மூன்று தாஜ்மஹால் அளவு பெருசு: 18,000 மைல் வேகத்தில் பூமியை நோக்கி நகரும் சிறுகோள்- நமக்கு ஆபத்தா?

|

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா ஒரு மணி நேரத்திற்கு 18,000 மைல் வேகத்தில் பூமியை நோக்கி பயணிக்கக்கூடிய சிறோகள் குறித்து கண்டறிந்துள்ளது. இருப்பினும் இதன் மூலம் பூமிக்கு ஆபத்து ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2008Go20 என்று பெயரிடப்பட்ட சிறுகோள்

2008Go20 என்று பெயரிடப்பட்ட சிறுகோள்

ஒரு மைதானத்தின் அளவு, தாஜ்மஹாலின் அளவில் மூன்று மடங்கு அளவு கொண்ட பெரிய சிறுகோள் ஒன்று மிக வேகத்தில் பூமியை நோக்கி நகர்கிறது. 2008Go20 என்று பெயரிடப்பட்ட இந்த சிறுகோள் வரும் ஜூலை 24 ஆம் தேதி அன்று பூமியை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கணிப்புப்படி இது ஒரு மணிநேரத்திற்கு 18,000 மைல் வேகத்தில் பூமியை நோக்கி நகர்வதாகும் ஆனால் இதுகுறித்து கவலைப்பட தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளது.

18000 மைல் வேகத்தில் நகரும் சிறுகோள்

18000 மைல் வேகத்தில் நகரும் சிறுகோள்

சுமார் 220 மீட்டர் விட்டம் கொண்ட இந்த சிறுகோள் பூமியில் இருந்து 4.7 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் செல்ல இருக்கிறது. இந்த சிறுகோள் மணிக்கு 18000 மைல் வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது எனவும் இந்திய நேரப்படி வரும் 24 ஆம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் சிறுகோள் பூமியை கடக்கும் என நாசா கணித்துள்ளது. சிறுகோள் பூமிக்கு எந்தவிதமான சேதத்தையும் ஏற்படுத்தாது என கணிக்கப்பட்டாலும் அந்த சிறுகோளின் நகர்வை துல்லியமாக நாசா கணித்து வருகிறது.

பில்லியன் கணக்கில் சிறு கற்கள்

பில்லியன் கணக்கில் சிறு கற்கள்

விண்கல் என்பது பூமி வளிமண்டலத்தில் இருந்து பூமியை அடையும் பொருளாகும். சூரிய மண்டலத்தில் பில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோகப் பாறைகளும் நீந்திக் கொண்டிருக்கின்றன. இந்த விண்கற்கள் சில பூமியை நோக்கி வருமாயின் அது மேற்புறத்தில் இருந்து ஈர்ப்பு விசை காரணமாக அதிவேகத்தில் வந்தடையும்.

எரிகல் அல்லது எரி நட்சத்திரம்

எரிகல் அல்லது எரி நட்சத்திரம்

எரிகல் அல்லது எரி நட்சத்திரம் வளிமண்டலத்தின் உராய்வு வெப்பத்தினால் எரிந்து, ஒளிந்தபடியான பாதையை ஏற்படுத்துகின்றன. அப்பொழுது இவை எரிகல் அல்லது எரி நட்சத்திரம் என அழைக்கப்படுகிறது. இவற்றில் சில முழுவதுமாக எரிந்து வளி மண்டலத்துடன் கலந்து விடுகின்றன. சிலவற்று பூமியில் விழுந்து, நினைத்து பார்க்கமுடியா பள்ளங்களை ஏற்படுத்தியுள்ளன.

மிதந்துக் கொண்டிருக்கும் கற்கள்

மிதந்துக் கொண்டிருக்கும் கற்கள்

சூரிய குடும்பத்தில் மிதந்துக் கொண்டிருக்கும் கற்கள் சில நேரங்களில், வியாழனின் ஈர்ப்பு விசை காரணமாக உள் சூரிய மண்டலத்தை நோக்கி பயணிக்கிறது, அதில் சிலவற்று பூமியை அச்சுறுத்தும் வகையிலும் உள்ளது.

முன்னதாக கடந்து சென்ற எரிகல்

முன்னதாக கடந்து சென்ற எரிகல்

முன்னதாக இதுபோன்ற எரிகல் முதலில் 1998 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த எரிகல் மணிக்கு 31 ஆயிரத்து 320 கிலோமீட்டர் வேகத்தில் கடந்து செல்லும் என தெரிவிக்கப்பட்டது. இந்த எரிகல் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்கிறது என்பதால் இதை அபாயகரமான எரிகல்லாக நாசா குறிப்பிட்டது.

2028-ம் ஆண்டு பூமியின் அருகில் வரும் மற்றொரு எரிகல்

2028-ம் ஆண்டு பூமியின் அருகில் வரும் மற்றொரு எரிகல்

2028-ம் ஆண்டு பூமியின் அருகில் வரும் 1991-ஆம் ஆண்டு இதே போன்றதொரு '1991 VG' என்று பெயரிடப்பட்ட குட்டி கோள் ஒன்று பூமியைச் சில வருடங்கள் சுற்றி வந்தது. பின்னர் அது வேறு பாதையில் பூமியை விட்டு வெகு தூரம் சென்று விட்டது. இது மீண்டும் 2028-ம் ஆண்டு பூமியின் அருகில் வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

File Images

Most Read Articles
Best Mobiles in India

English summary
Stadium Sized Asteroid is Expected to Cross the Earth by day after tomorrow

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X