அமெரிக்காவின் மர்ம விண்வெளி விமானம் 780 நாட்களுக்கு பிறகு தரையிறங்கியது!

|

அமெரிக்க விமானப்படையின் அதி ரகசியமான, பைலட் இல்லாத விண்வெளி விமானமான எக்ஸ் -37 பி, 780 நாட்கள் சுற்றுப்பாதையில் பயணம் செய்தபின்னர் பூமிக்கு பாதுகாப்பாக திரும்பி வந்துள்ளது. இதுபோன்று ஒரு விமானம் இதுவரை விண்வெளியில் இவ்வளவு மிக நீண்ட காலம் பயணித்தது இல்லை.

270 நாட்களுக்கு மட்டுமே

270 நாட்களுக்கு மட்டுமே

முதன்முதலில் 7 செப்டம்பர் 2017 அன்று விண்ணில் ஏவப்பட்ட இந்த மீண்டும் பயன்படுத்தக்கூடிய வாகனம், தனது ஐந்தாவது நீண்டகால பயணத்தை முடித்த பின்னர் மீண்டும் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தரையிறங்கியது.

2010 இல் முதன்முதலாக இது விண்ணில் ஏவப்பட்ட போது வெறும் 270 நாட்களுக்கு மட்டுமே பறக்க வடிவமைக்கப்பட்ட நிலையில், இப்போது கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, இந்த போயிங் விண்வெளி விமானங்களில் குறைந்தபட்சம் இரு விமானங்கள் 2,800 நாட்களுக்கு மேல் சுற்றுப்பாதையில் பயணித்துள்ளன.

 45 வது விண்வெளிப் பிரிவு

45 வது விண்வெளிப் பிரிவு

"இன்று 45 வது விண்வெளிப் பிரிவுக்கு நம்பமுடியாத அற்புதமான நாளை குறிக்கிறது.இந்த நிகழ்விற்கு எங்கள் குழு தயாராகி வருகிறது. அவர்களின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் எக்ஸ் -37 பி இன் இன்றைய பாதுகாப்பான மற்றும் வெற்றிகரமான தரையிறக்கத்தில் உச்சக்கட்டத்தை அடைவதைக் கண்டு நான் மிகவும் பெருமைப்படுகிறேன்" என்கிறார் தளபதி டக் ஷீஸ்.

இந்த விண்கலங்கள் பல ஆண்டுகளாக சுற்றுவட்டப்பாதையில் என்ன செய்தன என்பது ஒரு மர்மமாகவே உள்ளது. மேலும் வெளிப்படுத்தப்பட்ட சிறு விஷயங்களும் சர்ச்சையைத் தூண்டுகின்றன.

மூன்று ரியர் கேமராக்களுடன் அசத்தலான விவோ Y19 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

மறுபயன்பாட்டு விண்வெளி வாகனம்

மறுபயன்பாட்டு விண்வெளி வாகனம்

மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்கல தொழில்நுட்பத்திற்காக "ஆபத்து குறைப்பு, பரிசோதனை மற்றும் செயல்பாடுகளின் கருத்து" ஆகியவற்றை வெறுமனே செயல்படுத்துவதாக விமானப்படையின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது; ஆனால் முந்தைய அறிவிப்புகளில் வழிசெலுத்தல் மற்றும் கட்டுப்பாடு, வெப்ப பாதுகாப்பு அமைப்புகள், ஏவியோனிக்ஸ், மேம்பட்ட உந்துவிசை அமைப்புகள், மறுபிரவேசம் மற்றும் தரையிறக்கம் ஆகியவற்றுக்கான சோதனைகள் குறித்து விவரிக்கப்பட்டன.இருப்பினும் சில விவரங்கள் குறித்து நிபுணர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

"இந்த திட்டம் உலகின் ஒரே மறுபயன்பாட்டு விண்வெளி வாகனம் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறது. இன்று வெற்றிகரமாக தரையிறங்கியதன் மூலம், எக்ஸ் -37 பி தனது மிக நீண்ட பயணத்தை இன்று நிறைவுசெய்ததுடன் அனைத்து பணி நோக்கங்களையும் வெற்றிகரமாக நிறைவு செய்தது" என்று விமானப்படை திறன் இயக்குனர் ராண்டி வால்டன் கூறியுள்ளார்.

ஹார்வர்ட்-ஸ்மித்சோனியன்

ஹார்வர்ட்-ஸ்மித்சோனியன்

"இந்த மிஷன் வெற்றிகரமாக விமானப்படை ஆராய்ச்சி ஆய்வக சோதனைகளையும், மற்றவற்றுடன், சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தவும் உதவியுள்ளது. "

ஹார்வர்ட்-ஸ்மித்சோனியன் வானியற்பியல் மையத்தின் வானியலாளர் ஜொனாதன் மெக்டொவல், இந்த செயற்கைக்கோள் செலுத்துதல் குறித்து அறிவிக்கப்படவில்லை என்றும், "அமெரிக்கா அல்லது ரஷ்யா இந்த ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறியது" இது முதல் தடவையாக இருக்கலாம் என்றும் ட்வீட் செய்துள்ளார்.

வாட்ஸ் ஆப் ஃபிங்கர் பிரிண்ட் அன்லாக் சேவை அறிமுகம்! யூஸ் பண்ண ஸ்டார்ட் பண்ணுங்க!

90 சதவிகிதத்திற்கும் அதிகமான செயற்கைக்கோள்கள்

90 சதவிகிதத்திற்கும் அதிகமான செயற்கைக்கோள்கள்

1962 ஆம் ஆண்டு முதல், ஐக்கிய நாடுகள் சபை வெளிப்புற விண்வெளியில் செலுத்தப்பட்ட பொருள்களின் பதிவேட்டை பராமரித்து வருகிறது.

90 சதவிகிதத்திற்கும் அதிகமான செயற்கைக்கோள்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என மெக்டொவல் தனது ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ள நிலையில், இது வழக்கமாக ஏவப்பட்ட ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குள் செய்யப்படுகிறது. இருப்பினும் சுற்றுப்பாதையில் பதிவு செய்யப்படாத அனைத்து செயற்கைக்கோள்களிலும், மூன்றில் ஒரு பங்கிற்கு அமெரிக்கா பொறுப்பாகும் என்று கருதப்படுகிறது.மேலும் இந்த இணக்கமின்மை வெளிப்படையானதல்ல.

உயர் ரகசியம்

உயர் ரகசியம்

நிச்சயமாக இந்த புதிய செயற்கைக்கோள்களைப் பதிவு செய்வதற்கு அமெரிக்க அரசாங்கம் வரவில்லை என்பதற்கான வாய்ப்பு உள்ளது.ஆனால் மெக்டொவல் கூறுகையில், தனக்குத் தெரிந்ததை தெரிவிப்பதாக கூறுகிறார்.

"உயர் ரகசியம் (TS / SCI கூட) சர்வதேச சட்டத்தையும் ஒப்பந்தத்தையும் முறியடிக்காது" என்று அவர் வாதிடுகிறார்.

பூமியின் சுற்றுப்பாதை மிகமிக பரபரப்பாகவ இருப்பதால், விண்வெளி கட்டுப்பாடு என்பது ஒரு பெரிய சர்ச்சைக்குரிய புள்ளியாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. நமது கிரகத்தைச் சுற்றி ஆபத்தான குப்பைகள் பறக்கும் என்ற அச்சம் மட்டுமல்லாமல், ரகசிய இராணுவமயமாக்கலின் சிக்கலும் உள்ளது.

விவரங்கள் எல்லாம் யூகங்கள் மட்டுமே

விவரங்கள் எல்லாம் யூகங்கள் மட்டுமே

இந்த புதிய எல்லைக்கு நாம் செல்லத் தொடங்கும் போது, ​​ அமெரிக்க விமானப்படை பணிகள் போன்ற மர்மமான திட்டங்கள் மிகப் பெரிய ஆய்வுக்கு உட்படும் என்பதில் சந்தேகமில்லை. இந்த விண்வெளி விமானங்களில் ஒன்றிற்கான அடுத்த ஏவுதல் அடுத்த ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அதுதொடர்பான விவரங்கள் எல்லாம் யூகங்கள் மட்டுமே.

Most Read Articles
Best Mobiles in India

English summary
That Mysterious US Space Plane Just Landed After a Mind-Blowing 780 Days in Orbit: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X