நியூயார்க் நகர மிரள செய்த மார்ஸ் ரோவர் வாகனம்! வீதி உலா காட்சிகள்.!

வான்இயற்பியலாளரான நீல் டிகிராஸி டைசன் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஸ்டீபன் கோல்பர்ட் இருவரும், நாசாவின் மார்ஸ் ரோவர் வாகனத்தை எடுத்துக்கொண்டு கடந்த வாரம் மான்ஹாட்டன் நகர வீதிகளில் உற்சாக பயணம் வந்

|

வான்இயற்பியலாளரான நீல் டிகிராஸி டைசன் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஸ்டீபன் கோல்பர்ட் இருவரும், நாசாவின் மார்ஸ் ரோவர் வாகனத்தை எடுத்துக்கொண்டு கடந்த வாரம் மான்ஹாட்டன் நகர வீதிகளில் உற்சாக பயணம் வந்தனர். அவர்களின் அற்புதமான சாகச பயணத்தை பின்வரும் வீடியோவில் காணலாம்.

https://youtu.be/RcPrl0rl76M


பேட்மொபைலின் வலிமையான வெர்சனை போல காட்சியளிக்கும், நாசாவின் மார்ஸ் ரோவர் வாகனம், கடந்த வெள்ளியன்று ஒளிபரப்பான சிபிஎஸ் தொடரான "தி லேட் ஷோ வித் ஸ்டீபன் கோல்ப்ர்ட்" -ல் சிறப்பு தோற்றமாக வந்தது.

மார்ஸ் ரோவர் வாகனம்:

மார்ஸ் ரோவர் வாகனம்:

ப்ளோரிடாவை சேர்ந்த பார்க்கர் பிரதர்ஸ் கான்செப்ட் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட 6 சக்கரங்களை உடைய டாங்க் போன்ற அமைப்புடைய இந்த மார்ஸ்ரோவர், செவ்வாய் கிரகத்திற்கு முதன்முதலாக செல்லும் மனிதர்கள் பயன்படுத்தும் முன்மாதிரி வாகனமாக உருவாக்கப்பட்டுள்ளது.

"இதை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புவதற்கு முன்பாக, நியூயார்க்கின் சிறுநீர் சார்ந்த ஈரப்பதத்தின் விரும்பத்தகாத வளிமண்டலத்தை இதனால் தாக்குபிடிக்க முடியுமா என பரிசோதிக்க விரும்புகிறார்கள்" என்கிறார் கோல்பர்ட்.

 தவறான பாதை:

தவறான பாதை:

இந்த இரட்டையர்கள் மிகவும் சோர்வான வேகமான 3எம்.பி.எச்-ல்( மணிக்கு 5 கிலோமீட்டர்), 53வது வீதியை கடந்தபோது, இந்த சிக்கலான வாகனத்தை திருப்ப முயன்றபோது 8வது அவன்யூவில் தவறான பாதையில் சென்றனர்.

சாகச பயணம்:

சாகச பயணம்:

இந்த சாகச பயணத்தின் போது, இருவரும் டுயூனோ ரீட் கன்வீனியன்ஸ் ஸ்டோரில் ரோவரை நிறுத்தி, செவ்வாய் கிரகத்திற்கு செல்வதாக நம்பக்கூடிய பயணத்திற்கு தேவையான பொருட்களை வாங்கினர்.

கோல்பர்ட்டின் ஷாப்பிங் பேஸ்கட்டில், விண்வெளி உடையின் கீழ் அணியும் அடல்ட் டைப்பர், செவ்வாயில் தரையிறங்கும் போது அதன் வளிமண்டலத்தால் கண் புருவங்கள் எரிந்தால் அதற்கான ஐ-ப்ரோ பென்சில் மற்றும் மார்ஸ் ரோவரில் பயன்படுத்த ஒரு டஜன் முட்டை (சும்மா காமெடிக்கு) போன்றவை இருந்தன.

செவ்வாய் கிரகம்:

செவ்வாய் கிரகம்:

செவ்வாய் கிரகத்திற்கு செல்வதற்கு கோல்பர்ட் சற்று ஆர்வமாக இருந்தாலும், அங்கு செல்ல ஆசை இல்லை என்பதை டைசன் ஒப்புக்கொண்டார்.

யார் இதை செய்ய விரும்புவார்கள் என கேள்வியெழுப்பிய டைசன், அண்டார்டிக்காவில் யாரும் வரிசைகட்டி நிற்கவில்லை மற்றும் அண்டார்டிக்காவை போல ஈரப்பதம் மிக்க இடங்கள் செவ்வாயில் இல்லை எனவும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த கோல்பர்ட், "செவ்வாயில் உருளைக்கிழங்கு விளைவிக்க முடியும் என்பதை மேட் டாமன் நிரூபித்துள்ளார். அதை அண்டார்டிக்காவில் செய்ய முடியாது" என்றார்.

ரோவர் நிறுத்தம்:

கோல்பர்ட் மற்றும் டைசனின் செவ்வாய் கிரக சாகசப்பயணம், சாலையோரத்தில் சட்டவிரோதமாக ரோவரை நிறுத்தியதால் முடிவுக்கு வந்தது. "இது இயங்கத்துவங்கினால் ,அது நாசாவின் பிரச்சனை" என்றார் கோல்பர்ட்.

விண்வெளியில் உடற்பயிற்சி:

விண்வெளியில் உடற்பயிற்சி:

"தி லாஸ்ட் ஷோ" நிகழ்ச்சியின் இந்த பகுதி, நாசாவின் இயந்திரத்தை வைத்து கோல்பர்ட் நடத்தும் முதல் நிகழ்ச்சி அல்ல. 2009ல் காமெடி சென்ட்ரலில் இருக்கும் போது "தி கோல்ப்ர்ட் ரிபோர்ட்"நிகழ்ச்சிமூலம், நாசாவின் புவிஈர்ப்பு விசை இல்லாமல் இயங்கும் த்ரெட்மில் இவர் பெயர் சூட்டவைத்தார்.

இன்றும் சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள விண்வெளிவீரர்கள் கோல்பர்ட் த்ரெட்மில்-ஐ(Combined Operational Load-Bearing External Resistance Treadmill -COLBERT) பயன்படுத்தி விண்வெளியில் உடற்பயிற்சிகள் செய்கின்றனர்.

Best Mobiles in India

English summary
Team Stephen Colbert and Neil deGrasse Tyson Drive a Mars Rover in NYC : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X