நாசா: இதுவரை தோன்றிடாத "ஸ்ட்ராபெர்ரி மூன்" நிலவை பார்க்கத் தவறிவிடாதீர்கள்! எப்போது தெரியுமா?

|

நம்மில் பலரும் இரவு வானில் முழு நிலவைக் கண்டால், ஐயோ எத்தனை அழகு என்று முழு நிலவைக் கண்டு சொக்கிப்போய் இருப்போம். இன்னும் சிலர் முடிந்தவரை நம் மொபைல் போனில் ஜூம் செய்து, நிலவைப் படம்பிடித்து வாட்ஸாப் மற்றும் பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் கூட போட்டியிருப்போம்.

அடுத்த இரண்டு நாட்களுக்கு ஸ்ட்ராபெர்ரி மூன்

அடுத்த இரண்டு நாட்களுக்கு ஸ்ட்ராபெர்ரி மூன்

ஸ்ட்ராபெர்ரி மூன் பற்றிய பதிவுகளை அடுத்த இரண்டு நாட்களுக்கு நீங்கள் உங்கள் வாட்ஸாப் மற்றும் பேஸ்புக் ஸ்டேட்டஸில் பதிவிடலாம். இதுவரை உங்கள் வாழ்வில் கண்டிடாத புது நிற நிலவை இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்குப் பார்க்க இயலும் என்று நாசா தற்பொழுது அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.

ஹனி மூன் அல்லது ஸ்ட்ராபெர்ரி மூன்

ஹனி மூன் அல்லது ஸ்ட்ராபெர்ரி மூன்

ஸ்ட்ராபெர்ரி மூன் என்று அழைக்கப்படும் இந்த நிலவிற்கு 'ஹனி மூன்' அல்லது 'மீட் மூன்' என்று வேறு சில பேர்களும் இருக்கிறது.

இறந்த ஓர் மீன்களின் சகுனம் உண்மையானது! இறுதி பேரழிவை நெருங்குகிறதா பூமி?இறந்த ஓர் மீன்களின் சகுனம் உண்மையானது! இறுதி பேரழிவை நெருங்குகிறதா பூமி?

ஸ்ட்ராபெர்ரி மூன் என்று இந்த நிலவிற்கு பெயரிட காரணம் அதன் நிறம் தான். ஸ்ட்ராபெர்ரி பழத்தை போல் அடுத்த இரண்டு நாட்களுக்கு நிலவு சிவப்பாய் பிரகாசிக்குமாம்.

பிங்க் நிறத்திலும் நிலவு

பிங்க் நிறத்திலும் நிலவு

இன்று இரவு முதல் துவங்கி ஜூன் 21 ஆம் தேதி வரை இந்த ஸ்ட்ராபெர்ரி மூன் வானில் தெரியும் என்று நாசா அறிவித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு நிலவு சிவப்பாக இருக்கும், சில இடங்களில் பிங்க் நிறத்திலும் நிலவு காணப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது.

நிலவு ஸ்ட்ராபெர்ரி நிறத்தில் இருக்கக் காரணம் என்ன?

நிலவு ஸ்ட்ராபெர்ரி நிறத்தில் இருக்கக் காரணம் என்ன?

கட்டுப்பாடற்ற வளிமண்டல விளைவுகளினாலும், பூமியின் அடிவானின் மிக அருகாமையில் நிலவு நெருங்கி வரும் காரணத்தினாலும் நிலவு ஸ்ட்ராபெர்ரி நிறத்தில் ஒளிர்கிறது என்று காரணமாகச் சொல்லப்படுகிறது.

பிளிப்கார்ட்: 48எம்பி பிரைமரி கேமராவுடன் ரூ.13,999-விலையில் விற்பனைக்க வரும் ரெட்மி நோட் 7 ப்ரோ.!பிளிப்கார்ட்: 48எம்பி பிரைமரி கேமராவுடன் ரூ.13,999-விலையில் விற்பனைக்க வரும் ரெட்மி நோட் 7 ப்ரோ.!

இந்த ஸ்ட்ராபெர்ரி நிலவை, சென்ற ஆண்டில் தெரிந்த பிளட் மூன் நிலவுடன் ஒப்பிட வேண்டாம் என்றும் நாசா கூறியுள்ளது. அது வேறு வகை நிலவு, இது வேறு வகை நிலவு என்பது குறிப்பிடத்தக்கது.

அழகிய ஸ்ட்ராபெர்ரி நிலவை தவறவிடாதீர்கள்

அழகிய ஸ்ட்ராபெர்ரி நிலவை தவறவிடாதீர்கள்

அடுத்த 2 நாட்களுக்கு சில இடங்களில் நிலவு சிவப்பாய் ஒளிரும் என்றும், மற்ற சில இடங்களில் பிங்க் நிறத்தில் ஒளிரும் என்றும், இதற்குக் கரணம் அங்குள்ள வளிமண்டல விளைவுதான் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

டிக்டாக் சாகசத்தில் நேர்ந்த பரிதாபம்: கழுத்தை உடைத்து கொண்ட இளைஞர்.!டிக்டாக் சாகசத்தில் நேர்ந்த பரிதாபம்: கழுத்தை உடைத்து கொண்ட இளைஞர்.!

இரவு வானில் தோன்றும் இந்த அழகிய ஸ்ட்ராபெர்ரி நிலவைப் பார்ப்பதற்குத் தவறிவிடாதீர்கள்.

வெண்மையாய் தெரிவதற்கும் வாய்ப்புள்ளது

வெண்மையாய் தெரிவதற்கும் வாய்ப்புள்ளது

பல இடங்களில் நிலவு உதயம் ஆகும் பொழுதும் மறையும் பொழுதும் ஸ்ட்ராபெர்ரி நிறத்தில் தெரிவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதென்றும். சில இடங்களில் நடு வானில் நிலவு இருக்கும் பொழுது வெண்மையாய் தான் காணப்படும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Strawberry moon 2019 will be seen from tonight till june 21 dawn : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X