எல்லையை பாதுகாக்க இந்திய ஆயுதப்படை பயன்படுத்தப்போகும் 5 அதிநவீன ஆயுதம் இதுதான்.!

ஒரு வேலை இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் போர் மூண்டால், இந்திய எல்லையைப் பாதுகாக்கக் கூடுதல் ஏரியல் வாகனங்கள் தேவைப்பட்டால், இந்திய ஆயுதப் படை நிச்சயம் இந்த ஐந்து ஏரியல் வாகனங்களைத் தான் அழைக்கும்.

|

டிரோன்கள் இந்தியாவில் தீவிரமான வியாபாரமாகி வருகின்றது. கடந்த சில காலத்தில் யு.எ.வி (UAV) டிரோன்களை பயன்படுத்தியே பல தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்துள்ளது. இந்த வகை டிரோன்கள் உளவு பார்ப்பதற்கும் தாக்குதல் நடத்தவும் பயன்படுத்தப்படுகின்றது.

பாகிஸ்தான் போர் விமானங்கள்

பாகிஸ்தான் போர் விமானங்கள்

இந்திய வான்வெளி எல்லைக்குள் நுழையப் பாகிஸ்தான் போர் விமானங்கள் மீண்டும் முயற்சி செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா பாகிஸ்தான் எல்லையில் காலையிலிருந்து நீடித்து வந்த சிறிய அமைதி மீண்டும் கலைந்து இருக்கிறது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையில் எப்பொழுது வேண்டுமானாலும் போர் துவங்கலாம் என்ற நிலைமை நீடித்து வருகிறது

5 அதிநவீன ஆயுதம்

5 அதிநவீன ஆயுதம்

ஒரு வேலை இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் போர் மூண்டால், இந்திய எல்லையைப் பாதுகாக்கக் கூடுதல் ஏரியல் வாகனங்கள் தேவைப்பட்டால், இந்திய ஆயுதப் படை நிச்சயம் இந்த ஐந்து ஏரியல் வாகனங்களைத் தான் அழைக்கும்.

1.ஹெரான் (Heron):

1.ஹெரான் (Heron):

ஐஏஐ ஹாரன் (Machatz-1) என்பது இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இன்டஸ்ட்ரீஸ் மலாத் (யுஏவி) பிரிவினால் உருவாக்கப்பட்ட ஒரு நடுத்தர உயரத்தன்மை கொண்ட ஆளில்லா விமானம் வாகனம் என்பதாகும். 10.5 கிமீ, அதாவது 35,000 அடி வரை விரைந்து செல்லக் கூடிய திறன் கொண்டவை. தொடர்ச்சியாக 52 மணிநேரம் வரை செயல்படும் திறன் கொண்டது.

2.ஹார்பி (Harpy):

2.ஹார்பி (Harpy):

இஸ்ரேலின் மற்றொரு தயாரிப்பான ஹார்பி, இந்திய ஆயுதப்படையினால் பயன்படுத்தப்படுகிறது. இவர் சக்திவாய்ந்த ஏவுகணை மற்றும் ரேடார் அமைப்புகளை அளிக்கும் வல்லமை கொண்டவை. ஹார்பி விமானங்கள் முக்கியமாக ரேடார் சிஸ்டங்களை தாக்குவதற்காக உருவாக்கப்பட்டது. ஹார்பி விமானங்கள் இன்னும் பல நாடுகளான வாட கொரியா, சீனா மற்றும் துருக்கி போன்ற நாடுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

3. ஏ.இ.டபிள்யு & சி (AEW&C):

3. ஏ.இ.டபிள்யு & சி (AEW&C):

ஏர்போர்ன் ஆரம்ப எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாடு (Airborne early warning and control) டிரோன்கள், ஏர்போர்ன் சிஸ்டத்துடன் இணைந்து வான்வழி கண்காணிப்பு அமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. டிஆர்டிஒ உருவாக்கிய முதல் ஏ.இ.டபிள்யு சிஸ்டம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஈ.எம்.பீ-145 என்கிற மிஷன் சிஸ்டம் கட்டுப்பாட்டு அமைப்பு தான் இந்த விமானத்தின் மூளையாகச் செயல்பட்டு வருகிறது.

4.நிஷாந்த் (Nishant):

4.நிஷாந்த் (Nishant):

இந்திய ஆயுதப்படைக்கு, டி.ஆர்.டி.ஓ. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஒரு கிளையான இந்தியாவின் ஏ.டி.இ. எனப்படும் ஏரோனாட்டிக்கல் டெவலப்மெண்ட் எஸ்டாபிளிஷ்மென்ட் துறையினரால் இந்த ஆளில்லாத ஏரியல் விமானம் உருவாக்கப்பட்டுள்ளது. எதிரியின் எல்லைக்குள் உளவு பார்ப்பதற்கும், தகவல்களை சேகரிக்கவும், கண்காணிக்கவும், இலக்குகளை நிர்ணயம் செய்வதற்கும், பீரங்கிகளின் இடங்களை அறிவதற்கும் நிஷாந்த் பயன்படுத்தப்படுகிறது.

5. ரோஸ்டாம் (Rustom):

5. ரோஸ்டாம் (Rustom):

ரோஸ்டாம் டிரோனில் செயற்கை நுண்துளை ரேடார், மின்னணு நுண்ணறிவு அமைப்புகள் மற்றும் சூழ்நிலை விழிப்புணர்வு பேலூக்கள் போன்ற பல அதிக திறன் கொண்ட டிரோன் இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் தான் இதன் சோதனை ஓட்டம் வெற்றிபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது போர்க்களம் காணத் தயாராகவுள்ளது என்றும் இந்திய ஆயுதப்படை தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Surgical Strike 2 0 Five Aerial Vehicles Which The Indian Armed Forces Can Call up if Needed to Protect The Borders : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X