நாளை நிகழும் 'ஸ்ட்ராபெரி மூன்' நிகழ்வு.. இந்தியாவில் இந்த நிகழ்வை என்ன நேரத்தில் பார்க்க முடியும்?

|

ஜூன் 2021 வான நிகழ்வுகள் நிறைந்ததாகத் தெரிகிறது. காரணம், முன்னதாக மக்கள் வருடாந்திர சூரிய கிரகணத்தையும், பின்னர் கோடைக்கால சங்கிராந்தியையும் பார்வையிட்டனர். இப்போது, நாம் இந்த மாதத்தில் ஸ்ட்ராபெரி சூப்பர்மூனைப் பார்க்கப் போகிறோம். இந்த அழகான வான நிகழ்வு நாளை பூமியில் நிகழவிருக்கிறது. ஸ்ட்ராபெரி மூன் நிகழ்வின் போது வானத்தில் உள்ள முழு நிலவு சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கும், இதனால் இதற்கு இந்த பெயர் வழங்கப்பட்டுள்ளது.

சிவப்பு சந்திரன் அல்லது ஸ்ட்ராபெரி மூன்

சிவப்பு சந்திரன் அல்லது ஸ்ட்ராபெரி மூன்

ஜூன் 24 அன்று (நாளை), சிவப்பு சந்திரன் அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் தோன்றப் போவதில்லை, ஆனால் வளிமண்டலத்தைப் பொறுத்துச் சிவப்பு நிறத்துடன் தங்க நிற தோற்றத்தைக் கொண்டிருக்கும் என்று நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது. இந்த வான நிகழ்வு இரவு வானத்திற்கு ஒரு பிரகாசமான புதிய அழகைச் சேர்க்கவிருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இது போன்ற இயற்கையான அழகிய நிகழ்வுகளை ரசிக்கத் தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.

ஸ்ட்ராபெரி மூன் தோன்ற காரணம் என்ன?

ஸ்ட்ராபெரி மூன் தோன்ற காரணம் என்ன?

லைவ் சயின்ஸுக்கு அளித்த பேட்டியில், நாசாவின் அறிவியல் தொடர்பாளர் ஆண்ட்ரியா ஜோன்ஸ் கூறியதாவது, ''ஒரு பௌர்ணமியின் போது, ​​சூரியன், பூமி மற்றும் சந்திரன் 180 டிகிரி வரிசையில் வரிசையாக நிற்கின்றது. ஆனால் சந்திரனின் சுற்றுப்பாதை பூமியிலிருந்து சற்று வித்தியாசமாக இருப்பதால் இது பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து 5 டிகிரி விலகி நிற்கிறது. இதனால் சில மாற்றங்கள் ஏற்படுகிறது. அது என்னவென்று பார்க்கலாம்.

நாசா அறிவியல் தொடர்பாளர் ஆண்ட்ரியா ஜோன்ஸ் கூறுவது என்ன?

நாசா அறிவியல் தொடர்பாளர் ஆண்ட்ரியா ஜோன்ஸ் கூறுவது என்ன?

இப்படி 5 டிகிரிக்கு பூமி விலகி நிற்பதனால், இது பொதுவாக வான வரிசை நிகழும்போது பூமியின் நிழலை விட சற்று அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும் படி நிலைமையை உருவாக்குகிறது. அதாவது சூரியனின் ஒளி பூமியை எதிர்கொள்ளும் சந்திரனின் பக்கத்தை முழுமையாக ஒளிரச் செய்ய முடியும். " இதனால் தான் இந்த சிவப்பு நிலா அல்லது ஸ்ட்ராபெரி மூன் என்ற நிகழ்வு நிகழ்கிறது என்று நாசா அறிவியல் தொடர்பாளர் ஆண்ட்ரியா ஜோன்ஸ் கூறியுள்ளார்.

ஸ்ட்ராபெரி சூப்பர்மூன் என்ற பெயர் வரக் காரணம் என்ன?

ஸ்ட்ராபெரி சூப்பர்மூன் என்ற பெயர் வரக் காரணம் என்ன?

ஜூன் மாதத்தின் முழு நிலவு ஸ்ட்ராபெரி சந்திரன் என்று அழைக்கப்படுகிறது. இது வசந்த காலத்தின் கடைசி பௌர்ணமியையும், கோடைக்காலத்தின் முதல் காலத்தையும் குறிக்கிறது. இது கோடைக்கால சங்கிராந்திற்குப் பிறகு தோன்றும் முதல் பௌர்ணமியாக இருக்கப்போகிறது. இந்த வான நிகழ்வு வட அமெரிக்காவின் பண்டைய அல்கொன்கின் பழங்குடியினரிடமிருந்து அதன் பெயரைப் பெற்றுள்ளது. ஸ்ட்ராபெர்ரிகளுக்கான அறுவடை பருவத்தின் தொடக்கத்தில் பௌர்ணமியைக் இது குறிக்கிறது.

கடலில் வேகமாக பரவும் 'கடல் சளி' ஆபத்து.. மனிதர்களுக்கு தொற்று பரவும் அபாயம் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை.!கடலில் வேகமாக பரவும் 'கடல் சளி' ஆபத்து.. மனிதர்களுக்கு தொற்று பரவும் அபாயம் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை.!

ஸ்ட்ராபெரி சூப்பர்மூன் தோன்றும் நேரம் இது தான்

ஸ்ட்ராபெரி சூப்பர்மூன் தோன்றும் நேரம் இது தான்

வெளியான அறிக்கையின்படி, சூப்பர்மூன் ஜூன் 24, வியாழக்கிழமை பிற்பகல் 2:40 மணிக்கு EDT (18:40 GMT) என்ற நேரத்தில் ஒரு கணம் தோன்றும் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், சாதாரண பார்வையாளருக்கு இது சில நாட்களுக்கு முன்னால் அல்லது வான நிகழ்வுக்குப் பிறகு முழுமையாகத் தோன்றக்கூடும் என்று நாசா தெரிவித்துள்ளது. பூமியில் உள்ள வெவ்வேறு இடங்களில் நிகழும் வெவேறு வளிமண்டலத்தைப் பொறுத்து இதன் நிறம் மாறக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஸ்ட்ராபெரி சூப்பர்மூன் பார்ப்பது எப்படி? இந்தியர்களுக்கு இது தெரியுமா?

இந்தியாவில் ஸ்ட்ராபெரி சூப்பர்மூன் பார்ப்பது எப்படி? இந்தியர்களுக்கு இது தெரியுமா?

துரதிர்ஷ்டவசமாக, இந்தியர்கள் கடைசி சூப்பர்மூனைக் காண முடியாது, ஏனெனில் சந்திரன் இரவு 11:15 மணியளவில் உதயமாகும், அதே நேரத்தில் சந்திரன் இரவு 11:15 மணிக்குக் கிரகணம் தொடங்கும் மற்றும் அதிகாலை 2:35 மணி வரை நீடிக்கும். இதனால் முழு ஸ்ட்ராபெரி மூன் நிகழ்வை நீங்கள் பார்ப்பது கடினம் என்று கூறியுள்ளனர். இருப்பினும், தோராயமாக ஒரு அழகிய வான நிகழ்வை நாம் காண வாய்ப்புள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Strawberry Super moon 2021 How to watch Strawberry Super moon in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X