சூரியனில் சுழல் போல் தெரியும் விசித்திரமான வொர்டெக்ஸ்.! காரணம் தெரியாமல் தவிக்கிறதா NASA?
நாசாவின் (NASA) சோலார் டைனமிக் அப்சர்வேட்டரியை (Solar Dynamic Observatory) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், சூரியனின் வட துருவத்தில் (North Pole) சுழல் போன்ற சூரிய புயல் (Solar Vortex) ஒன்றை கண்டறிந்துள்ளனர். அந்த சூழலில் இருந்து சில துகள்கள் விண்வெளியில் வெளியிடப்படுவதையும் அந்த நிகழ்வில் கண்டுள்ளனர்.
நாசாவின் சோலார் டைனமிக் அப்சர்வேட்டரி வெளியிட்ட சூரிய வொர்டெக்ஸ் (Sun Vortex) தொடர்பான வீடியோவை, பிரபல விண்வெளி வானிலை ஆய்வாளர், டமிதா ஸ்கோவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். இந்த நிகழ்வானது, இம்முறை மட்டும் நடந்துள்ளது என்று நினைக்க வேண்டாம் மக்களே.! 11 ஆண்டுகள் காலகட்டத்தில் நடக்கும் சோலார் சைக்கிளில் (Solar Cycle) ஒவ்வொரு முறையும் இந்த நிகழ்வு நடந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சூரியனில் தெரியும் விசித்திரமான வொர்டெக்ஸ்.! ஒரே இடத்தில் மீண்டும்-மீண்டும் தோன்றும் சூழல்.!
ஒவ்வொரு சோலார் சைக்கிளின் பொழுதும், சூரியனின் '55 டிகிரி' கோணத்தில் மட்டுமே இந்த நிகழ்வு காணப்படுவதாக கோளோரடோவின் (Colorado) நேஷனல் சென்டர் ஃபார் அட்மாஸ்ஃபெரிக் ரிசர்ச் இன் பவுல்டர் (National centre for Atmospheric Research in Boulder) நிறுவனத்தைச் சேர்ந்த, சோலார் பிசிஸ்ட் (Solar Physicist) மற்றும் துணை நிறுவனர் ஸ்காட் மேக்கின்டோஷ் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு சோலார் சைக்கிளின் போதும், குறிப்பிட்ட நிகழ்வுகள் நடப்பது வழக்கம். அதாவது சோலார் சைக்கிள் ஆரம்பிக்கும் பொழுது, சூரியனில் சன் ஸ்பாட்டுகள் (Sun Spot), சோலார் ஃப்ளார்கள் (Solar Flare), கொரோனல் மாஸ் எஜெக்ஷன் (Coronal Mass Ejection) என்று அனைத்துமே - ஒவ்வொரு 11 ஆண்டுக்கு ஒரு முறையும் நடக்கும். அப்படி இருக்கும் போது, இந்த ஒரு நிகழ்வை மட்டும் ஆராய்ச்சியாளர்கள் உற்று நோக்குவதற்கான காரணம் என்ன?

ஒவ்வொரு 11 ஆண்டும் ஒரே இடத்தில் தோன்றும் சூழலால் NASA குழப்பம்.!
மேலே கூறியது போல, ஒவ்வொரு சோலார் சைக்கிளிலும் (Sun's solar cycle) சன் ஸ்பாட்டுகள் உருவாகும். அந்த சன் ஸ்பாட்டுகளில் இருந்து சோலார் ஃப்ளார்கள் வெளியிடப்படும். ஆனால், அவை எதுவும் ஒரே இடத்தில் நிகழாது. ஒரு சோலார் சைக்கிளின் போது, குறிப்பிட்ட இடத்தில் சன் ஸ்பாட் தோன்றினால், அடுத்த சைக்கிளில் அது வேறு ஒரு இடத்தில் தோன்றும். இது தான் சூரியனில் நிகழும் வழக்கமான விஷயமாகும்.
ஆனால், இந்த வட துருவ சோலார் சுழற்சி நிகழ்வு (Sun's north solar pole vortex) மட்டும் குறிப்பிட்ட 55 டிகிரி லாட்டிட்யூடில் (Latitude) மட்டுமே ஒவ்வொரு 11 ஆண்டும் தோன்றுகிறது. இது தான் ஆராய்ச்சியாளர்களின் ஆர்வத்தை தூண்டுவதற்கான ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. எப்படி ஒவ்வொரு 11 ஆண்டுக்கு ஒரு முறை ஒரே இடத்தில் இந்த சூரிய வொர்டெக்ஸ்கள் (Sun's Vortex at Solar North Pole) தோன்றுகின்றன என்பதே இவர்களுடைய ஆச்சரியமாக இருக்கிறது.

11 ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் வொர்டெக்ஸ் வர காரணம் என்ன?
ஒவ்வொரு சோலார் சைக்கிளிலும், இந்த நிகழ்வு குறிப்பிட்ட இடத்தில் நடக்கிறது என்பது மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதே தவிர, இதற்கான சரியான காரணம் என்ன? என்பது இப்பொழுது வரை மர்மமாகவே உள்ளது. சோலார் சைக்கிளானது, சூரியனின் காந்த சக்தியுடன் இணைந்துள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
குறிப்பாக, ஒவ்வொரு சோலார் சைக்கிளும் வட துருவத்தில் இந்த நிகழ்வு நடப்பது சூரியனின் காந்த சக்தியுடன் தொடர்பு கொண்டிருக்குமோ? என்ற கோணத்தில் ஆராய்ச்சியாளர்கள் சிந்திக்க ஆரம்பித்துள்ளனர். மேலும், மேக்கின்டோஷ் பேசும்போது, சூரியனில் வட துருவத்தில் காணப்படும் இந்த சூரிய புயல் சுழற்சி (Solar storm vortex) போன்ற நிகழ்வை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் மட்டுமே காண முடிகிறது.
ஐரோப்பாவின் ஸ்பேஸ் ஏஜென்சி சோலார் ஆர்பிட்டர் மிஷன்னானது (The European Space Agency Solar Orbiter Mission), இந்த நிகழ்வின் மேல் இனிவரும் காலங்களில் தங்களது கவனத்தைத் திருப்பினால் சிறப்பாக இருக்கும் என்று கூறினார். அதுமட்டுமின்றி, சூரியனின் வட துருவத்தில் நடக்கும் இந்த சூரிய புயல் சுழற்சியை ஆராய்ந்து பார்ப்பதற்கென்று ஒரு புதிய மிஷனை (Mission) ஆரம்பித்தாலும் அது பயனுள்ளதாகத்தான் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஒரே இடத்தில் மீண்டும்-மீண்டும் தோன்றும் சூரியன் வொர்டெக்ஸ் பின்னணியில் என்ன இருக்கிறது? என்பதைத் தெரிந்துகொள்ள விஞ்ஞானிகள் ஆர்வமாகியுள்ளனர்.


Click it and Unblock the Notifications








