செவ்வாயில் உயிரினம்! அதிர்ச்சியளிக்கும் பனோரமா புகைப்படம்..

|

செவ்வாய் கிரகத்தின் அதிர்ச்சியூட்டும் பனோரமா புகைப்படம் நாசாவின் ஆபர்சுனிடி ரோவரின் இறுதி ஓய்வு இடத்தைக் காட்டுகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்க விண்வெளி நிறுவனத்தால் 'செயலிழந்ததாக' அறிவிக்கப்படுவதற்கு முன், 29 நாட்கள் காலகட்டத்தில் ஆபர்சுனிடி ரோவரால் எடுக்கப்பட்ட 354 தனிப்பட்ட படங்களின் தொகுப்பே இந்த பனோரமா புகைப்படம்.

பெர்செவெரன்ஸ் வேலி

பெர்செவெரன்ஸ் வேலி

பெர்செவெரன்ஸ் வேலி என்று அழைக்கப்படும் பாழடைந்த செவ்வாய் நிலப்பரப்பை இந்த ரோவர் கடைசியாக பார்த்தநிலையில், இப்போது அப்பகுதி அதன் கல்லறையாக மாறிவிட்டது.

 பனோரமா

பனோரமா

மே 13 முதல் ஜூன் 10 வரை அல்லது சோல்ஸ் (செவ்வாய் நாட்கள்) 5,084 முதல் 5,111 வரை, ஆபர்சுனிடி ரோவரின் பனோரமிக் கேமரா (பான்காம்) வழங்கிய 354 தனிப்பட்ட படங்களால் இந்த பனோரமா உருவானது.

 பான்காம்

பான்காம்

பனோரமா மூன்று வெவ்வேறு பான்காம் பில்டர்களின் படங்களை ஒருங்கிணைக்கிறது. அவை 753 நானோமீட்டர்கள் (அகச்சிவப்புக்கு அருகில்), 535 நானோமீட்டர்கள் (பச்சை) மற்றும் 432 நானோமீட்டர்கள் (வயலட்) அலைநீளங்களை மையமாகக் கொண்ட ஒளியை ஏற்றுக்கொள்கின்றன.

கலிபோர்னியாவின் பசடேனாவில் உள்ள நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் ஆபர்சுனிடி திட்ட மேலாளர் ஜான் காலஸ் கூறுகையில் ‘இந்த இறுதியான பனோரமா, எங்களது ஆபர்சுனிடி ரோவரை இதுபோன்ற ஒரு குறிப்பிடத்தக்க ஆய்வு மற்றும் கண்டுபிடிப்பு நோக்கமாக மாற்றியது.மையத்தின் வலதுபுறத்தில் எண்டெவர் பள்ளத்தின் விளிம்பு தூரத்தில் உயர்ந்து வருவதைக் காணலாம். அதன் இடதுபுறத்தில், ரோவர் டிராக்குகள் அடிவானத்தில் இருந்து தங்களது பாதையை தொடங்குகின்றன மற்றும் நம் விஞ்ஞானிகள் நெருக்கமாக ஆராய விரும்பிய புவியியல் அம்சங்களுக்கு தங்கள் வழியை காண்பிக்கின்றன. மேலும் வலது மற்றும் இடதுபுறத்தில் பெர்செவெரன்ஸ் பள்ளத்தாக்கின் அடிப்பகுதியும், எண்டெவர் பள்ளத்தின் தளமும், அழகாகவும் ஆராயப்படாமலும், எதிர்கால ஆய்வாளர்களின் வருகைகளுக்காகக் காத்திருக்கின்றன ' என தெரிவித்தார்.

ஆபர்சுனிடி ரோவர்

ஆபர்சுனிடி ரோவர்

ஆபர்சுனிடி ரோவர் 15 வருடங்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை, ஆனால் இது கிரகத்தின் புவியியல் மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய புரிதலுக்கு பெரிதும் உதவியது. இந்த சிவப்பு கிரகத்தில் எதிர்கால ரோபோ மற்றும் மனித பயணங்களுக்கு அடித்தளத்தை அமைத்துள்ளது' என்று அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா தனது அறிக்கையில் விளக்கமளித்துள்ளது.

நாசா பிப்ரவரி 13

நாசா பிப்ரவரி 13

ரோவர் உடனான தொடர்பை மீட்டெடுக்கும் முயற்சியில் எட்டு மாத முயற்சிகள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டளைகளை அனுப்பிய பின்னர், நாசா பிப்ரவரி 13, 2019 அன்று ஆபர்சுனிடி ரோவரின் பணி முடிந்ததாக அறிவித்தது.

ஆபர்சுனிடி ரோவரின் மரணத்துடன் நாசாவின் செவ்வாய் கிரக ஆய்வு ரோவர்ஸ் திட்டத்தின் முடிவும் வந்துள்ளது. இது ஜூலை 2003 இல் கேப் கனாவெரலில் இருந்து ஸ்பிரிட் மற்றும் ஆபர்சுனிடி என்ற இரட்டை ரோபோக்களுடன் தொடங்கப்பட்டது.

சயின்ஸ் மிஷன்

சயின்ஸ் மிஷன்

மணலில் சிக்கி பூமியுடனான தொடர்பை இழந்த ஒரு வருடத்திற்கு பிறகு 2011 இல் ஸ்பிரிட் அதன் முடிவை சந்தித்தது.

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது நாசாவின் சயின்ஸ் மிஷன் இயக்குநரகத்தின் இணை நிர்வாகி தாமஸ் சுர்பூச்சென் கூறுகையில் 'நான் இங்கு ஆழ்ந்த பாராட்டுடனும் நன்றியுடனும் நிற்கிறேன். நான் ஆபர்சுனிடி ரோவரின் பணி முழுமையானதாக அறிவிக்கிறேன். அதனுடன் செவ்வாய் ஆய்வு பணியும் நிறைவடைகிறது. இங்கே நடந்த அற்புதமான பணியை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். இது செவ்வாய் கிரகத்தைப் பற்றிய நமது புரிதலை மாற்றியுள்ளது' என்றார்.

 30 மைல் தூரம்

30 மைல் தூரம்

‘ஓப்பி' என்று அன்பாக அழைக்கப்படும் இந்த மார்ஸ் ரோவர், இவ்வளவு காலமாக அதை இயக்கும் குழுவின் எதிர்பார்ப்புகளை விட அதிகமாக செயலாற்றியுள்ளது.


இது வெறும் 90 செவ்வாய் நாட்கள் (90 சோல்கள்) நீடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அக்காலக்கட்டத்தில் இது மொத்தம் 1,000 மீட்டர் (1100 யார்ட்ஸ்) மட்டுமே பயணிக்கும்.


ஆனால் எப்படியோ, சிவப்பு கிரகத்தைத் தொட்டு 14.5 ஆண்டுகள் வரை ஓப்பி தப்பிப்பிழைத்தது. செவ்வாய் கிரகத்தைப் பற்றிய நமது புரிதலை மாற்றியமைக்க கிட்டத்தட்ட 30 மைல் தூரம் பயணித்து அதன் வரம்புகளை உடைத்தெறிந்தது.

Best Mobiles in India

English summary
Stunning panorama Mars reveals final resting place NASAs Opportunity rover: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X