இந்த ஆண்டின் 'நீண்ட நாள்' இது தான்.. ஆனாலும் இன்னைக்கு நைட் கொஞ்சம் குட்டியா தான் இருக்கும்..ஏன் தெரியுமா?

|

ஜூன் 21, 2021 ஆனா இன்று பூமியின் வடக்கு அரைக்கோளம் (Northern hemisphere) இந்த ஆண்டின் மிக நீண்ட பகல் நாளை அனுபவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மர் சால்ஸ்டிஸ் (summer solstice) அல்லது கோடையின் முதல் நாள் என அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வு நீண்ட பகல் நேரத்தை வழங்குவதோடு, பூமியின் மிகக் குறுகிய இரவு நேரத்தையும் கொண்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வு பற்றிய கூடுதல் விபரங்களைப் இப்போது பார்க்கலாம்.

சம்மர் சால்ஸ்டிஸ் (summer solstice) என்றால் என்ன தெரியுமா?

சம்மர் சால்ஸ்டிஸ் (summer solstice) என்றால் என்ன தெரியுமா?

சம்மர் சால்ஸ்டிஸ் (summer solstice) என்ற வார்த்தை ஒரு லத்தீன் வார்த்தையாகும். "சால்ஸ்டிஸ் (solstice)" என்ற சொல் லத்தீன் வார்த்தையான "சோல் (sol)" என்பதிலிருந்து உருவானது, அதாவது சூரியன் மற்றும் "சிஸ்டெரெ (sistere)" என்பது நிலையான அல்லது அசையாமல் நிற்கிற சூரியனை குறிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 20 முதல் 22 ஆம் தேதிக்குள் இந்த சம்மர் சால்ஸ்டிஸ் நிகழ்வு நிகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கோடையின் முதல் நாள்.. இந்த ஆண்டின் நீண்ட நாள் இது தானா?

கோடையின் முதல் நாள்.. இந்த ஆண்டின் நீண்ட நாள் இது தானா?

சம்மர் சால்ஸ்டிஸ் மிட்சம்மர், கோடையின் முதல் நாள் ஆகும். இது ஜூன் மாதத்தில் வடக்கு அரைக்கோளத்தில் நிகழும் ஒரு முக்கிய நிகழ்வாகும். இது தான் ஆண்டின் மிக நீண்ட நாள் என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த நிகழ்வு ஆண்டுக்கு இரண்டு முறை நிகழ்கிறது. வடக்கு அரைக்கோளத்தில் ஜூன் 20-22 க்கு இடையில் ஒரு முறையும், மற்றும் தெற்கு அரைக்கோளத்தில் டிசம்பர் 20-23 ஆம் தேதிக்கு இடையில் ஒரு முறையும் இந்த சம்மர் சால்ஸ்டிஸ் நிகழ்வு நிகழ்கிறது.

கண்ணா ஒரே போனில் 2 WhatsApp கணக்கு பயன்படுத்த ஆசையா? கஷ்டம் இல்லாமல் ஈஸியா யூஸ் பண்ணலாம்.. இதோ.!கண்ணா ஒரே போனில் 2 WhatsApp கணக்கு பயன்படுத்த ஆசையா? கஷ்டம் இல்லாமல் ஈஸியா யூஸ் பண்ணலாம்.. இதோ.!

உதயமாகும் சூரியன் நோய் இல்லாத புதிய பூமிக்கு வழிவகுக்கும்

உதயமாகும் சூரியன் நோய் இல்லாத புதிய பூமிக்கு வழிவகுக்கும்

இந்த ஆண்டு, சர்வதேச யோகா தினத்துடன் இந்த நாள் எதார்த்தமாக ஒத்துப்போகிறது. இது கொரோனா வைரஸ், கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் விரச்சுவலாக (Virtual) கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் பங்குபெறும், மத்திய பெட்ரோலியம் மற்றும் எஃகு அமைச்சர் தர்மேந்திர பிரதான், உதயமாகும் சூரியன் நோய் இல்லாத புதிய பூமிக்கு வழிவகுக்கும் என்று நம்புவதாக அறிவித்து யோகா தின வாழ்த்தைப் பதிவிட்டுள்ளார்.

சூரிய வழிபாடு என்பது உலக வரலாறு

சூரிய வழிபாடு என்பது உலக வரலாறு

அதேபோல், தனது கருத்தை டிவிட்டருக்கு எடுத்துக்கொண்ட பிரதான், சூரிய வழிபாடு என்பது வரலாறு மற்றும் உலகெங்கிலும் உள்ள பல கலாச்சாரங்களின் புனிதமான மரபுகளின் உள்ளார்ந்த பகுதியாக இருந்து வருவதாகவும், இந்த கோடைக்கால சால்ஸ்டிஸ் சூரியனைப் போற்றவும், உடலையும் மனதையும் நேர்மறை ஆற்றலுடன் சீரமைக்கவும் இயற்கையைத் தழுவவும் ஒரு நல்ல நேரம் என்று அவர் தனது பதிவில் கூறியிருக்கிறார்.

Jio ரூ.399 திட்டம்: இலவச 4k செட்டாப்-பாக்ஸ் உட்பட இவ்வளவு சலுகைகளா? மறுபடியும் அம்பானியின் அதிரடி ஆரம்பம்.!Jio ரூ.399 திட்டம்: இலவச 4k செட்டாப்-பாக்ஸ் உட்பட இவ்வளவு சலுகைகளா? மறுபடியும் அம்பானியின் அதிரடி ஆரம்பம்.!

சென்ற ஆண்டு இந்த நேரத்தில் ரிங் ஆஃப் ஃபையர்

சென்ற ஆண்டு இந்த நேரத்தில் ரிங் ஆஃப் ஃபையர்

மேலும் யோகா மக்களை நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் ஒற்றுமைக்கு வழிநடத்துகிறது என்று கூறியுள்ளார். அதேபோல், கடந்த ஆண்டு, இந்த நாள் ஒரு வருடாந்திர சூரிய கிரகணத்தைக் கண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்தியா உட்பட உலகின் பல பகுதிகளிலும் காணப்பட்டது. ராஜஸ்தான், ஹரியானா மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் ரிங் ஆஃப் ஃபையர் என்று 'நெருப்பு வளையம்' தெரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Summer Solstice 2021 Longest Day and Shortest Night Of The Year Coincides With International Yoga Day : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X