நாசாவிற்காக முதல் க்ரூ டிராகனை விண்ணில் செலுத்தும் ஸ்பேஸ் எக்ஸ்!

மார்ச் 2 சனிக்கிழமை அதிகாலை 2:48 E.S.T (07:48 GMT) இல், இந்த க்ரூ டிராகன் டெமோ -1 மிஷன்-ஐ ஸ்பேஸ் எக்ஸ் விண்ணில் செலுத்தவுள்ளது.

|

விண்வெளி வீரர்களை சுற்றுவட்டப்பாதைக்கு அனுப்புவதற்காக உருவாக்கப்பட்ட தனியார் விண்கலத்தின் முதல் சோதனை விண்கலத்தை அடுத்த வாரம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணில் செலுத்தி வரலாற்று சாதனை புரிய தயாராக உள்ளது. அந்த க்ரூ டிராகன் டெமோ -1 மிஷன் விண்வெளி வீரர்களைச் சுமந்து செல்லாது என்றபோதிலும், 2011ம் ஆண்டிற்கு பிறகு அமெரிக்க மண்ணில் மனிதர்களுக்கான உருவாக்கப்பட்டு செலுத்தப்படும் முதல் விண்கலம் இது. மேலும் இதனை நேரலையில் பார்க்க முடியும்.


மார்ச் 2 சனிக்கிழமை அதிகாலை 2:48 E.S.T (07:48 GMT) இல், இந்த க்ரூ டிராகன் டெமோ -1 மிஷன்-ஐ ஸ்பேஸ் எக்ஸ் விண்ணில் செலுத்தியது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நாசா விண்வெளி வீரர்கள் பயணிக்கும் வகையில் இந்த க்ரூ டிராகன் வடிவமைக்கப்பட்டுள்ளதால், விண்வெளி மையத்தில் இருந்து நேரலை ஒளிபரப்பை எதிர்பார்க்கலாம்.

நாசா

நாசா

நாசா தொலைக்காட்சியில் நாசா-இன் நேரலை காட்சிகளை நீங்கள் பார்க்க முடியும். மேலும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் அதன் வலைதளத்தில் நேரலை வழங்கவுள்ளது. முதல் க்ரூ டிராகன் எப்போது விண்ணில் செலுத்தப்படும் என்பதை இனி காணலாம்.

மார்ச் 2

மார்ச் 2

சனிக்கிழமை அதிகாலை 2 EST (0700 GMT) மணியிலிருந்து நேரலை துவங்கியது. சரியாக 2:48 EST க்கு விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. 5 மணிக்கு நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இணைந்து போஸ்ட்-லாஞ்ச் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினர்

மார்ச் 3: விண்வெளி நிலையத்தை அடைதல்

மார்ச் 3: விண்வெளி நிலையத்தை அடைதல்

விண்ணில் செலுத்தப்பட்ட 27 மணிநேரம் கழித்து ஞாயிற்றுக்கிழமை மார்ச் 3 ஸ்பேஸ் எக்ஸின் க்ரூ டிராகன் அன்று விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது.நாசாவின் நேரடி ஒளிபரப்பு காலை 3:30 EST மணிக்கு (0830 GMT) தொடங்குகிறது. சுமார் 5:55 EST மணிக்கு (1055 GMT) விண்கலம் விண்வெளி நிலையத்துடன் இணையும். அதன்பின்னர் சுமார் 5 மணிநேரம் கழித்து விண்வெளி வீரர்கள் விண்வெளி நிலையத்தில் நுழைந்தனர்.

மார்ச் 8 : பூமிக்கு திரும்புதல்

மார்ச் 8 : பூமிக்கு திரும்புதல்

டெமோ -1 க்ரூ டிராகன் பூமிக்கு திரும்பும் முன்னர் ஐந்து நாட்களுக்கு விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். மார்ச் 8 வெள்ளிக்கிழமை விண்வெளிநிலையத்தின் இணைப்பை துண்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது. விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையம் மற்றும் க்ரூ டிராகனுக்கு இடையிலான இணைப்பை துண்டிக்கும் நிகழ்விற்கான

நாசாவின் நேரடி ஒளிபரப்பு 12:15 மணிக்கு (0515 GMT) தொடங்குகிறது.

7:30 மணிக்கு (1230 GMT), நாசா க்ரூ டிராகன் லேண்டிங் மற்றும் டி ஆர்பிட் கவரேஜை தொடங்கும். இந்த விண்கலம் எப்போது தரையிறக்கும் என ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் நாசா, ஒரு குறிப்பிட்ட ஸ்பிளாஸ் டவுன் நேரத்தை அறிவிக்கவில்லை. அதே நேரத்தில் விண்வெளி நிலையத்தை விட்டு புறப்பட்ட 5 மணி நேரம் கழித்து தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
SpaceX Will Launch Its 1st Crew Dragon for NASA Soon! How to Watch It All Live: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X