Home
Scitech

சந்திரனோடு சனிக்கிரகமும் வானத்தில் தென்பட்ட ஞாயிறு இரவு!

சூரியன் மறைந்த மாலை வேளையில் 45 நிமிடங்களுக்குப் பிறகு வானம் தெளிவாக இருந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இந்த அரிய காட்சியைக் காண்பதற்கு உரிய வாய்ப்பு கிடைத்து இருக்கும்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு (அக்டோபர், 14, 2018) வானத்தை தொலை நோக்கி வழியாக உற்றுக் கவனித்தவர்கள் சந்திரனோடு சனிக் கிரகத்தையும் கண்டு ஆச்சர்யப்பட்டிருப்பர்.

சந்திரனோடு சனிக்கிரகமும் வானத்தில் தென்பட்ட ஞாயிறு இரவு!

சூரியன் மறைந்த மாலை வேளையில் 45 நிமிடங்களுக்குப் பிறகு வானம் தெளிவாக இருந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இந்த அரிய காட்சியைக் காண்பதற்கு உரிய வாய்ப்பு கிடைத்து இருக்கும். சூரிய ஒளியை உள்வாங்கிச் சுடர்விட்ட நிலவின் கீழ் இடது புறத்தில், மஞ்சளும் வெண்மையும் கலந்த நிறத்தில் நட்சத்திரத்தைப் போல ஒளிர்ந்த சனிக் கிரகம் காணப்பட்டது. சூரியன் மறைந்த மாலை வேளையில் தொடங்கி ஏறக்குறைய 4 மணி நேரமாக அதாவது இரவு 10.15 மணிவரை இந்தக் காட்சி தென்பட்டது. இந்த நேரத்தில் கிழக்கு நோக்கிய நிலவின் நகர்வு அதனைச் சனிக் கிரகத்துக்கு இன்னும் நெருக்கமாகக் கொண்டு சென்றது.

சந்திரன், சனிக் கிரகம் இரண்டும் 0.75 டிகிரி கோணத்தில் நெருக்கமாக வந்தன. இந் நிகழ்வு கிரீன்விச் நேரப்படி 04:00 மணிக்கு நிகழ்ந்தது. வட அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் இருப்பவர்களால் இதனைக் கண்டுணர முடிந்திருக்கும்.


ஒரு மாயத் தோற்றம்
உண்மையில் சந்திரனுக்கும் சனிக்கிரகத்துக்கும் இடையிலான தூரம் மிகவும் அதிகம். பூமியிலிருந்து சந்திரன் 2,48,300 மைல்கள் (3,99,600 கி்.மீட்டர்) தூரத்தில் உள்ளது. ஆனால் சனிக் கிரகத்துக்கும் பூமிக்குமான தூரம் 959.8 மில்லியன் மைல்கள் ஆகும் (1.545 பில்லியன் கி்.மீட்டர்). சந்திரனோடு ஒப்பிடும் பொழுது சனிக்கிரகம் பூமியிலிருந்து 3,865 மடங்கு அதிகமான தூரத்தில் உள்ளது. இருந்த போதும், இந்த வாரத்தின் ஞாயிற்றுக் கிழமை இரவு சந்திரனும், சனிக் கிரகமும் அருகருகே இருப்பது போலத் தோன்றியது. வானத்தில் நிலவைப் பார்ப்பது வழக்கமான செயல். ஆனால், சனிக் கிரகத்தைக் காண்பது மிகவும் அரிதான செயல். இந்த அரிய வாய்ப்பைக் கண்ட விண்ணியலாளர்கள், “ சனிக் கிரகத்தைப் பார்க்க வேண்டுமா ? இதோ இங்கே!” என்று மகிழ்ச்சியோடு கண்டுகளித்தனர்.


பள்ளங்கள் நிறைந்த நிலவு : அற்புதமான காட்சி
பைனாகுலர் அல்லது தொலை நோக்கி வழியாக நிலவைப் பார்த்து ரசிப்பது ஒர் அழகான அனுபவம். நிலவின் மையப் பகுதியில் பள்ளங்கள் இருப்பது போல் தோன்றும். அதில் மூன்று பள்ளங்கள் கவனத்தில் கொள்ளத் தக்கன. Theophilus, Cyrillius மற்றும் Catharina ஆகியவையே அவைகள். “பைனாகுலர் வழியாக நிலவை ஆய்வு செய்தல் (Exploring the Moon through Binoculars)” என்னும் புத்தகத்தின் ஆசிரியர், எர்னஸ்ட் செர்ரிங்டன் (Ernest H Cherrington) நிலவில் உள்ள பள்ளங்கள் குறித்துச் சில குறிப்புகளைத் தந்துள்ளார். இந்த மூன்று பள்ளங்களும் மூன்று வெவ்வேறான சகாப்தங்களில் உருவானவை. அவற்றுள் Theophilus பள்ளம் சமீபத்தில் தோன்றியது . அதற்கு முன்னர் தோன்றியது Cyrillius. இவை இரண்டுக்கும் முன்னர் தோன்றியது Catharina. தொலை நோக்கி வழியாகப் பார்க்கும் பொழுது இவை மிக அழகாகக் காட்சி தருகின்றன.

சந்திரனோடு சனிக்கிரகமும் வானத்தில் தென்பட்ட ஞாயிறு இரவு!

குளிர் வளையங்கள்
சூரியக் குடும்பத்தில் உள்ள கிரகங்களில் மிகவும் அழகிய தோற்றம் தரக் கூடியது சனிக் கிரகம் ஆகும். அதனைச் சுற்றி ஒரு வளையம் காணப்படும். இது இக்கிரகத்துக்கு அழகைக் கூட்டுகிறது. மிக உயரிய சக்தி கொண்ட தொலை நோக்கி வழியாகப் பார்த்தால் இதனைக் காண முடியும். தற்போது இந்த வளையம் நம்முடைய பார்வைக் கோட்டிலிருந்து 26.5 டிகிரி அளவுக்குச் சாய்வாக உள்ளது. இந்த வளையம் பல்வேறு வகையான உட்கூறுகளால் ஆனது. கண்ணாடித் துகள்கள் மற்றும் துண்டுகள் போன்ற பொருள்களால் இவ் வளையம் உருவாகிறது. இத் துகள்கள் ஒவ்வொன்றும் அளவில் பெரியவை. ஒவ்வொரு உட்கூறுகளும் தங்களுக்கென்று தனித்த சுற்று வட்டப் பாதையில் சனிக் கிரகத்தைச் சுற்றி வருகின்றன. ஒவ்வொரு உட்கூறுகளும் ஒளியைப் பிரதிபலிக்கின்றன, அதனால் இந்த வளையம் பனிக் கட்டியால் கோர்க்கப்பட்டது போல் காட்சி தருகின்றது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Spot the Moon with Saturn in Sunday's Night Sky : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X