S STAR .

இந்த நட்சத்திரத்தின் ஒளி மிக சந்தேக படும் அளவு நம்ம வீட்டு பல்பு டிம் பிரைட் டிம் பிரைட் ஆக எரிவதை போல எரிவதை கண்டார்கள். அதை ஆராய்ந்த ஆய்வாளர்கள் ஒரு மிக பெரிய கட்டிடம் போல அமைப்பு அந்த நட்சத்திரத்தை சுற்றி வருவதாகவும் அது தான் ஒளியை மங்க வைக்கிறது என்றும் கண்டார்கள். அந்த நட்சத்திரத்தை சுற்றி வரும் அந்த பிரமாண்ட அமைப்பு ஒரு ஸ்பேஸ் ஷிப் ஆக இருக்கலாம் என்றும் அது தனக்கு தேவையான ஆற்றலை அந்த நட்சத்திரத்தில் இருந்து எடுக்கிறது என்றும் ஒரு தியரியை ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

மாயன் இன காட்டுவாசிகளின் குறிப்பு:

மாயன் இன காட்டுவாசிகளின் குறிப்பு:

ஏலியன்கள் இன்று வரை மனிதனால் விளக்க படாத மகா மர்மங்கள். தனி பட்ட முறையில் என்னிடம் நீங்கள் ஏலியன் இருப்பது உண்மையா என்றால் எனது பதில் "ஆம் உண்மை". இது வரை உலகில் சொல்ல பட்ட ஏலியன் கதைகள் .. அனுபவங்கள் எல்லாம் உண்மையா என்றால் எனது பதில் "இல்லை " .

ஏலியன்களை அறிவியல் ரீதியாக மனிதன் ஆராய்ந்ததை விட அறிவியல் வளரும் முன் பண்டைய மாயன் இன காட்டுவாசிகளின் குறிப்புகளிலும் பழைய சித்திரங்கள் கல்வெட்டுகள் பழைய புராண புத்தகங்களிலுமே அதிக தகவல்கள் பதிவு செய்ய பட்டு இருக்கின்றன.

இன்னும் நாம் அறியாத கல்வெட்டுகள் சித்திரங்கள் எத்தனையோ ! நாம் ஆராயாத தடயங்கள் எத்தனையோ ... ஏலியன்கள் பற்றி நாம் அறியாத ரகசிய குறிப்புகள் கொண்ட "மர்ம புத்தகங்கள்" உலகில் எத்தனையோ... !

Most Read Articles
Best Mobiles in India

English summary
The aliens Things we do not know : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X