மனித உடலை பதப்படுத்தும் பெரியகோயில்: பிரமீடை மிஞ்சும் தமிழன் நுட்பம்.!

எகிப்த் பிரமீடுகளையும் மிஞ்சியுள்ளது. தஞ்சை பெரிய கோயில் கதிர் வீச்சுகளையும் குவித்து மன்னர்களின் உடலையும் பதப்படுத்தியுள்ளது. நிலநடுக்கம் வந்தாலும் கோயிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

|

தஞ்சை பெரியகோயில் என்றாலே நம் நினைவுக்கு வருது சோழர்கள் தான். இன்று உலகமே வியந்து பார்க்கும் தஞ்சை பெரிய கோயிலை அவர்கள் எவ்வாறு கட்டியிருப்பார்கள் என்று நினைத்து பார்த்தாலே பிரமிக்க வைத்துள்ளது. நாம் இன்று தொழில்நுட்பத்தோடு கோயிலை கட்டினாலும் சுமார் 15 ஆண்டுகள் கூட பிடிக்கலாம்.

மனித உடலை பதப்படுத்தும் பெரியகோயில்: பிரமீடை மிஞ்சும் தமிழன் நுட்பம்.!

ஆனால் இந்த அளவுக்கு நேர்த்தியாக கட்டுமானத்தையும் அமைக்க முடியாது. கட்டிட கலையிலும் தமிழனை யாராலும் வெல்ல முடியாது. ஆனால் தஞ்சை பெரிய கோயில் வெளியில் யாருக்கும் தெரியாத மர்மங்களையும் உள்ளடக்கியுள்ளது.

எகிப்த் பிரமீடுகளையும் மிஞ்சியுள்ளது. தஞ்சை பெரிய கோயில் கதிர் வீச்சுகளையும் குவித்து மன்னர்களின் உடலையும் பதப்படுத்தியுள்ளது. நிலநடுக்கம் வந்தாலும் கோயிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

கற்கள் இல்லாமல் கட்டப்பட்டது:

கற்கள் இல்லாமல் கட்டப்பட்டது:

10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்டது.
இந்த பிரம்மாண்டமான கோயிலை சுமார் 7 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது.

2 அல்லது 3 தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன்.

கிரேன் இல்லாமல் எப்படி சாத்தியம்:

கிரேன் இல்லாமல் எப்படி சாத்தியம்:

தஞ்சை பெரியகோயிலின் உயரம் 9.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன. எப்படி கிரேன்கள் இல்லாமல் சோழர்கள் சுமார் 60 மீட்டர் உயர கோபுரத்தை எப்படி கட்டினார்கள்.

கோயில் விமானத்தின் உயரம் 180 அலகுகுளூ சுமாராக 59.40 மீட்டராகும். சிவ லிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள். கருவறையின் 2 தளங்களிலும் சேர்த்து விமானத்தின் 13 மாடிகளும் சேர்த்து 15 தளங்கள் என்பது குறிப்பிடதக்தக்கது.

விமானம் மற்றும் கருவரை:

விமானம் மற்றும் கருவரை:

180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது. கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன.

இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும்.

மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது:

மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது:

பதின்மூன்றாவது மாடியின் மேல் எண்பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமானத்தின் 13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.

அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடியிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தனர் என்று தெரிகிறது.

 உலக பாரம்பரியச் சின்னம்:

உலக பாரம்பரியச் சின்னம்:

இக்கோயில் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்று. அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. கிபி 11-ஆம் நூற்றாண்டில் முதலாம் இராஜராஜ சோழன் இக்கோயிலை கட்டினார். 1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோயில் 1000 ஆடுகளையும் நிறைவு செய்துள்ளது.

 எகிப் பிராமிடுகள் போல்:

எகிப் பிராமிடுகள் போல்:

மிகப் பிரம்மாண்டமான விமானம் எகிப்தியப் பிரமிடுகளைப் போல கூர்நுனிக் கோபுரமாக அமைந்து கர்ப்பக்கிரகத்திலிருந்து 190 அடி உயரத்திற்கு ஓங்கி வளர்ந்திருக்கிறது. அக்காலத்தில் புவனேஸ்வரத்தில் கட்டப்பட்ட லிங்கராஜர் கோயிலின் உயரம் 160 அடியாகும். இராஜராஜேஸ்வரம் அதையும் மிஞ்சி விட்டமை குறிப்பிடத்தக்கது.

கோயிலின் மண்டபங்கள்:

கோயிலின் மண்டபங்கள்:

துணைச் சார்ந்த (Axial) மண்டபங்களும், விமானமும் அர்த்த மண்டபமும் மகாமண்டபமும் பெரிய நந்தியும் அவற்றிற்கேற்ற பொருத்தமான அளவுகளையுடைய ஒரு சுற்றுச் சுவருக்குள் அடங்கியிருக்கின்றன. இச்சுவரில் கிழக்கே ஒரு கோபுரம் இருக்கிறது. மதிலை ஒட்டி உள்பக்கமாக பல தூண்களுள்ள ஒரு நீண்ட மண்டபம் செல்லுகிறது. இது 35 உட்கோயில்களை இணைக்கிறது. நான்கு திக்குகளிலும் பல இடைவெளிகளுக்கு நடுவே கேந்திரமான இடங்களில் இந்த உட்கோயில்கள் கட்டப் பெற்றிருக்கின்றன. இரண்டாவது வெளிப் பிரகாரத்தின் வாயிலாக இருந்த இடத்தில் முன் பக்கத்தில் இரண்டாவது கோபுரம் இருக்கிறது.

சந்தை பெரியகோயில்- எகிப்த் பிராமிடு :

சந்தை பெரியகோயில்- எகிப்த் பிராமிடு :

எகிப்திய பிரமிடுகளின் கட்டுமான முறைக்கும் தஞ்சை மற்றும் கங்கைகொண்ட சோழபுர கோவில்களின் கட்டுமான முறைக்கும் ஒற்றுமை இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இரண்டிலுமே தேர்ந்தெடுக்கப்பட்ட கற்கள் அடுக்கியும் கோர்த்தும் வைத்து கட்டப்பட்டுள்ளது. இரண்டிலுமே கோள்களின் கதிர்வீச்சுக்கள் அதன் மையப் பகுதியில் குவியுமாறு வடிவமைக்கப்படுள்ளது.

அரசர்களின் உடல் கெடுவதில்லை:

அரசர்களின் உடல் கெடுவதில்லை:

புவி அதிர்வுகளினால் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. கதிர்வீச்சுக்களின் குவியலில் பாதுகாக்கப்பட்ட அரசர்களின் உடல் கெடுவதில்லை. அதுபோல, சோழ கோவில்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ள ஆவுடை-லிங்கங்கள் தொடர்ந்து சக்தியுள்ள மையமாக புகழுடைய கோவில்களாக சிறந்து விளங்குகின்றன.

இன்று வரை மர்மம் நீடிக்கின்றது:

இன்று வரை மர்மம் நீடிக்கின்றது:

தஞ்சை பெரிய கோயில் ஆயிரம் ஆண்டை கடந்து நின்றதாலும், அதன் தொழில்நுட்பமும், மர்ம முடிச்சுகளும் ஆச்சரியமளிக்கும் வகையில் இருகின்றது. பிரமீடுகளைபோல கதிர்வீச்சுகளை கிரகிக்கும் தொழில்நுட்பத்தை தமிழன் கண்டுள்ளான்.

Best Mobiles in India

English summary
thanjai big temple human body preservation tamil technology better than pyramid : Read more at this tamil.gizbot.com

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X