ஆப்கானிஸ்தானின் தொலைந்த ராஜ்ஜியங்கள் : கண்டறிந்த உளவு செயற்கைகோள்கள்

இக்குழுவின் சமீபத்திய கண்டுபிடிப்புகளில், 16.மற்றும் 17வது நூறாண்டுகளை சேர்ந்த 119 தங்கும் விடுதிகளை ஒவ்வொரு 20 கிலோமீட்டர் இடைவெளியிலும் கண்டறியப்பட்டுள்ளன.

|

தலீபான் படைகளுக்கும் காபூல் அரசாங்கத்திற்கும் இடையேயான போர் தொலைதூர மாகாணங்களில் நடைபெற்று வந்தாலும், தலைநகரில் கூட பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதால் தொல்லியல் ஆய்வாளர்களுக்கு ஆப்கானிஸ்தானில் பணியாற்றுவது என்பது மிகவும் கடினமான ஒன்று.

ஆப்கானிஸ்தானின் தொலைந்த ராஜ்ஜியங்கள் : கண்டறிந்த உளவு செயற்கைகோள்கள்

ஆனாலும் தற்போது அமெரிக்க மற்றும் ஆப்கான ஆய்வாளர்கள் முன்னெப்போதும் கண்டறிந்திராத பழங்கால இடங்களை, பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த கிழக்கையும் மேற்கையும் இணக்கும் முக்கிய சாலைகளுக்கு அருகில் கண்டறிந்துள்ளனர். போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்த தேசம் தனது கலாச்சார பாரம்பரிய பொக்கிஷங்களை பாதுகாக்கும் வாய்ப்பாக, ஆராய்ச்சியாளர்களின் இந்த அழிந்த சாம்ராஜ்ஜியங்களின் கண்டுபிடிப்பு அமைந்துள்ளது.

ஆராய்ச்சியாளர்கள்

ஆராய்ச்சியாளர்கள்

அமெரிக்கா தொல்லியல் துறையின் கூட்டு நிதியின் மூலம், வர்த்தக செயற்கைகோளின் தரவுகள் , அமெரிக்க உளவு செயற்கைகோள்கள் மற்றும் இராணுவ ட்ரோன்களின் புகைப்படங்களை பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் செல்லமுடியாத ஆபத்தான பகுதிகளை தொல்லியல் அறிஞர்கள் துல்லியமாக ஆராய்ந்தனர்.

கிறிஸ்து பிறப்பிற்கு முன்

கிறிஸ்து பிறப்பிற்கு முன்

கிறிஸ்து பிறப்பிற்கு முன் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்து, 19ம் நூற்றாண்டு வரை கட்டப்பட்ட பயணிகளுக்காக மாளிகைகள், நிலத்தில் இருந்து காண முடியாத பழங்கால சுரங்கங்கள் என 4500க்கும் மேற்பட்ட தொல்லியல் அம்சங்களை கண்டறிந்துள்ளனர். அதேநேரம், எண்பது வயதுக்கு மேற்பட்ட ஓய்வுபெற்ற தொல்லியல் ஆய்வாளர்களும் பல தசாப்தங்களுக்கு முன்பு நடைபெற்ற ஆராய்ச்சிகள் பற்றிய தகவல்களையும் வழங்கி வருகின்றனர்.

ரிமோட் சென்சிங்

ரிமோட் சென்சிங்

ரிமோட் சென்சிங் மூலம் ஆப்கானிஸ்தானில் ஆராய்ச்சிகள் மேற்கொண்ட ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் லா டிராப் பல்கலைகழக தொல்லியல் ஆய்வாளர் டேவிட் தாம்சன் கூறுகையில், " முன்பின் தெரியாத பகுதியில் பாதுகாப்பாகவும், துல்லியமாகவும் ஆராய்ச்சி நடத்துவது ஊக்கமளிப்பதாக உள்ளது. ஆயிரக்கணக்கான தொன்மையான இடங்கள்.கண்டறியப்படும் என எதிர்பார்த்தேன். அப்போது தான் இந்த இடங்கள் முழுமையாக ஆராயப்பட்டு பாதுகாக்கப்படும்" என்றார்.

20 கிலோமீட்டர்

20 கிலோமீட்டர்

இக்குழுவின் சமீபத்திய கண்டுபிடிப்புகளில், 16.மற்றும் 17வது நூறாண்டுகளை சேர்ந்த 119 தங்கும் விடுதிகளை ஒவ்வொரு 20 கிலோமீட்டர் இடைவெளியிலும் கண்டறியப்பட்டுள்ளன.அமெரிக்க கால்பந்து மைதானத்தின் நீளமுள்ள செங்கல் கட்டிடங்கள் ஏராளமாக கண்டறியப்பட்டுள்ளன.முகலாய சாம்ராஜ்யத்தில் இந்த தங்கும் விடுதிகளில் தான் பல்வேறு நாடுகளில் இருந்து பட்டு,தங்கம், வைரம் போன்றவற்றை கொண்டுவருபவர்கள் தங்கியிருக்கலாம்.

Best Mobiles in India

English summary
Spy satellites are revealing Afghanistan’s lost empires: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X