விண்வெளியில் உலா வரும் ஸ்டீபன் ஹாக்கிங்கின் குரல்.!

  இயற்பியல் மற்றும் பிரபஞ்சம் பற்றிய ஆய்வில் சிறந்து விளங்கிய ஸ்டீபன் ஹாக்கிங்கின் குரல் விண்வெளியில் உலா வரும் வகையில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. அமைதி மற்றும் நம்பிக்கை குறித்த ஸ்டீபன் ஹாக்கிங்கின் பேச்சு விண்வெளியில் ஒளிபரப்பப்படும் என அவருடைய மகள் தெரிவித்ததற்கு ஏற்ப. ஜீன், 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இந்நிகழ்வு நடந்தது. இலண்டன் நகரில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அபேவில் உள்ள தேவாலயத்தில் ஸ்டீபன் ஹாக்கிங்கின் ஆன்ம அமைதிக்கான நினைவு அஞ்சலி நடைபெற்றது. இந்நிகழ்வுக்குப் பிறகு ஸ்டீபன் ஹாக்கிங்கின் குரல் விண்வெளியில் ஒலிபரப்பப்பட்டது.

  விண்வெளியில் உலா வரும் ஸ்டீபன் ஹாக்கிங்கின் குரல்.!

  உலகம் முழுவதும் உள்ள அறிஞர்களின் போற்றுதலுக்கு உரியவரான ஸ்டீபன் ஹாக்கிங் கடந்த மார்ச் மாதம் தன்னுடைய 76ஆவது வயதில் இறந்தார். பிரபஞ்சத்தின் தோற்றம், கருந்துளைகள் பற்றிய உண்மைகள் ஆகியன குறித்துத் தன் வாழ்நாள் முழுவதும் ஆய்வு செய்தவர் இயற்பியல் அறிஞரான ஸ்டீபன் ஹாக்கிங்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  இருபெறும் அறிஞர்களுக்கு இடையே புதைந்த ஸ்டீபன் ஹாக்கிங்

  ஸ்டீபன் ஹாக்கிங் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் தேதி இறந்தார். இவருடைய இறுதிச் சடங்குகள் மார்ச் மாதம் 31ஆம் தேதி கேம்பிரிட்ஜ் நகரில் நடைபெற்றன. ஜீன் 15ஆம் தேதி வெள்ளிக் கிழமையன்று இவருடைய சாம்பல், இலண்டனில் உள்ள புகழ்ப்பெற்ற வெஸ்ட் மினிஸ்டர் அபேவில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்ததன் மூலம் நவீன அறிவியலில் மிகப்பெறும் மாற்றத்தைக் கொண்டு வந்த நியூட்டன் மற்றும் உயிர்களின் பரிணாமக் கோட்பாட்டின் மூலம் அறிவியல் உலகத்துக்குப் புத்தொளியூட்டிய சார்லஸ் டார்வின் ஆகிய இருவரின் கல்லறைக்கு இடையே ஸ்டீபன் ஹாக்கிங்கின் சாம்பல் புதைக்கப்பட்டது.

  வெஸ்ட் மினிஸ்டர்

  வெஸ்ட் மினிஸ்டர் அபேவில் உள்ள கல்லறையில் புகழ்ப்பெற்ற கவிஞர்கள், அறிஞர்கள் மற்றும் மாமேதைகளின் உடல்கள் மட்டுமே அடக்கம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலங்களில் இங்கு அடக்கம் செய்யப்பட்ட அறிவியல் அறிஞர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் உள்ளது. அணு இயற்பியல் முன்னோடியான ரூதர்ஃபோர்டின் உடல் 1937ஆம் ஆண்டிலும், எலக்ட்ரானைக் கண்டுபிடித்த ஜோசப் ஜான் தாம்சனின் உடல் 1940ஆம் ஆண்டிலும் இங்கு அடக்கம் செய்யப்பட்டது.

  தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 பேருக்கு மட்டுமே அனுமதி

  இந்நிகழ்வில் உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். அவரின் உடல் அடக்கத்திற்குப் பிறகு, ஸ்பெய்ன் நாட்டின் சிப்ரோஸ் (Ceberos) என்னும் இடத்தில் அமைந்துள்ள ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் செயற்கைக் கோள் டிஸ் (Dish) மூலமாக ஸ்டீபன் ஹாக்கிங்கின் பதிவு செய்யப்பட்ட கூட்டிணைவுக் குரல் (synthesised voice) விண்வெளியில் ஒளிபரப்பப்பட்டது.

  ஸ்டீபன் ஹாக்கிங்கின் கனவு

  இக்குரல் விண்வெளியில் உள்ள 1A 0620-00 என்னும் கருந்துளையை (black hole) நோக்கி ஒலிபரப்பப்பட்டது. தன் வாழ்நாளில் ஒரு முறையாவது விண்வெளிக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது ஸ்டீபன் ஹாக்கிங்கின் கனவாகும். அதனை நிறைவேற்ற அவருடைய உடல் நிலை ஒத்துழைக்கவில்லை. இந்த அதிசய அறிவியல் மனிதரைப் பெருமைப்படுத்தும் விதமாக அவருடைய குரல் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

  குரல் தரும் செய்தி…

  "இந்தப் பூமிப்பந்தில் வாழும் ஒவ்வொருவரும் தங்களுக்குள் ஒருங்கிணைந்து மகிழ்ச்சியோடு வாழ்வதற்குத் தேவையான அமைதி மற்றும் நம்பிக்கை என்னும் இரண்டு விசயங்களை மையப்படுத்தியதாக ஸ்டீபன் ஹாக்கிங்கின் குரல் பதிவு அமைந்திருந்தது" என்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்கின் மகள் லூஸி.

  அதிசயங்களே அசந்துபோகும் அற்புத மனிதர்

  1948 ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தவர் ஸ்டீபன் ஹாக்கிங். தன்னுடைய 21ஆம் வயதில் அரியவகை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டார். இவருடைய உடல் முழுவதும் செயல் இழந்து விட்டது. அதிகப்பட்சம் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் உயிரோடு இருக்க மாட்டார் என மருத்துவர்கள் கூறினர். "உறுப்புகள் அனைத்தும் செயல் இழந்தாலும் என்னுடைய மூளை செயல் இழக்கவில்லை, அதனால் நான் மூலையில் முடங்கிக் கிடக்க மாட்டேன்" என்று கூறி 76 வயது வரை வாழ்ந்த அற்புத மனிதர் ஸ்டீபன் ஹாக்கிங். கணினித் திரை மூலமாகத் தன்னுடைய கருத்துக்களை வெளியிட்டு வந்தார் இவர். இவருடைய "காலத்தைப் பற்றிய சுருக்கமான வரலாறு" என்னும் அறிவியல் நூல் விற்பனையில் உலக சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  Stephen Hawking's Voice to Be Beamed Into Space at Final Send-Off : Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more