சூரியனை பற்றி நம்பமுடியாத உண்மையொன்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது.!

Written By:

சூரியனின் உருவாக்கம் சார்ந்த ஆய்வொன்றில் மிகவும் வியத்தகு கண்டுபிடிப்பொன்று நிகழ்ந்துள்ளது. அதாவது, சூரியனின் மையமானது அதன் மேற்பரப்பைவிட கிட்டத்தட்ட நான்கு மடங்கு வேகமாக சுழல்கிறதாம்.

சூரியனை பற்றி நம்பமுடியாத உண்மையொன்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது.!

சூரியன் சார்ந்த இந்த புரிதல் ஏற்படும் முன்னர், சூரியனின் மையப்பகுதியானது, அதன் மேற்பரப்பு சுழலும் அதே வேகத்தில் தான் சுழலுமென்று கருதப்பட்டது. இப்போது அது பொய்யாகியுள்ளது.

சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், சூரியன் உருவான காலப்பகுதியிலிருந்து இந்த வேகத்திலான மைய சுழற்சியானது நிகழ்கிறது என்பது தான் இந்த ஆய்வின் குறிப்பிடத்தக்க விளக்கமாகும்" என்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரோஜர் உல்ரிச் கூறியுள்ளார். "சூரிய மையத்தின் சுழற்சி சார்ந்த புரிதலானது சூரியன் எவ்வாறு உருவானது சார்ந்த விடயத்தை நாம் புரிந்துகொள்ள உதவும். அதுமட்டுமினிற் சூரியன் உருவான பிறகு, சூரியக்காற்றானது சூரியனின் சுழற்சியைத் தாமதப்படுத்தியிருக்கலாம்" என்றும் ரோஜர் உல்ரிச் விளக்கமளிக்கிறார்.

சூரியனை பற்றி நம்பமுடியாத உண்மையொன்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது.!

இந்த மெதுவான சுழற்சியானது, சன்ஸ்ஸ்பாட் எனப்படும் சூரியப்புள்ள்ளிகளின் விளைவிற்கும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று யூகிக்கப்பட்டுள்ளது. ஒரு சன்ஸ்பாட் ஆனது நமது பூமியைவிட பெரியதாக இருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆய்வாளர்கள் சூரியனின் வளிமண்டல மேற்பரப்பு ஒலி அலைகளை ஆய்வு செய்ததில், அவற்றில் சில அதன் மையத்திற்குள் ஊடுருவி, புவியீர்ப்பு அலைகளுடன் தொடர்பு கொண்டு ஒழுங்கற்ற நகர்வை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாதி டேங்க் அளவிலான தண்ணீரை நிரம்பியா லாரியொன்று வளைவான பாதையில் செல்லும் நீரின் அலை எப்படி இருக்குமோ அப்படியொரு ஒழுங்கற்ற ஒளி அலை நகர்வைக்கொண்டே சூரியனின் மைய சுழற்சி சார்ந்த தெளிவை ஆய்வாளர்கள் பெற்றுள்ளன.English summary
Sun's core rotates four times faster than its surface: Study. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot