Home
Scitech

அட்லாண்டிக் கடலில் கதிரியக்கத்தை வெளியிடும் மூழ்கிய அணு நீர்மூழ்கிகப்பல்!

இரஷ்யா மற்றும் நார்வே நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒன்று சரியான நேரத்தில் மிகமுக்கியமான கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது.

அட்லாண்டிக் கடலில் கதிரியக்கத்தை வெளியிடும் அணு நீர்மூழ்கிகப்பல்!

அணுசக்தி மூலம் இயங்கும் இரஷ்ய நீர்மூழ்கிகப்பல் தீவிபத்தில் சிக்கி 14 மாலுமிகள் உயிரிழந்ததிற்கு சரியாக ஒரு வாரம் கழித்து, ஆராய்ச்சியாளர்கள் ரிமோட் நீர்மூழ்கிகப்பலை அனுப்பி 1989ல் தீப்பிடித்து எரிந்து நீரில் மூழ்கி 42பேரை பலிவாங்கிய மற்றொரு நீர்மூழ்கிகப்பலின் இடிபாடுகளை சுற்றியுள்ள மாதிரிகளை சேகரித்தனர்.

தண்ணீரில் கதிர்வீச்சின் அளவு

தண்ணீரில் கதிர்வீச்சின் அளவு

ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆய்வின் ஆரம்பக்கட்ட முடிவுகளின், மூழ்கிய சோவியத் நீர்மூழ்கிகப்பலுக்கு அருகிலுள்ள தண்ணீரில் கதிர்வீச்சின் அளவு, கடல் நீரில் எதிர்பார்க்கப்படுவதை விட 800,000 மடங்கு அதிகமாக இருக்கிறது என சுட்டிக்காட்டுகின்றன. அதுபோல சமீபத்திய பேரழிவின் விளைவுகளை நாம் பல தசாப்தங்கள் கழித்தும் அனுபவிக்கவேண்டும் என்பதையே இது குறிக்கிறது.

சுமார் 260 மைல்கள்

சுமார் 260 மைல்கள்

நார்வே கடற்கரையில் இருந்து சுமார் 260 மைல்கள் (418 கிலோமீட்டர்) தொலைவில் மூழ்கி, இப்போது கடல் மேற்பரப்பிற்கு கீழே ஒரு மைல் ஆழத்தில் உள்ள K-278 Komsomolets என்ற அந்த நீர்மூழ்கிகப்பலின் இடிபாடுகளைச் சுற்றி, கதிரியக்கத்தின் அளவு வழக்கத்தை விட அதிகமாக இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிவது இது முதல்முறையல்ல.

ஹில்ட் எலிஸ் ஹெடேல்

ஹில்ட் எலிஸ் ஹெடேல்

"1990 மற்றும் சமீபத்தில் 2007 ஆம் ஆண்டில் ரஷ்யர்கள் இங்கு ஏற்பட்ட கசிவுகளை ஆவணப்படுத்தியதால், நாங்கள் இந்த குறிப்பிட்ட நீர்மூழ்கிகப்பலை சுற்றியுள்ள தண்ணீரின் மாதிரிகளை எடுத்தோம். எனவே இங்கு கதிரிவீச்சின் அளவு அதிகமாக இருப்பது ஆச்சர்யம் ஏற்படுத்தவில்லை" என பிரஸ் வெளியீட்டில் ஆராய்ச்சி குழுவின் தலைவர் ஹில்ட் எலிஸ் ஹெடேல் தெரிவித்துள்ளார்.

கதிர்வீச்சு அளவு மேசமாவதற்கான அறிகுறி

தற்போதைய கதிர்வீச்சின் அளவு சாதாரண அளவை விட அதிகமாக இருந்தாலும், ஹெடேலின் கூற்றுப் படி, அது நோர்வே-ன் மீன் அல்லது கடல் உணவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த போதுமான இல்லை. எனவே தற்போதைக்கு அக்குழு சேகரிக்கப்பட்ட மாதிரிகளை முழுமையாக ஆய்வு செய்வதுடன், கதிர்வீச்சு அளவு மேசமாவதற்கான அறிகுறிகளை கண்டறிய நீர்மூழ்கிகப்பலின் இடிபாடுகளை தொடர்ந்து கண்காணிக்க திட்டமிட்டுள்ளனர்.

Best Mobiles in India

English summary
Sunken Nuclear Submarine Is Leaking Radioactive Material Into The Atlantic Ocean : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X