அமெரிக்க அரசை எச்சரித்த டெஸ்லா! ஷாக் காரணம்...

உலகம் முழுவதும் மின்சாரமயமான எதிர்காலத்தில் நுழையவுள்ள நிலையில், உலகளாவிய நாடுகள் பேட்டரியில் புதுமையான கண்டுபிடிப்புகளை நோக்கி தள்ளிவைக்கிறது.

|

எலக்ட்ரிக் கார் தொழில்துறையின் எதிர்காலம் சர்வதேச அளவில் பேட்டரி தாதுக்கள் பற்றாக்குறையால் தடுக்கப்படலாம். முன்னணி மின்சார வாகன தயாரிப்பாளரான டெஸ்லா, சுரங்கத் தொழிலில் முதலீடு செய்வதற்கு யு.எஸ். அரசாங்கத்தின் ஆதரவைக் கேட்டுள்ளது. இதன்மூலம் லித்தியம் ஐயான் பேட்டரிகள் உற்பத்திக்கு தேவையான நிக்கல், காப்பர் போன்ற முக்கிய கனிமங்களின் கிடைக்கப்பெறும் உறுதிசெய்யமுடியும் என நம்புகிறது.

அமெரிக்க அரசை எச்சரித்த டெஸ்லா! ஷாக் காரணம்...

டெஸ்லாவின் விநியோக சங்கிலி மேலாளரான சாரா மேரிசயில், வியாழனன்று நடைபெற்ற தொழில்துறை மாநாட்டில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பினார். பரந்த வளங்கள் துறையில் தனது நிலைப்பாட்டை பற்றி டெஸ்லா நிறுவனம் அரிதாகத்தான் பொதுவெளியில் பேசியிருக்கிறது. எலக்ட்ரிக் கார்கள் இன்டர்னல் கம்பன்ஸ்னல் இன்ஜின்களைவிட இரு மடங்கு அதிகமாக காப்பரை பயன்படுத்துகின்றன.

2ம் உலகப்போரில் நாசி படையை நாசமாக்கிய ரஷ்யா: கோலாகல விழா.! 2ம் உலகப்போரில் நாசி படையை நாசமாக்கிய ரஷ்யா: கோலாகல விழா.!

முதலீடுகள்

முதலீடுகள்

தேவைகளை பூர்த்தி செய்ய தீவிரம் காட்டும் காப்பர் தொழில்துறை தாமிரத் தொழில்துறை கடந்த சில தசாப்தங்களாக மந்தமாகவும், போதிய முதலீடுகள் இல்லாமல் பாதிக்கப்பட்டு இருந்த நிலை தற்போது விரைவாக மாறிவருகிறது.

புதிய சுரங்கங்கள்

புதிய சுரங்கங்கள்

புதிய சுரங்கங்கள் வளர்ந்து வரும்நிலையில் பழைய தளங்கள் அதிகரித்து வரும் தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டுவருகின்றன. காப்பருக்கான தேவை எலக்ட்ரிக் கார்களுக்கு மட்டும் அதிகளவில் இல்லாமல், அமேசான் எக்கோ மற்றும் பிற ஹோம் அசிஸ்டென்ட் போன்ற சாதனங்களின் உற்பத்தியிலும் அதிக அளவு காப்பர் தேவைப்படுகிறது.

டெஸ்லா கவனம் செலுத்தும்

டெஸ்லா கவனம் செலுத்தும்

பல்வேறு தரவுகளின் அடிப்படையில் இந்த சாதனங்கள் 2030 ஆம் ஆண்டில் சுமார் 1.5 மில்லியன் டன் காப்பரை நுகரும் என கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது அந்த அளவு சுமார் 38,000 டன்களாக உள்ளது.தொழில்துறை மாநாட்டில் சாரா வழங்கிய ஆதாரங்களின்படி, பேட்டரி கேத்தோடுகளில் கோபால்ட்டை விட நிக்கல் பயன்படுத்துவதில் டெஸ்லா கவனம் செலுத்தும் என்றும் கூறினார்.

ஜியோவின் அதிரடியால் தவிக்கும் ஏர்டெல்: சொத்துக்கள் பறிபோகிறது.! ஜியோவின் அதிரடியால் தவிக்கும் ஏர்டெல்: சொத்துக்கள் பறிபோகிறது.!

 அமெரிக்கா

அமெரிக்கா

சுரங்கங்களில் கோபால்ட் வெட்டியெடுப்பது முதன்மையாக காங்கோ ஜனநாயாக குடியரசு நாட்டில் செய்யப்படுகிறது. ஆனால் இங்கு குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்தும் ஒரு மிக மோசமான முறை உள்ளது.


டெஸ்லா நியாயமற்ற பணி சூழ்நிலைகளை ஆதரிப்பதை தவிர்க்கும் வகையில் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் உள்ள சுரங்கங்களில் இருந்து மூல கோபால்ட் மற்றும் பிற கனிமங்களை பெற முடிவெடுத்துள்ளது.

புதுமையை விரும்பும் ஐரோப்பியா

புதுமையை விரும்பும் ஐரோப்பியா

100க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற இந்த முக்கிய மாநாட்டில், அமெரிக்க அரசு மற்றும் ஆற்றல் துறை பிரதிநிதிகள், ஸ்டேன்டேர்டு லித்தியம் லிமிடெட் மற்றும் பயனீர் லிமிடெட் மற்றும் அமெரிக்காவில் லித்தியம் சுரங்கங்களை உருவாக்கும் மற்ற நிறுவனங்களும் பங்கேற்றன.


உலகம் முழுவதும் மின்சாரமயமான எதிர்காலத்தில் நுழையவுள்ள நிலையில், உலகளாவிய நாடுகள் பேட்டரியில் புதுமையான கண்டுபிடிப்புகளை நோக்கி தள்ளிவைக்கிறது. இந்த வாரம் பாரிஸ் மற்றும் ஜெர்மனி இணைந்து அட்வான்ஸ்டு பேட்டரி ஆராய்ச்சி மற்றும் ஐரோப்பாவில் பேட்டரி தொழிற்சாலைகளை உருவாக்க, 5 முதல் 6 மில்லியன் பவுண்ட் நிதியுள்ள முன்னெடுப்பை அறிவித்துள்ளன.


இந்த அறிவிப்பின் பத்திரிகையாளர் சந்திப்பில், பிரெஞ்சு நிதி மந்திரி புருனோ லே மெய்ன் முதலீடு குறித்து கூறுகையில் "அமெரிக்கா மற்றும் சீனா என்று இரண்டு சக்திகளிடமிருந்து தொழில்நுட்ப இறக்குமதிகளுக்காக ஐரோப்பா சார்ந்து இல்லை என்பதற்காகவே இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளது" என கூறினார்.

 மாரோஸ் செப்கோவிக்

மாரோஸ் செப்கோவிக்

புதிய ஒப்பந்தத்தின் கீழ் முதல் திட்டங்களில் ஒன்று பிரான்சில் ஒரு பைலட் தொழிற்சாலை ஆகும். இது 200 க்கும் மேற்பட்ட மக்களைப் வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.


ஐரோப்பா பேட்டரி துறையில் முக்கிம பங்காற்ற தீர்மானித்துள்ளது. ஆற்றல் துறைக்கான ஐரோப்பிய ஒன்றிய துணைத் தலைவர் மாரோஸ் செப்கோவிக், வியாழன் அன்று ப்ரூஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய பேட்டரி மாநாட்டில் பேசுகையில், " ஐரோப்பியர் அல்லாத போட்டியாளர்கள் கவலைப்பட ஆரம்பித்துவிட்டனர் என நான் உங்களுக்கு சொல்ல முடியும். ஆனால் அதே நேரத்தில், நாம் மெதுவாக செயல்பட்டாலும் அப்பாவிகளாக இருக்க முடியாது." என்றார்

Best Mobiles in India

English summary
Tesla Warns US Government About the Shortage of Battery Minerals in the Immediate Future: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X