அனிதா பெயரில் சாட்டிலைட்; மெக்சிகோ வரை தமிழர்களின் புகழ் பரப்பிய திருச்சி பொண்ணு.!

அந்த செயற்கைகோள் பெயர் - ஆன அனிதா-சாட் (Anitha-SAT) ஆகும்.!

|

சரியாக நேற்றும் காலை 7 மணியளவில், மெக்சிகோவில் இருந்து, காற்று மாசுபாடு மற்றும் புவி வெப்பமடைதலின் விளைவுகளை அளவிடும் செயற்கைகோள் ஒன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அந்த செயற்கைகோள் பெயர் - ஆன அனிதா-சாட் (Anitha-SAT) ஆகும்.!

ஆம், நீட் தேர்வின் விளைவாக, தன் உயிரை மாய்த்துகொண்ட "தமிழ்நாட்டின் தங்கையான" அனிதாவின் பெயர் தான், இந்த சாட்டிலைட்டுக்கு சூட்டப்பட்டுள்ளது.ஏன்.? எப்படி.? இந்த சாட்டிலைட்டுக்கு அனிதாவின் பெயரை சூட்டியது யார்.? அனிதாவின் "புகழும்", அவள் மீதான தமிழர்களின் நேசம் எப்படி மெக்சிகோ வரை சென்றது.?

யார் இந்த வில்லெட் ஓவியா.!?

யார் இந்த வில்லெட் ஓவியா.!?

திருச்சியை சேர்ந்த, 17 வயது பிளஸ் டூ மாணவியான வில்லெட் ஓவியா தான் இதற்கெல்லாம் காரணம். காற்று மாசுபாடு மற்றும் புவி வெப்பமடைதலின் விளைவுகளை அளவிடும் அனிதா-சாட் எனும் செயற்கைக்கோளை உருவாக்கியது வில்லெட் ஓவியா தான். மெக்ஸிகோ நகரின் அஸ்ட்ரா லேப்ஸ்-ல் இருந்து, நேற்று காலை 7.00 மணி அளவில் (இந்திய இந்திய நேரப்படி) அனிதா-சாட், வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

வெறும் 500 கிராம் எடையுள்ள அனிதா சாட்.!

வெறும் 500 கிராம் எடையுள்ள அனிதா சாட்.!

அனிதா-சாட் என்பது வெறும் 500 கிராம் எடையுள்ள, ஒரு கூம்பு வடிவிலான செயற்கைக்கோள் ஆகும். க்ளோபல் போஷிஷனிங் சிஸ்டம் (global positioning system - GPS) மற்றும் ஒரு கேமரா உடன் விண்ணில் செலுத்தப்பட்ட இந்த செயற்கைக்கோள் ஆனது, ஒரு ஹீலியம் பலூன் உதவி கொண்டு, பூமியில் இருந்து சுமார் 15 கிமீ உயரத்தில் அதாவது ட்ராபோஸ்பியர் (troposphere) எனப்படும் பூமி கிரகத்தின் அடிவெளிப்பகுதிக்குள் நிலை நிறுத்தப்பட்டது.

பலூன் வெடிப்பிற்கு பின்னர் கடலை நோக்கி விழுந்தது.!

பலூன் வெடிப்பிற்கு பின்னர் கடலை நோக்கி விழுந்தது.!

அதன் பிறகு, நிகழ்ந்த பலூன் வெடிப்பிற்கு பின்னர், அது வளிமண்டலத்தின் பரப்பளவில் உள்ள வெப்பநிலை, காற்று தரம் மற்றும் வாயுக்களின் செறிவு ஆகியவற்றை திட்டமிட்டபடி அளந்துகொண்டே, கடலில் விழ வேண்டும் என்கிற அதன் இலக்கை அடைய, கீழ் நோக்கி பாய்ந்தது.

சரி அனிதாவின் பெயர் வைக்க,  என்ன காரணம்.?

சரி அனிதாவின் பெயர் வைக்க, என்ன காரணம்.?

மறைந்த அனிதாவை போன்றே, வில்லெட் ஓவியாவிற்கும் மருத்துவ துறை சார்ந்த படிப்பை படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் உள்ளது. அதன் காரணமாக, கடந்த ஞாயிறன்று நடந்த நீட் தேர்வில், வில்லெட் ஓவியா பங்கேற்றார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அனிதா-சாட் என்கிற பெயர் காரணத்திற்காக விளக்கம், இப்போது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.!

அப்துல் காலமின் பாராட்டு.!

அப்துல் காலமின் பாராட்டு.!

மறைந்த முன்னாள் ஜனாதிபதியான ஏபிஜே அப்துல் கலாம் அய்யாவின் மூலம் கவர்ந்து இழுக்கப்பட்ட வில்லெட் ஓவியா, (சில ஆண்டுகளுக்கு முன்னர்) தனது சொந்த திட்டமான "ஸ்மார்ட் பாசன முறைமையை" முன்வைத்தபோது, தனது "இன்ஸ்பிரேஷன்" ஆன அப்துல் காலம் அய்யாவிடம் இருந்தே பாராட்டை பெற்றிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

How to check PF Balance in online (TAMIL)
நம்ம திருச்சி பொண்ணுக்கு ஒரு பிக் சல்யூட்.!

நம்ம திருச்சி பொண்ணுக்கு ஒரு பிக் சல்யூட்.!

அக்னி அறக்கட்டளை நிறுவனர் ஆன அக்னிஷ்வர் ஜெயப்பிரகாஷ் மற்றும் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான விமல் ராஜ் மேற்பார்வையின் கீழ், கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த இளம் கண்டுபிடிப்பாளர் செதுக்கப்பட்டார். அதன் வெளிப்பாடே இந்த அனிதா-சாட்டின் வெற்றி. இதை சாத்திய படுத்திய நம்ம திருச்சி பொண்ணுக்கு ஒரு பிக் சல்யூட்.!

Best Mobiles in India

English summary
Tamil Nadu teen's satellite soars in Mexico sky. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X