200 ஆண்டுகளுக்குள் பூமி அழியும்; ஸ்டீபன் ஹாகிங்கின் "அந்த" 7 காரணங்கள்!

|

மிகவும் பிரபலமான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு பிறகு, நன்கு அறியப்பட்ட ஒரு விஞ்ஞானி- ஸ்டீபன் ஹாக்கிங் என்றால் அது மிகையாகாது. இயற்பியல் மற்றும் அண்டவியல் பற்றிய அவரது புனைவுப் படைப்புகளுக்காக மிகவும் பரவலாக அறியப்பட்ட ஹாக்கிங் தனது எட்டாம் வயதில் தான் படிப்பது எப்படி என்பதை அறிந்தார், பல்கலைக்கழகத்தில் ஒரு சோம்பேறி மாணவராக இருந்தார், தன் 21 ஆம் வயதில் தனது நோயின் காரணமாக முற்றிலுமாக முடங்கினாலும் கூட உலகின் மீதான தனது கண்ணோட்டத்தை முழுமையாக மாற்றினார் மற்றும் அவரது முழு வாழ்வையும் அண்டவியலுக்கு அர்ப்பணித்தார்.

200 ஆண்டுகளுக்குள் பூமி அழியும்; ஸ்டீபன் ஹாகிங்கின்

அவரது புத்திசாலித்தனமான கோட்பாடுகளில் சில நம் பிரபஞ்சம் எவ்வாறு மிக ஆழமான முறையில் செயல்படுகிறது என்பதை விளக்குகிறது. மறுகையில், இந்த அழகான உலகம் அடுத்த 200 ஆண்டுகளுக்கு தாக்கு பிடிக்காது என்றும் கூறுகிறது. அப்படியாக, நம் உலகம் எப்படி முடிவுக்கு வரும் என்கிற காரணங்களையும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று ஹாக்கிங் கணித்த மிக பயங்கரமான காரியங்களில் சிலவற்றையும் நாங்கள் இங்கே தொகுத்து உள்ளோம்!

07. மரபணு மாற்றப்பட்ட தடுப்பூசிகள் வியத்தகு விளைவுகளுக்கு வழிவகுக்கும்!

07. மரபணு மாற்றப்பட்ட தடுப்பூசிகள் வியத்தகு விளைவுகளுக்கு வழிவகுக்கும்!

மனிதகுலத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆனது அண்டத்தில் இருந்து வராது, அதை பூமி வாசிகளே உருவாக்கி கொள்வார்கள் என்கிறார் ஹாக்கிங். நீண்ட காலத்திற்கு முன்னர், விஞ்ஞானிகள் மனித நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக மரபணு பொறிக்கப்பட்ட வைரஸுகளை பயன்படுத்தினர். ஆனால் அவைகள் சில வேறுபட்ட பாதிப்புகளை உருவாக்குகிறது என்பதை பின்னர் கண்டுபிடித்தனர். அந்த காலத்திலேயே அப்படி என்றால், இப்போது சொல்லவே வேண்டாம். தற்கால மருந்தாளர்கள் பல ஆபத்தான வைரஸ்களை ஒன்றிணைத்து பார்த்து வருகின்றனர். எடுத்துக்காட்டிற்கு மக்களிடமிருந்தும், மாடுகளிடமிருந்தும், நாய்களிலிருந்தும் டி.என்.ஏக்களை சேகரித்து அதை ஒன்றாக கலக்கிறார்கள். பிரச்சனை என்னவென்றால், இதுபோன்ற தடுப்பூசிகளின் நீண்ட கால சேதத்தை நம்மால் ஆரம்பத்தில் அறிந்து கொள்ள முடியாது என்பதே ஆகும்.

6. ஏலியன்ஸ் எனப்படும் வேற்று கிரக வாசிகள் நமது கிரகத்தை ஆக்கிரமிப்பார்கள்!

6. ஏலியன்ஸ் எனப்படும் வேற்று கிரக வாசிகள் நமது கிரகத்தை ஆக்கிரமிப்பார்கள்!

பிரபஞ்சத்தில் மற்ற உயிரினங்களும் உள்ளன, அவைகள் நமக்கு நட்பானவைகளாக இருக்கும் என்பதில் உறுதிப்பாடு இல்லை என்று ஹாக்கிங் நம்பினார்.அவரின் கோட்பாட்டின் படி, நமது பிரபஞ்சம் ஆனது ஒரு தனித்த பிரபஞ்சம் அல்ல, பல தனித்தனி பிரபஞ்சங்களில் ஒன்றாகும். நாம் (மனிதர்கள்) பிரபஞ்சத்தில் தனியாக இல்லை என்பதை நிரூபிக்கும் சான்றுகள் இல்லை என்றாலும் கூட, ஏலியன்ஸ் இருக்கும் பட்சத்தில் அவைகள் ஆதாரங்களை தேடும் நோக்கத்தின் கீழ் மற்ற கிரங்களை அழிக்க விரும்பும் வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது.

5. பிரபஞ்சம் அதன் முடிவை எட்டும்!

5. பிரபஞ்சம் அதன் முடிவை எட்டும்!

எப்படி ஒரு நட்சத்திரம் தனது முடிவை எட்டுமோ, அதே போல் பூமியும் தனது முடிவை எட்டும் என்றும் ஹாக்கிங் நம்பினார். அதை தன அவரது இறுதிப் பணியான 'ஏ ஸ்மூத் எக்கிஸ்ட் ப்ரம் எடர்னல் இன்லேஷனும் (A Smooth Exit From Eternal Inflation) ஆதரிக்கிறது. அதாவது அனைத்து நட்சத்திரங்களும் அதன் ஆற்றல்களை இழக்கும் போது நமது பிரபஞ்சம் இருளுக்குள் மறைந்துவிடும். அதனால்தான், அவருடைய கருத்துக்கள், "நாம் உயிர்வாழ விரும்புவோமானால், பிற பிரபஞ்சங்களை விரைவில் பெற வேண்டும்." என்கிறது.

4. ரோபோக்கள் மனித இனத்தை அழிக்கும்!

4. ரோபோக்கள் மனித இனத்தை அழிக்கும்!

ஹேக்கிங் தனது முழு வாழ்க்கையையும் செயற்கை நுண்ணறிவின் கீழ் இயக்கிய போதிலும் கூட, அவர் அதை நம்பவில்லை. என்றாவது ஒருநாள் அது (ஏஐ - ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்) நம் மனித வரலாற்றின் மிக மோசமான கண்டுபிடிப்பாக இருக்கக்கூடும் என்று அவர் நம்பினார். ஒரு கட்டத்திற்கு மேல் அவைகள், மனித இனத்தை கட்டுப்படுத்தும் பின் அழிக்கும் என்று அவர் அஞ்சினார்.

3. அணு ஆயுதங்கள் மனித இனத்தை அழிக்கும்!

3. அணு ஆயுதங்கள் மனித இனத்தை அழிக்கும்!

ஹக்கிங்கின் கருத்தின் கீழ், ஆக்கிரமிப்பும் மற்றும் பகுத்தறிவு சார்ந்த நடத்தைகளும் தான் மோசமான மனித குணங்களாக இருக்கின்றன.தற்கால மோதல்கள் அதை நிரூபித்து வருகின்றன. ஆக ஹாக்கிங் கூறும் அந்த "அழித்தல்" குணம் குறையவில்லை, கூடிக்கொண்டே போகிறது என்றே கூறலாம். அதன் வெளிப்பாடு தான் இராணுவமயமான தொழில்நுட்பம் மற்றும் பேரழிவு ஆயுதங்கள் ஆகியவற்றின் உருவாக்கம். இவைகள் அழிவுகரமான விளைவுகளுக்குள் நம்மை தள்ளும், ஒருகட்டத்தில் இது நமது உலகின் முடிவாக கூட இருக்கலாம்.

2. நாம் வாழ மற்றொரு கிரகத்தை கண்டுபிடிக்க வேண்டும்!

2. நாம் வாழ மற்றொரு கிரகத்தை கண்டுபிடிக்க வேண்டும்!

ஹாக்கிங்கின் கூற்றுப்படி, அடுத்த 100 ஆண்டுகளுக்குள் நாம் வாழ்வதற்கு இன்னொரு கிரகத்தை கண்டுபிடிக்க வேண்டும். இல்லையென்றால் பெருமளவிலான மக்கள் தொகை வளர்ச்சி, மாசுபாடு, காடழிப்பு மற்றும் தொற்றுநோய்கள் போன்ற பல பிரச்சினைகளை நாம் எதிர்கொள்ள நேரிடும். சரி, பூமியை தவிர்த்து எதிர்காலத்தில் நாம் வசிக்கக்கூடிய கிரங்கள் எதாவது உள்ளதா என்று கேட்டால், ஒரு பட்டியலே உள்ளது. அந்த பட்டியலில் - பூமியின் இயற்கையான செயற்கைக்கோள் என்றும் அழைக்கப்படும் சந்திரன், நச்சு மண், நசுக்கும் குளிர் மற்றும் மூச்சுத்திணறலை வாரி வழங்கும் வளிமண்டலம் கொண்ட செவ்வாய் கிரகம், வியாழன் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு இடையே அமைந்துள்ள ஒரு குள்ள கிரகமான செர்ரஸ், தண்ணீரின் வெளிப்பரப்பை வெளிப்படுத்தும் ஒரு பனிக்கட்டி மேலோடு கொண்டு மூடப்பட்டிருக்கும் வியாழனின் நான்காவது மிகப்பெரிய நிலவு யூரோபா, சனிக்கோளின் மிகப்பெரிய சந்திரன் ஆன டைடன், பூமியின் "உறவினர்" என்று அழைக்கப்படும் கெப்ளர் - 452பி ஆகியவைகள் அடங்கும்.

01. பூமி ஒரு தீப்பந்தாக மாறும்!

01. பூமி ஒரு தீப்பந்தாக மாறும்!

ஹாக்கிங்கின் கணிப்பின் படி, 600 ஆண்டுகளுக்கும் குறைவான காலங்களில் நம்முடைய கிரகம் ஒரு ஃபயர்பால் ஆக, அதாவது ஒரு நெருப்பு பந்தாக மாறும். அதற்கு ஆகப்பெரும் காரணமாக எரிசக்தி நுகர்வும், புவி வெப்பமடைதலும் இருக்கும் என்கிறார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Stephen Hawking Said the Earth Will Cease to Exist in 200 Years, Here Are Our Options: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X