நோ, நோ, தோற்ற இடத்திலேயே ஜெயிப்போம்., இது நல்ல பாடம்: ISRO வின் அடுத்த பிளான்!

|

நோ., நோ., இது ஒரு பின்னடைவே அல்ல, மிகவும் நெருக்கமாக சென்றிருக்கிறோம். விரைவில் மற்றொரு முயற்சி மேற்கொள்ளப்படும் என இஸ்ரோவின் முன்னாள் தலைவர் ஏ.எஸ்.கிரண் குமார் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரோ முன்னாள் தலைவரின் இந்த நம்பிக்கை வார்த்தைக்கு காரணம் என்னவென்று விரிவாக பார்க்கலாம்.

SSLV-D1 ராக்கெட்

SSLV-D1 ராக்கெட்

குறைவான எடை கொண்ட செயற்கைக் கோள்களை விண்வெளிக்கு சுமந்து செல்லும் வகையில் SSLV-D1 ராக்கெட் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்த ராக்கெட் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் (EOS2) மற்றும் AzaadiSat செயற்கைக் கோள்களை சுமந்து ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்டது.

இந்த ராக்கெட் செயற்கைக்கோள்களை தவறான வட்டப்பாதையில் நிலை நிறுத்தியது. அதாவது இலக்கில் உள்ள வட்டபாதைக்கு பதிலாக நீள் வட்டப்பாதையில் செயற்கைக்கோள்களை ராக்கெட் நிலைநிறுத்தியது.

SLV-D1 ராக்கெட்டின் தோல்வி

புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் (EOS2) மற்றும் AzaadiSat செயற்கைக்கோள்களானது பள்ளி மாணவிகளின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டது.

ராக்கெட் இந்த செயற்கைக்கோளை தவறான வட்டப்பாதையில் நிலை நிறுத்தியது. SSLV-D1 ராக்கெட்டின் தோல்வி குறித்து ஏ.எஸ்.கிரண் குமார் விளக்கமளித்துள்ளார்.

செயற்கைக்கோள்களை நிலை நிறுத்த தவறிய ராக்கெட்

செயற்கைக்கோள்களை நிலை நிறுத்த தவறிய ராக்கெட்

இந்தியாவின் புதிய ராக்கெட், சிறிய செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த தவறியது ஒரு பின்னடைவு அல்ல, விண்வெளி நிறுவனம் விரைவில் மற்றொரு முயற்சியை மேற்கொள்ளும் என இஸ்ரோவின் முன்னாள் தலைவர் ஏ.எஸ்.கிரண் குமார் குறிப்பிட்டுள்ளார்.

நோ., நோ., நோ.,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ)வின் முன்னாள் தலைவர் கிரண் குமார் இதுகுறித்து PTI இடம் அளித்த தகவலை விரிவாக பார்க்கலாம்.

இஸ்ரோவின் இந்த புதிய ராக்கெட் மூன்று நிலைகளிலும் சிறப்பாக செயல்பட்டது. ஏவகணை வாகனத்தின் முதன்மை நோக்கங்கள் சிறப்பாக செயல்பட்டது. எனவே நோ., நோ., நோ., இது ஒரு பின்னடைவே அல்ல, மிகவும் நெருக்கமாக சென்றிருக்கிறோம் என குறிப்பிட்டார்.

விரைவில் மற்றொரு முயற்சி

விரைவில் மற்றொரு முயற்சி

எடை குறைந்த செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் ராக்கெட் என்பதே இதன் முதன்மை நோக்கம், அதில் இந்த ராக்கெட் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது.

எனவே இயக்கப்படும் விதம் மற்றும் முடிவெடுக்கும் விதம் என சில பகுதிகளை மாற்றிமையத்து மிக விரைவில் ராக்கெட் ஏவதலை மீண்டும் முயற்சிப்பார்கள் என அவர் குறிப்பிட்டார்.

சிறிய தவறு, ஆனால் நல்ல பாடம்

சிறிய தவறு, ஆனால் நல்ல பாடம்

செயற்கைக்கோள்கள் அளவு சிறியதாகிக் கொண்டே வருவதால் SSLV மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சிறிய செயற்கைக்கோள்கள் ஏவுதள சந்தையில் இந்த புதிய ராக்கெட் இந்தியாவுக்கு ஒரு பங்கைப் பெற்று தரும் என கூறினார்.

இந்த ராக்கெட்டின் அனைத்து நிலைகளும் சிறப்பாக செயல்பட்டன, இறுதியில் மிக நெருக்கமாக இருந்தோம். செயற்கைக்கோள்கள் 350 கிமீ வட்ட சுற்றுப்பாதைக்கு பதிலாக 350 கிமீ x 70 கிமீ சுற்றுப்பாதையில் வைக்கப்பட்டன.

இது ஒரு சிறிய தவறு. ஆனால் நல்ல பாடம் புரிந்து கொள்ள வாய்ப்பு என அவர் குறிப்பிட்டார்.

சிக்கல்களை கண்டறிந்து விரிவான மதிப்பீடு

சிக்கல்களை கண்டறிந்து விரிவான மதிப்பீடு

அதேபோல் இதுகுறித்து இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் கூறுகையில், குறிப்பிட்ட சிக்கல்களை கண்டறிந்து விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது என கூறினார்.

எஸ்எஸ்எல்வி டி2 குறித்த அறிவிப்பு விரைவில்

எஸ்எஸ்எல்வி டி2 குறித்த அறிவிப்பு விரைவில்

சிறிய செயற்கைக்கோள்களை ஏவும் வகையில் எஸ்எஸ்எல்வி டி1 தயாரிக்கப்பட்டது. இந்த ரகத்தின் முதல் ராக்கெட் இதுதான்.

எஸ்எஸ்எல்வி டி1 தோல்வியையடுத்து எஸ்எஸ்எல்வி டி2 குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ராக்கெட் மூலம் தவறாக நிலைத்தப்பட்ட செயற்கைக்கோள்கள் பயன்படுத்த முடியாததாகிவிட்டதாக இஸ்ரோ தலைவர் குறிப்பிட்டார்.

இறுதிக்கட்டத்தில் சிறிய பிழை

இறுதிக்கட்டத்தில் சிறிய பிழை

இந்த ராக்கெட் ஏவுதலின் மூன்று நிலைகளிலும் சிறப்பாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும் இறுதியில் செயற்கைக்கோள்களை நிலை நிறுத்தும் கட்டத்தில் சில தரவுகள் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

செயற்கைக்கோள் நிலை நிறுத்தும் போது ஏற்பட்ட பிழைக்கு காரணம் என்ன என்று நிபுணர் குழு ஆய்வு செய்து வருகிறது.

Best Mobiles in India

English summary
SSLV Next Flight Very Soon, It is not a setback: Ex ISRO Chairman

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X