விண்வெளியில் சிக்கிய "சிலந்தி" உருவம்! புகைப்படம் எடுத்த நாசா!

|

சில சமயங்களில் வானத்தில் நாம் பார்க்கும் மேகக்கூட்டமானது அல்லது ஒற்றை மேகமானது ஏதோவொரு உருவத்தை பிரதிபலிப்பது போல நம் கண்களுக்கு தெரியும்!

அதாவது மேகத்தில் - ஒரு நாய் நிற்பது போன்ற உருவம் தெரியும், அல்லது ஒரு பெண்ணின் கூந்தல் காற்றில் பறப்பது போன்ற உருவம் தெரியும்.. அவ்வளவு ஏன்? சிலருக்கு டைனோசர்கள், டிராகன்கள் கூட தெரிந்து இருக்கலாம்!

மனித சக்திக்கு அப்பாலும் இது நடக்கும்!

மனித சக்திக்கு அப்பாலும் இது நடக்கும்!

இப்படியாக வானத்தில் தெரியும், அதாவது மனித கண்களின் சக்திக்கு புலப்படும் உருவங்களை, நாமே நேரடியாக பார்க்கலாம்; வியக்கலாம்; ரசிக்கலாம்!

ஆனால், மனித சக்திக்கு அப்பால் உள்ள "இடங்களில்", அதாவது பெரும்பாலான மனிதர்காளால் கற்பனை மட்டுமே செய்து பார்க்கக்கூடிய விண்வெளியில் தென்படும் உருவங்களை நாம் எப்படி பார்ப்பது, ரசிப்பது?

பிளாஸ்டிக்கை வைரங்களாக மாற்றிய விஞ்ஞானிகள்! இனி வைரத்தின் விலை குறையுமா?பிளாஸ்டிக்கை வைரங்களாக மாற்றிய விஞ்ஞானிகள்! இனி வைரத்தின் விலை குறையுமா?

வேறு எப்படி? அறிவியலின் கண்களின் வழியாகத்தான்!

வேறு எப்படி? அறிவியலின் கண்களின் வழியாகத்தான்!

சமீபத்தில், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் (NASA) ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி ஆனது மீண்டும் ஒரு அதிர்ச்சியூட்டும் புகைப்படத்தை எடுத்துள்ளது.

உலகின் மிக சக்திவாய்ந்த விண்வெளி தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் ஆனது, பிரபஞ்சத்தின் ஆழத்தை அளவிடுவதற்கும், இதுவரை நாம் பார்த்திராத எல்லைகளை "தொட்டு பார்ப்பதற்கும்" தொடர்ச்சியாக வேலை செய்து வருகிறது.

அந்த வேலைக்கு நடுவில் சிக்கிய

அந்த வேலைக்கு நடுவில் சிக்கிய "விண்வெளி சிலந்தி"!

கரினா நெபுலாவின் (Carina Nebula) 'மலைகள்' மற்றும் 'பள்ளத்தாக்குகளை' கைப்பற்றுவது முதல்.. மில்லியன் கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு ஃபாண்டம் விண்மீனை (Phantom galaxy) காட்சிப்படுத்துவது வரையிலாக..

..ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்க்கோப் ஆனது விஞ்ஞானிகளையும் சரி, நம்மையும் சரி - துளி அளவும் ஏமாற்றவில்லை! தற்போது அந்த பட்டியலில் மிகவும் அரிய "விண்வெளி சிலந்தி"யும் சேர்ந்துள்ளது!

செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பச்சை நிற பொருள்! இதெப்படி சாத்தியம்?செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பச்சை நிற பொருள்! இதெப்படி சாத்தியம்?

இது மிகவும் அரிய புகைப்படமும் கூட!

இது மிகவும் அரிய புகைப்படமும் கூட!

ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்க்கோப் வழியாக புகைப்படம் எடுக்கப்பட்டுள்ள "விண்வெளி சிலந்தி" ஆனது ஒரு நெபுலாவின் (Nebula) புகைப்படம் ஆகும்.

அந்த நெபுலா பார்ப்பதற்கு, அதன் அடுத்த இரையை உண்பதற்கு தயாராக உள்ள ஒரு டரான்டுலா சிலந்தியை (Tarantula Spider) போலவே தோற்றமளிக்கிறது

இந்த குறிப்பிட்ட நெபுலாவானது, ஒரு டரான்டுலா சிலந்தியின் கூந்தல் மிகுந்த கால்களை போல் இருப்பதாலேயே இது டரான்டுலா நெபுலா என்கிற பெயரை பெற்றுள்ளது; ஏன் இது ஒரு அரிய புகைப்படம்?

ஏனெனில் முன்பு தெரியாத பல விஷயங்கள் இப்போது தெளிவாக தெரிகிறது!

ஏனெனில் முன்பு தெரியாத பல விஷயங்கள் இப்போது தெளிவாக தெரிகிறது!

புருவங்களை உயர்த்தும், டரான்டுலா நெபுலாவின் இந்த லேட்டஸ்ட் புகைப்படமானது முன்பு தெரியாத பல விஷயங்கள் மீது வெளிச்சம் பாய்ச்சி உள்ளது என்றே கூறலாம்.

ஏனெனில் ஜேம்ஸ் வெப்பின் நியர்-இன்ஃப்ராரெட் கேமராவானது (NIRCam) டரான்டுலா நெபுலாவில், நட்சத்திரங்கள் உருவாகும் பகுதியை தெள்ளத்தெளிவாக கைப்பற்றி உள்ளது!

சூரியனின் சூரியனின் "மர்ம பகுதி" கண்டுபிடிப்பு.. ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்!

அண்டவியல் கண்ணோட்டத்தில் இது மிகவும் முக்கியமானது!

அண்டவியல் கண்ணோட்டத்தில் இது மிகவும் முக்கியமானது!

பொதுவாக இதுபோன்ற நெபுலாவில் பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்கள் காஸ்மிக் தூசியால் மூடப்பட்டு இருக்கும். ஆனால் டரான்டுலா நெபுலாவின் சமீபத்திய புகைப்படத்தில் அப்படி இல்லை!

இந்த புகைப்படம், பிரகாசிக்கும் பல எண்ணிக்கையிலான இளம் நட்சத்திரங்களை காட்டுகிறது; அவைகள் வெளிர் நீல நிறத்தில் தோன்றுகின்றன!

நம்மில் பலருக்கும் இது வெறுமனே ஒரு விண்வெளி புகைப்படமாக தோன்றலாம், ஆனால் அண்டவியல் கண்ணோட்டத்தில் இது மிகவும் முக்கியமான ஒரு புகைப்படம் ஆகும்!

161,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது!

161,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது!

லார்ஜ் மாகெல்லானிக் கிளவுட் கேலக்ஸி (Large Magellanic Cloud Galaxy) மண்டலத்தில் இருந்து சுமார் 161,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள இந்த டரான்டுலா நெபுலாவானது, எங்களுக்குத் தெரிந்த வெப்பமான மற்றும் மிகப்பெரிய நட்சத்திரங்களின் தாயகமாகும் என்று நாசா குறிப்பிட்டுள்ளது!

முதல் முறையாக ஏலியன் கிரகத்தை முதல் முறையாக ஏலியன் கிரகத்தை "நேரடியாக" போட்டோ எடுத்த நாசா!

முன்னதாக

முன்னதாக "ஏலியன் உலகம்" ஒன்றும் புகைப்படமாக்கப்பட்டது!

சமீபத்தில், இதே ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்க்கோப் ஆனது முதல் முறையாக ஒரு வேற்று கிரகத்தின் நேரடி புகைப்படத்தையும் பதிவு செய்தது.

அது பூமியிலிருந்து சுமார் 385 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள எச்ஐபி 65426 என்று அழைக்கப்படும் ஒரு நட்சத்திரத்தை சுற்றும் HIP 65426 b என்கிற ஒரு எக்ஸோபிளானட் (Exo Planet) ஆகும்.

இதற்கும் ஜேம்ஸ் வெப்பின் நியர்-இன்ஃப்ராரெட் கேமரா (Near-Infrared Camera - NIRCam) மற்றும் மிட்-இன்ஃப்ராரெட் இன்ஸ்ட்ருமென்ட் (Mid-Infrared Instrument - MIRI) பயன்படுத்தப்பட்டது.

Photo Courtesy: NASA, Wikipedia

Best Mobiles in India

English summary
Spider Like Nebula Called Tarantula Photographed by NASA James Webb Space Telescope

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X