விண்வெளியில் 16 நாட்களுக்கு ஒரு முறை தோன்றும் விசித்திரமான சிக்னல்! தொடரும் சர்ச்சை!

|

கனடாவில் உள்ள விஞ்ஞானிகள் பூமியிலிருந்து சுமார் 500 மில்லியன் ஒளி ஆண்டுகளிலிருந்து வரும் ஒரு சக்திவாய்ந்த விசித்திரமான ரேடியோ சிக்னலை அடையாளம் கண்டுள்ளனர். இந்த விசித்திரமான சக்திவாய்ந்த சிக்னல் 16 நாட்களுக்கு ஒருமுறை என்ற சுழற்சியில் ஒளிபரப்பப்படுகிறது என்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.

சக்திவாய்ந்த சிக்னலின் மூலம் எங்கிருக்கிறது?

சக்திவாய்ந்த சிக்னலின் மூலம் எங்கிருக்கிறது?

உண்மையில் இந்த விசித்திரமான, சக்திவாய்ந்த சிக்னலின் மூலம் எங்கிருக்கிறது, இதில் என்ன தகவல் ஒளிந்துள்ளது என்ற தீவிர ஆராய்ச்சியில் கனடாவின் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் களமிறங்கியுள்ளார். இந்த விசித்திரமான சிக்னலை விஞ்ஞானிகள் மீண்டும் மீண்டும் கேட்க முடிகிறது என்றும் கூறியுள்ளனர். இதன் பின்னால் உள்ள உண்மை என்ன என்பது தெரியாமல் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.

ஃபாஸ்ட் ரேடியோ பர்ஸ்ட்- FRB என்றால் என்ன?

ஃபாஸ்ட் ரேடியோ பர்ஸ்ட்- FRB என்றால் என்ன?

ஃபாஸ்ட் ரேடியோ பர்ஸ்ட் (Fast radio burst - FRB) என்றழைக்கப்படும் இந்த ரேடியோ சிக்னல்கள், குறிப்பிட்ட கால இடைவேளையில் காணப்படும் முதல் ஃபாஸ்ட் ரேடியோ பர்ஸ்ட்கள் என்று, ஜனவரி இறுதியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்த மர்மமான சிக்னல்களின் மூலத்தை அடையாளம் காண கால இடைவேளை உதவும் என்று நம்புகின்றனர்.

Google-ல் தேடவே கூடாத 10 விஷயங்கள்! வீனா ஆபத்தில் சிக்காதீர்கள்!Google-ல் தேடவே கூடாத 10 விஷயங்கள்! வீனா ஆபத்தில் சிக்காதீர்கள்!

விசித்திரமான சிக்னல் பின்னால் உள்ள பின்னணி என்ன?

விசித்திரமான சிக்னல் பின்னால் உள்ள பின்னணி என்ன?

FRB 180916.J0158 + 65 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரேடியோ சிக்னல் அலைகள், நான்கு நாட்கள் டிரான்ஸ்மிட் செய்யப்படுகிறது, பின்னர் அமைதியாகிவிடுகிறது. அதற்குப்பின், அதன் சுழற்சியை மீண்டும் தொடங்குவதற்கு முன்பு மற்றொரு பன்னிரண்டு நாட்கள் வரை அமைதியாக இருக்கிறது என்று இந்த சிக்னலை ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

டீப் ஸ்பேஸ்-ன் சிக்னல்

டீப் ஸ்பேஸ்-ன் சிக்னல்

முதன்முதலில் 2007 ஆண்டில் தான் ஃபாஸ்ட் ரேடியோ பர்ஸ்ட் சிக்னல் கண்டறியப்பட்டன, இவை ரேடியோ சிக்னல்களின் பெரியளவு அலைகள், டீப் ஸ்பேஸ்-ன் வெவ்வேறு திசைகளிலிருந்து இந்த சிக்னல்கள் வருவது கண்டறியப்பட்டுள்ளது. வழக்கமாக இந்த சிக்னல்கள் ஒரு சில மில்லி விநாடிகளுக்கு மேல் நீடிக்காது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளார்.

உடனே இந்த 9 அப்ஸ்களை டெலீட் செய்யுங்கள்! இல்லைனா உங்க அக்கௌன்ட் ஹேக் செய்யப்படும்!உடனே இந்த 9 அப்ஸ்களை டெலீட் செய்யுங்கள்! இல்லைனா உங்க அக்கௌன்ட் ஹேக் செய்யப்படும்!

இதுவரை எத்தனை முறை இந்த FRB கண்டறியப்பட்டுள்ளது?

இதுவரை எத்தனை முறை இந்த FRB கண்டறியப்பட்டுள்ளது?

விண்வெளி ஆராய்ச்சியில் மிகவும் மர்மமான நிகழ்வுகளில், இந்த FRB சிக்னல்கள் முக்கிய ஒன்றாகும் மற்றும் சில நேரங்களில் இவை விண்வெளியில் தோன்றி மறைகின்ற, உண்மையில் இதன் பின்னணியில் என்ன காரணம் உள்ளது என்று சொல்ல முடியவில்லை என்று வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற நிகழ்வுகள் இதுவரை சுமார் 200-க்கும் அதிகமான முறை கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஞ்ஞானிகளுக்கு கிடைத்த முக்கிய துப்பு

விஞ்ஞானிகளுக்கு கிடைத்த முக்கிய துப்பு

செப்டம்பர் 2018 மற்றும் அக்டோபர் 2019-க்கு இடையில் கனேடிய, ஹைட்ரஜன் இன்டென்சிட்டி மேப்பிங் பரிசோதனையின் பாஸ்ட் ரேடியோ பர்ஸ்ட் திட்டத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு குறிப்பிட்ட FRB-ஐ கண்டறிந்து, அதன் சிக்னல் பாட்டர்னை (Pattern) கவனித்துள்ளனர். இந்த 16.35 நாள் கால இடைவெளியில் தோன்றும் இந்த சிக்கனலின் ஒரு முக்கிய துப்பு இதுவென்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Google அடித்த அபாய மணி: சீனாவிலிருந்து அடுத்த பிரச்னை., யோசிக்காம இதையெல்லாம் அன்இன்ஸ்டால் செய்யவும்Google அடித்த அபாய மணி: சீனாவிலிருந்து அடுத்த பிரச்னை., யோசிக்காம இதையெல்லாம் அன்இன்ஸ்டால் செய்யவும்

காரணம் இதுவாக இருக்குமோ!

காரணம் இதுவாக இருக்குமோ!

இந்த சிக்னல்களின் கால இடைவெளிக்கு ஒரு சாத்தியமான விளக்கம் என்னவென்றால், FRB மூலமானது ஒரு கருந்துளையைச் சுற்றிவருகிறது, இது மூலத்தைச் சுற்றி நகரும்போது பர்ஸ்ட்கள் மறைக்கப்படுகிறது என்று கருதப்படுகிறது.

அல்லது காரணம் இதுவாக இருக்குமோ?

அல்லது காரணம் இதுவாக இருக்குமோ?

ஒரு பெரிய நட்சத்திரத்திலிருந்து, சக்திவாய்ந்த சூரியக் காற்றிசை ஒரு சுற்றுப்பாதை மூலத்திலிருந்து சிக்னலின் நடுவே குறுக்கிடுகிறது என்று கணிக்கப்பட்டுள்ளது. அல்லது இதன் மூலமானது அவ்வப்போது பர்ஸ்ட்டை குறிப்பிட்ட கால இடைவெளியில்உருவாக்குகிறது என்று விஞ்ஞானிகள் சதேகிக்கின்றனர்.

பலாத்காரம் செய்ய வந்த திருடன்: பெண் சொன்ன ஒரே வார்த்தையில் தெரித்து ஓட்டம்- என்ன சொன்னார் தெரியுமா!பலாத்காரம் செய்ய வந்த திருடன்: பெண் சொன்ன ஒரே வார்த்தையில் தெரித்து ஓட்டம்- என்ன சொன்னார் தெரியுமா!

உண்மையை அறிய விஞ்ஞானிகளின் தீவிரம்

உண்மையை அறிய விஞ்ஞானிகளின் தீவிரம்

இந்த சிக்னல் பற்றிய கூடிய விபரங்களையும், உண்மையை அறிந்துகொள்ள விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். உண்மையில் இதன் மூலம் எங்கிருக்கிறது, என்ன விதமான காரணத்தினால் இவை 16 நாட்களுக்கு ஒரு முறை தோன்றுகிறது என்ற பின்னணியைக் கூடிய விரைவில் விஞ்ஞானிகள் விளக்கத்துடன் சமர்ப்பிப்பார்கள் என்று உறுதிப்படத் தெரிவித்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
Strange Fast Radio Burst Signal That Appears Once In 16 Days In Deep Space Has Found : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X