இதென்னடா பசுவிற்கு வந்த சோதனை? மூத்திரத்தால் ஆராய்ச்சியாளர்கள் ஆத்திரம்!

சரி இந்த சீரியஸான மேட்டருக்கு, பசுவிற்கு, அதன் மூத்திரத்திற்கும் என்ன சம்பந்தம்?

|

மூத்திரம் - ஆத்திரம் என்கிற எதுகை மோனையை பார்த்து இதை ஒரு காமெடி கட்டுரை என்று நினைத்து விடாதீர்கள். மிகவும் சீரியஸான மேட்டர் இது. அப்படி என்ன சீரியஸ்? - புவி வெப்பமடைதல் என்பதும், அதனால் கடல் நீர் மட்டம் உயர்வது என்பதும், அதன் விளைவாக நிலபகுதி குறையும், இறுதியாக உலகம் நீருக்குள் போகும் என்பது சீரியஸான மேட்டர் தானே?

சரி இந்த சீரியஸான மேட்டருக்கு, பசுவிற்கு, அதன் மூத்திரத்திற்கும் என்ன சம்பந்தம்?

சரி இந்த சீரியஸான மேட்டருக்கு, பசுவிற்கு, அதன் மூத்திரத்திற்கும் என்ன சம்பந்தம்?

சரி இந்த சீரியஸான மேட்டருக்கு, பசுவிற்கு, அதன் மூத்திரத்திற்கும் என்ன சம்பந்தம்? வாருங்கள் அலசுவோம். மாட்டு மூத்திரத்தில் (சிறுநீர்) உள்ள மருத்துவ நன்மைகளை பற்றி நம்மில் பலருக்கும் தெரியும், தீமைகளை பற்றி தெரியுமா? தீமையா? - ஆம். இந்தியாவில் நடத்தப்பட்ட ஒரு சிறிய படிவ ஆராய்ச்சியானது, பசுக்களின் மூத்திரமானது புவி வெப்பமயமாதலுடன் தொடர்பு கொண்டுள்ளதை வெளிப்படுத்தி உள்ளது.

நைட்ரஸ் ஆக்சைடு உமிழ்வு

நைட்ரஸ் ஆக்சைடு உமிழ்வு

அதாவது பசுக்களின் மூத்திரத்தில் இருந்து, கார்பன் டை ஆக்சைடைவிட 300 மடங்கு அதிக சக்தி வாய்ந்த ஒரு வாயுவான நைட்ரஸ் ஆக்சைடு உமிழ்வு (N2O) வெளிப்படுகிறதாம். அநேக முறை, இந்த சிறுநீர் மாசு ஆனது இந்தியாவின் பரவலான நிலப்பரப்புகளில் காணப்படுவதால், இங்கே என்2ஓ (N2O) உமிழ்வுகள் மும்மடங்காக உள்ளது என்கிறது அந்த ஆய்வு. கொலம்பியா, அர்ஜென்டினா, பிரேசில், நிகராகுவா, திரினிடாட் மற்றும் டொபாகோவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் அறிக்கையானது, சயின்ஸ் ரிப்போட்ஸ் இதழின் சமீபத்திய பதிப்பில் இடம் பெற்றுள்ளது.

புவி வெப்பமடைதலுக்கு நன்கு அறியப்பட்ட ஒரு காரணமாக இருக்கின்றன

புவி வெப்பமடைதலுக்கு நன்கு அறியப்பட்ட ஒரு காரணமாக இருக்கின்றன

இந்த கால்நடை மிருகங்கள் ஆனது மீத்தேன், கிரீன்ஹவுஸ் வாயுவின் ஒரு குறிப்பிடத்தக்க ஆதாரமாக இருக்கின்றன என்பதையும், இவைகள் புவி வெப்பமடைதலுக்கு நன்கு அறியப்பட்ட ஒரு காரணமாக இருக்கின்றன என்பதையும் நாம் முன்னரே அறிவோம். அறியாத விடயம் என்னவெனில், புவி வெப்பமடைதலில் மாட்டு சிறுநீர் குறைவான பங்கையே கொண்டுள்ளது என்று நம்பப்பட்டது, ஆனால் பெரும் பங்கை கொண்டுள்ளது.

500 கால்நடைகளின் சிறுநீர் மாதிரிகள்  பரிசோதனை

500 கால்நடைகளின் சிறுநீர் மாதிரிகள் பரிசோதனை

இந்த ஆய்விற்காக, மோசமானதாக மற்றும் ஆரோக்கியமானதாக கருதப்படும் கால்நடைப் புலங்களில் இருந்து, சுமார் 500 கால்நடைகளின் சிறுநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. ஆறில் ஏழு சோதனைகளில், மோசமான கால்நடை புலங்களில் இருந்து கிடைக்கப்பட்ட சிறுநீர் மாதிரிகள் ஆனது என்2ஓ வாயுவை கொண்டு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு கொலம்பியாவின் வெப்பமண்டல வேளாண்மைக்கான சர்வதேச மையத்தினால் (CIAT) நடத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாணம் மற்றும் சிறுநீர்

சாணம் மற்றும் சிறுநீர்

இந்த ஆய்வின் கீழ் இந்தியாவை பொறுத்தமட்டில், அதன் நிலப்பரப்பானது சாணம் மற்றும் சிறுநீர் என்பதின் பொதுவான கலவையாக உள்ளது. ஏனெனில் உலகின் மிகப்பெரிய கால்நடை வளர்ப்பை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். அத்துடன், தரமற்ற நிலங்களின் குறிப்பிடத்தக்க பகுதிகள் நைட்ரஜன் உமிழ்வுகளால் நிறைந்து உள்ளது. அதாவது இந்தியாவின் புவியியல் பகுதியின் 30% (அல்லது 96.4 மில்லியன் ஹெக்டேர்) ஆனது தரமிறக்கப்பட்டுள்ளது என்று இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பான இஸ்ரோ (2012 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட செயற்கைக்கோள் ஆய்வின் மூலமாக) கூறுகிறது.

பாலைவனமயமாக்கலை சந்தித்து உள்ளது

பாலைவனமயமாக்கலை சந்தித்து உள்ளது

2011 - 2013 மற்றும் 2003 - 2005 ஆண்டுகளுக்கு இடையில் 1.87 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பு ஆனது நில சீரழிவு மற்றும் பாலைவனமயமாக்கலை சந்தித்து உள்ளது. இதில் இந்தியாவின் தலைநகரம் தில்லி உடன் திரிபுரா, நாகாலாந்து, இமாச்சல பிரதேசம் மற்றும் மிசோரம் (11.03% -4.34%) ஆகியவைகளுக்கு தான் பெரும்பங்கு கிடைத்து உள்ளது.

சரி இதனால் என்ன சிக்கல்கள் ஏற்படும்?

சரி இதனால் என்ன சிக்கல்கள் ஏற்படும்?

சரி இதனால் என்ன சிக்கல்கள் ஏற்படும்? இதனால் வெறுமனே உணவு பாதுகாப்பு மற்றும் கால்நடைகள் மட்டும் பாதிக்கப்படாது, எதிர்கால விவசாயிகளின் வாழ்வாதாரமே பாதிக்கப்படும் என்பதே நிதர்சனம். ஏனெனில் அவை புவி வெப்பமடைதல் ஆனது அதிகப்படுத்தும் வாயுக்களை வெளியிடுகின்றன" என்கிறார் சிஐஏடி-யின் ஆராய்ச்சியாளர் ஒருவர்.

Best Mobiles in India

English summary
Study says cow urine may be a reason for global warming: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X