Home
Scitech

எல்லா பயலும் இஸ்ரோகிட்ட 'ட்யூஷனுக்கு' வாங்கப்பா..!!

தற்போது பூமியை சுற்றி சுமார் 500,000க்கும் மேற்பட்ட விண்வெளி குப்பைத் துண்டுகள் உள்ளன

1957-ஆம் ஆண்டு, அக்டோபர் 4-ஆம் தேதி பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட மனிதனால் செய்யப்பட்ட முதல் செயற்கைகோள் ஆன ஸ்புட்னிக் தொடங்கி கடைசியாக அனுப்பட்ட அதிநவீன செயற்கைகோள் வரையிலாக, விண்வெளியிடம் இருந்து மனித இனம் கற்றுக்கொண்ட பாடங்கள் மிக அதிகம்.

இருப்பினும் கூட, விண்வெளி சார்ந்த புரிதல் நிகழ்த்தப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றன. அவைகளின் விளைவாக தற்போது பூமியை சுற்றி சுமார் 500,000க்கும் மேற்பட்ட விண்வெளி குப்பைத் துண்டுகள் உள்ளன. அவைகளில் இயற்கையான விண்வெளி பொருட்கள் மிக குறைவு என்பதும், பெரும்பாலானவைகள் மனித இனத்தின் பல விண்வெளி தேவைகளிலிருந்து கழித்து விடப்பட்டவைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது..!

#1

#1

'தன் வினை தன்னை சுடும்' என்பது போல விண்வெளியில் நாம் கழித்துவிட்ட குப்பைகள் நமக்கே திரும்ப 'ஆப்பு' வைத்த சம்பவங்களும், செயற்கைகோள்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட சம்பவங்களும் வரலாற்றில் உள்ளன.

#2

#2

அம்மாதிரியான மிகவும் கோரமான மோதல் விபத்துக்கள் இந்தியாவை விட விண்வெளி ஆராய்ச்சி துறையில் அதிகம் வளர்ந்த நாடுகளாக கருதப்படும் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கு தான் அதிகம் நிகழ்ந்துள்ளன.

#3

#3

வரலாற்றில் நிகழந்த மிகவும் கோரமான செயற்கைகோள் மோதல்களை தெரிந்து கொண்டால் எல்லா பயலுகளையும் (உலக நாடுகளையும்) இந்தியாவின் இஸ்ரோகிட்ட 'ட்யூஷனுக்கு' அனுப்பி வைக்கனும் என்று தான் தோன்றுகிறது.

#4

#4

சோயுஸ் டிஎம் - 17, மீது மோதியது (Soyuz TM-17 Crashes Into Mir)

#5

#5

ரஷ்ய விண்வெளி நிலையமான மிர் பூமிக்கு திரும்பும் போது ஒரு எளிய சோவியத் சோயுஸ் டிஎம் விண்கலம் (சோயுஸ் டிஎம் - 17) லிஃப்ட்ஆஃப் செய்த ஒரு சில நிமிடங்களுக்கு பின் மீர் மீது மோதியது. (பெரிய பாதிப்பு இல்லை)

#6

#6

பராக்ரஸ் எம் - 34, மீர் மீது மோதியது (Progress M-34 Hits Mir)

#7

#7

ரஷ்ய விண்வெளி நிலையமான மிர் உடன் மீண்டும் ஒரு செயற்கைகோள் மோதல் நிகழ்த்தியது பராக்ரஸ் எம் - 34..!

#8

#8

ஹைபர்வெலாசிட்டி மோதல் (The Hypervelocity Collision)

#9

#9

ஒரு வணிக தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஆன இரிடியம் 33 ஆனது, வழக்கற்றுப்போன ரஷியன் இராணுவ செயற்கைக்கோள் ஆன காஸ்மோஸ் 2251 மோதியது..!

#10

#10

செயற்கைகோள் விபத்தின் குழி..!

#11

#11

இதுவரையிலாக ஆய்வுகள் மற்றும் மனிதரை அனுப்பும் நோக்கதிற்காக 74 விண்கலங்களை நிலவிற்கு அனுப்பியுள்ளது மனித இனம். அவைகளில் 51 விண்கலங்கள் நிலவின் வெள்ளை பாறை மேற்பரப்பில் மோதி பழுதாகிவிட்டது. இதில் 19 விபத்துகள் வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

#12

#12

ப்ளிட்ஸ் செயற்கைகோள் மோதல். (The Collision That Blitzed BLITS)

#13

#13

8 கிலோகிராம் எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், ஒரு ஐந்தாண்டு ஆய்வு பணி நோக்கத்திற்காக விண்வெளிக்குள் செலுத்தப்பட்டது. 4 ஆண்டுகள் துல்லியமாக வேலை செய்த ப்ளிட்ஸ் விவரம் அறியப்படாத ஒரு விண்வெளி குப்பையுடன் மோதி பாதையில் இருந்து தவறியது.

#14

#14

தவறான நேவிகேசன் சிஸ்டம் ஒரு செயற்கைக்கோள் மோதலை ஏற்படுத்தியது.

#15

#15

நாசா மூலம் வடிவமைக்கப்பட்ட தன்னாட்சி ரென்டெஸ்வஸ் தொழில்நுட்பம் (DART) செய்த தவறு மூலம் இரண்டு செயற்கைகோள்கள் மோதிக் கொண்டன. (பெரிய பாதிப்பு இல்லை)

#16

#16

ரஷ்யாவின் டைக்ளோன் -3 ராக்கெட் கடைசி பாகம்..!

#17

#17

வெற்றிகரமாக டைக்ளோன் -3 ராக்கெட் மூலம் காஸ்மோஸ் செயற்கைகோள் ஏவப்பட்டாலும், டைக்ளோன் ராக்கெட்டின் கடைசி பாகம் ஒன்று விண்வெளியிலேயே மிதக்கிறது. அது விண்வெளி குப்பை மேகத்துடன் இணைந்து மேலும் விபரீதமான ஒரு விண்வெளி குப்பையாக சுற்றிக் கொண்டிருகிறது.

#18

#18

சொந்த ராக்கெட் மூலம் பாதிக்கப்பட்ட சிரிஸ்..!

#19

#19

ஏரியன் -4 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்வெளிக்குள் செலுத்தப்பட்ட 50 கிலோ (110 பவுண்டு ) எடை கொண்ட இராணுவக் கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆன சிரிஸ் சரியாக ஒரு ஆண்டுக்கு பின்பு ஏரியன்-1 ராக்கெட் பாகம் (ஏரியன் ராக்கெட் பழைய பதிப்பு) ஒன்றுடன் மோதல் நிகழ்த்தியது..!

#20

#20

அமெரிக்காவின் மிக ரகசியமான யூஎஸ் 193-ன் மரணம்..!

#21

#21

இந்த ரகசியத் செயற்கைக்கோள் வெற்றிகரமாக சுற்றுப்பதைக்குள் செலுத்தப்பட்ட சில நிமிடங்களில் தரைக்கட்டுப்பாட்டை இழந்தது.

#22

#22

கலிலியோவின் தற்கொலை ஓட்டம்..!

#23

#23

கலிலியோ - மிக முக்கியமான ஒரு செயற்கைக்கோள்கள் ஆகும்.சூரிய மண்டலத்தைபுரிந்து கொள்ளவும் வியாழன் மற்றும் அதன் நிலவுகளை புகைப்படங்கள் எடுக்கவும் விண்ணில் செலுத்தப்பட்டது. 14 வருட ஆய்விற்கு பின்பு கலிலியோ ஆகப்பெரிய மாபெரும் வாயு ஆழ்ந்த அழுத்தம் ஒன்றில் சிக்கி இறங்கி, காப்பாற்ற பட இயலாமல் போனது.

Best Mobiles in India

English summary
Spectacular Satellite Collisions. Read more about this in Tamil Gizbot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X