சுருட்டு வடிவில் சிக்கிய விண்கல் ஏலியன் ஷிப் ஆக இருக்கலாம், கிளம்பும் புது பீதி!
இந்த இடத்தில தான் இரண்டு கோட்பாடுகள் கிளம்புகிறது, ஒன்று இது விண்வெளி தொலைநோக்கிகளில் கூட சிக்காத அளவு மிகவும் சிறியதாக இருக்க வேண்டும்.
சூரிய குடும்பத்தில் கிரகங்கள் எப்படி சூரியனை மையமாக கொண்டு சுற்றி வருகிறதோ, அதே போன்றதொரு மையப்பொருளை கொண்டு சுற்றித்திரியும் ஒரு "பக்கத்து வீட்டு" விண்வெளி பொருளை, நமது சூரிய மண்டலத்திற்குள் கண்டுபிடிப்போம் என்று விஞ்ஞானிகள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருக்கிறார்கள்.
அந்த எதிர்பார்ப்பு பூர்த்தியானது, ஆனால் அது இவ்வளவு வித்தியாசமாக இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. கடந்த ஆண்டு சூரியனை கடக்கும் போது கண்ணில் சிக்கிய ஒரு விண்வெளி பொருள் தான் ஓமுவாமுமா. ஆராய போதுமான நேரம் கிடைக்காவிட்டாலும், வரையறுக்கப்பட்ட கவனிப்பு நேரத்திலிருந்து, வானியலாளர்கள் ஓமுவாமுமா ஒரு சிறிய சிகார் வடிவ விண்பொருள் என்பதை மட்டும் நிர்ணயித்திருக்கிறார்கள், ஆனால் அது எவ்வளவு சிறியது என்பது தெரியவில்லை.

ஏலியன் போர் கப்பல்?
ஸ்பிட்சர் விண்வெளி தொலைநோக்கியுடன் அதன் மீதான ஒரு பின்தொடர்தல் கண்காணிப்பை முயற்சித்த போது அது கண்ணில் பாடாமல் தப்பிப்பது. இந்த இடத்தில தான் இரண்டு கோட்பாடுகள் கிளம்புகிறது, ஒன்று இது விண்வெளி தொலைநோக்கிகளில் கூட சிக்காத அளவு மிகவும் சிறியதாக இருக்க வேண்டும். இது ஒரு ஏலியன் போர் கப்பல் இயந்திரமாக (ஸ்பேஸ் ஷிப்) இருக்க வேண்டும்.

வெளியே சென்று கொண்டு இருந்தது!
இந்த விசித்திரமான விண்கல் ஆனது யுனிவர்சிட்டி ஆப் ஹவாயில் உள்ள பான்-ஸ்டார்ராஸ் 1 தொலைநோக்கி பயன்படுத்தி கடந்த 2017 ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சமயத்தில், இந்த ஓமுவாமுமா விண்கல் ஆனது சூரியனைச் சுற்றி வளைந்த நிலையில் நமது சூரிய மண்டலத்திலிருந்து வெளியே சென்று கொண்டு இருந்தது.

எங்கு தொடங்குகிறது!
இது நமது சூரிய குடும்பத்தை சேர்ந்த விண்கல் இல்லை என்பதால் இதன் வேகம் மற்றும் போக்கு ஆகியவற்றின் பகுப்பாய்வை நிகழ்த்த முடியவில்லை. இந்த இடத்தில் ஓமுவாமுமா ஆனது நமது சூரிய மண்டலத்தில் தோன்றியிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிகிறது. ஒவ்வொரு விஞ்ஞானியும், ஓமுவாமுமா விண்கல்லின் வீட்டு அமைப்பு இதுவாக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளனர், ஆனால் உண்மையில் எங்கு தொடங்குகிறது என்பது யாருக்கும் தெரியாது.

அகச்சிவப்பு ரீடர் வழியாக!
அதனை கண்டுபிடிக்கும் முனைப்பின் கீழ், ஓமுவாமுமா விண்கல் ஆனது பூமியை (நெருக்கமாக) கடக்கும் போது, நாசாவின் ஸ்பிட்சர் தொலைநோக்கியில் சிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக ஸ்பிட்சர் டெலஸ்க்கோப்பின் அகச்சிவப்பு ரீடர் வழியாக சாத்தியமான வால்மீனின் தன்மையின் மீது கூடுதலாக வெளிச்சம் பாய்ச்சலாம் இரு ஆரய்ச்சியாளர்கள் நம்பினார்கள். ஆனால் ஓமுவாமுமா விண்கல், தொலைநோக்கியின் கண்களில் சிக்கவே இல்லை.

மூன்று வெவ்வேறு மாதிரிகளை உருவாக்கியது!
ஆரம்பத்தில் இந்த ஓமுவாமுமா விண்கல் ஆனது சுமார் 2,600 அடி (800 மீட்டர்) வரை இருக்கலாம் என்று கூறப்பட்டது. அதனால் தான் ஸ்பிட்சர் வழியாக கண்டுபிடிக்கலாம் என்று திட்டமிடப்பட்டது. ஆனால், கண்டறியப்பட முடியவில்லை என்கிற நிலைப்பாட்டில், நாசா இந்த சுருட்டு விண்கல்லின் "நிஜமான" அளவை பற்றிய தெளிவை பெற மூன்று வெவ்வேறு மாதிரிகளை உருவாக்கியது.

சுவாரசியமான (கற்பனை) கோட்பாடு கிளம்புகிறது!
அதன்படி இந்த விண்வெளி பொருள் ஆனது, அதிக பட்சம் 1,440 அடி (440 மீட்டர்) நீளத்தில் இருந்து குறைந்த பட்சம் 320 அடி (100 மீட்டர்) நீளம் மட்டுமே இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் தான், ஓமுவாமுமா ஆனது ஒரு இயற்கையான விண்வெளி பொருளாக இருக்க முடியாது, அது ஒரு வேற்றுலக விண்கலமாக இருக்கக்கூடும் என்கிற சுவாரசியமான (கற்பனை) கோட்பாடு கிளம்புகிறது.
தன்னுள் ஏதேனும் ரகசியங்களையும் வைத்திருந்தால்!
ஆனால் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவோ, உண்மையில் இது ஒரு சிறிய, குறைந்த நடவடிக்கைகளை கொண்ட வால்மீன் தான் என்று நம்புகிறது. இதன் சிக்கலான பாதைக்கு காரணம், அதன் மேற்பரப்பிலிருந்து வெளியாகும் வாயுக்களின் கசிவுகளின் வாயிலாக விளைகின்றன என்கிறது நாசா. ஒருவேளை இந்த விசித்திரமான விண்கல், தன்னுள் ஏதேனும் ரகசியங்களையும் வைத்திருந்தால், அதை இன்னும் சில ஆண்டுகள் கழித்து (சூரிய குடும்பத்திற்குள் நுழையும் போது) தான் நாம கண்டுபிடிக்க முடியும். ஏனெனில், இப்போதே அது தொலைநோக்கியால் பார்க்க முடியாத தொலைவில் உள்ளது.


Click it and Unblock the Notifications