சர்வதேச விண்வெளி நிலையத்துக்குப் பறந்தது செயற்கை அறிவூட்டப்பட்ட ரோபோ: 'Flying Brain'.!

|

பந்து வடிவிலான செயற்கை அறிவூட்டப்பட்ட ரோபோவுக்கு "flying brain" எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஜெர்மன் நாட்டு விண்வெளி வீரரைப் பின் தொடர்ந்து அவருடன் தொடர்பு கொள்வதற்காக இந்த ரேபோ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ SpaceX நிறுவனத்தின் டிராகன் விண்வெளிக் கப்பல் மூலமாகf; கடந்த வாரம், சர்வதேச விண்வெளி நிறுவனத்தை நோக்கித் தன்னுடைய பயணத்தைத் தொடங்கியது.

சர்வதேச விண்வெளி நிலையத்துக்குப் பறந்தது செயற்கை அறிவூட்டப்பட்ட ரோபோ.!

விண்வெளியில் தாவரங்களின் அழுத்தத்தை அளவிடுதல் மற்றும் கேன்சர் நோய்க்கான புது மருத்துவம் குறித்து ஆய்வு செய்வதற்காகவும் ஃபால்கன் 9 ராக்கெட் விண்வெளியில் ஏவப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கேப் கார்னிவல் ஏவுதளத்திலிருந்து இது ஏவப்பட்டுள்ளது.

டிராகன் விண்கலத்தைச் (Dragon spacecraft ) சுமந்து கொண்டு ஃபால்கன் 9 ராக்கெட் (Falcon 9 rocket) சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கிப் பயணத்தைத் தொடங்கியுள்ளது.

ஆளில்லாத டிராகன் விண்கலம்

ஆளில்லாத டிராகன் விண்கலம்

ஆளில்லாத டிராகன் விண்கலம் 5,900 பவுண்ட் எடையுள்ள (2,700 கிலோ கிராம்) பல்வேறு பொருட்களைச் சுமந்து செல்கிறது. விண்வெளியின் சுற்றுப் பாதையில் உள்ள ஆய்வகத்திற்குத் தேவையான பொருட்கள் இவை. தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான SpaceX அமெரிக்காவின் நாசா நிறுவனத்துடன் 1.6 பில்லியன் டாலர் (11,000 கோடி ரூபாய்) அளவுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக SpaceX நிறுவனம் நாசாவுக்காக இந்தப் பணியைச் செய்கிறது.

காப்சூல் மற்றும் ராக்கெட் இரண்டையும் இந்நிறுவனம் இதற்கு முன்னரும் விண்ணில் செலுத்தியுள்ளது. 2016 ஆம் ஆண்டு டிராகன் பொருட்களை விண்வெளிக்கு எடுத்துச் சென்றது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஃபால்கன் ராக்கெட் நாசாவின் செயற்கைக் கோளை விண்வெளிக்கு ஏந்திச் சென்றது.

ஏரோஸ்பேஸ்

ஏரோஸ்பேஸ்

கலிபோர்னியாவில் இருந்து செயல்படும் இந்த ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர் எலன் மஸ்க் (Elon Musk) என்பவர். இந்நிறுவனம், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ராக்கெட் மற்றும் விண்கலங்களின் பகுதிகளை மறுபடியும் பயன்படுத்துவதன் மூலம் விண்வெளிப் பயணங்களுக்கான செலவைக் குறைக்கலாம் எனக் கருதுகிறது.

விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட் தன்னுடைய பயணத்தின் இரண்டாவது நிலையில், டிராகனை சுற்று வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தி உள்ளதாக SpaceX நிறுவனம் தெரிவித்துள்ளது. இது சர்வதேச விண்வெளி நிறுவனத்தை ஜீலை 2 ஆம் தேதி சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிராகன் விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் பொருட்களில் கூடைப்பந்து அளவில் உள்ள ஒரு சாதனமும் அடங்கும். இதனை CIMON என அழைக்கிறோம் இதற்கு விண்வெளி ஆய்வுக் குழுவினைத் தொடர்ந்து செல்லும் துணைவன் எனப் பொருள் கொள்ளலாம் (Crew Interactive MObile CompanioN). இதற்குத்தான் பறக்கும் மூளை - Flying Brain - எனப் பெயர் சூட்டியுள்ளனர்.

வரலாற்றுச் சாதனை

வரலாற்றுச் சாதனை

"CIMON" வெற்றிகரமாக இயங்கினால் அது வரலாற்றுச் சாதனையாக அமையும். விண்வெளி வீரர்களுடன் கலந்துரையாடும் முதல் ரோபோவாக இது அமையும்." எனப் பெருமிதத்துடன் கூறுகிறார் ஜெர்மன் ஏரோஸ்பேஸ் மையத்தின் CIMON திட்ட மேலாளர், கிறிஸ்டியன் கர்ராஸ் (Christian Karrasch).

ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தைச் சேர்ந்த 42 வயதான நிலஇயற்பியல் அறிஞர் அலெக்ஸாண்டர் ஜெர்ஸ்ட் என்பவருடைய முகத்தையும் அவருடைய குரலையும் அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் இந்த ரோபோவுக்குப் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.

 விண்வெளி வீரர்களின் பார்வையில்

விண்வெளி வீரர்களின் பார்வையில்

அலெக்ஸாண்டர் ஜெர்ஸ்ட் இந்த ரோபோவை அழைத்தால் மிதந்து கொண்டிருக்கும் ரோபோ குரல் வந்த திசை நோக்கித் திரும்பி அவரை நோக்கித் தன் கவனத்தைச் செலுத்தும்.

விண்வெளி வீரர்களின் பார்வையில் படும்படி இந்த ரோபோ அலைந்து கொண்டிருக்கும். இந்த ரோபோ, தன்னுடைய முன்புறம் உள்ள கேமரா மூலம் தன் முன்னால் இருப்பது அலெக்ஸாண்டர் ஜெர்ஸ்டா அல்லது வேறு ஒருவரா என்பதைக் கண்டு கொள்ளும். அலெக்ஸான்டரின் உணா்ச்சிகளையும் புரிந்துகொள்வதற்கு ஏற்ற வகையில் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டு உள்ளது.

ஆங்கில மொழியைப் புரிந்து கொள்வதற்கு ஏற்ப இது வடிவமைக்கப்பட்டு உள்ளது. அலெக்ஸாண்டர் என்ன சொல்கிறார் என்பதை இது புரிந்து கொள்ளும். அவர் பேசும் பொழுது அவர் அருகே இந்த ரோபோ செல்லும். அலெக்ஸாண்டர் சொல்வதைக் கேட்பதற்கு ஏற்ப இந்த ரோபோவுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது என்றாலும் அந்தக் குழுவில் உள்ள ஆறு உறுப்பினர்களும் இதனுடன் பேசலாம்.

தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்துதல்

தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்துதல்

இந்த ரோபோ விண்வெளிக்கு அனுப்பப்பட்டதன் முக்கிய நோக்கம், தொழில் நுட்பம் எந்த அளவுக்கு வேலை செய்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காகவும், அதனை உலகத்திற்கு உணா்த்துவதற்காகவும்தான் என்கின்றனர் இந்தத் திட்டத்தின் ஆய்வாளர்கள்.

தன்னிடம் உள்ள வழிமுறைகள், வீடியோக்கள் மற்றும் படங்கள் மூலமாகத் தேவையான சமயத்தில் அலெக்ஸாண்டருக்கு ஆலோசனைகளை வழங்கவும் இந்த ரோபோவால் முடியும்.

இந்த CIMON ரோபோவின் பின்புறம் ஒரு மைக்ரோ போன் பொருத்தப்பட்டுள்ளது. முன்பகுதியில் ஊடுறுவும் தன்மை கொண்ட கேமராவும், இரண்டு பேட்டரிகளும் பொருத்தப்பட்டுள்ளன. முக்கியமாக "offline" பட்டன் உள்ளது. "offline" நிலையில் ரோபோ இருந்தால், பூமியில் உள்ள சர்வருக்குத் தன்னுடைய தொடர்புகள் தற்போது போய்ச் சேர வேண்டியதில்லை என்பதை அலெக்ஸாண்டர் புரிந்து கொள்வார். ‘On' நிலைக்குத் திரும்பினால், குரல் பதிவுகள் மீண்டும் இயங்கத் தொடங்கி விடும்.

 நடைபயணத்தின் போது சரி செய்தனர்

நடைபயணத்தின் போது சரி செய்தனர்

டிராகன் விண்கலம் ஒரு புதிய செயற்கைக் கையையும் எடுத்துச் சென்றுள்ளது. ஏற்கனவே விண்வெளி மையத்தில் உள்ள, கனடாவில் தயாரிக்கப்பட்ட செயற்கைக் கைக்கு மாற்றாக இது எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

17 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்த செயற்கைக் கையை விண்வெளி வீரர்கள் சில மாதங்களுக்கு முன்புதான் தங்களுடைய விண்வெளி நடைபயணத்தின் போது சரி செய்தனர்.

 வளர்ச்சி பற்றிய ஆய்வு

வளர்ச்சி பற்றிய ஆய்வு

விண்வெளியில் தாவரங்களின் வளர்ச்சி பற்றிய ஆய்வு, மற்றும் கேன்சர் நோயைக் குணப்படுத்தப் புது வழிமுறையைக் கண்டு பிடிக்கும் நோக்கில் விண்வெளியில் இரத்த நாள அணுக்களின் வளர்ச்சி பற்றிய ஆய்வு ஆகியவற்றுக்குத் தேவையான சாதனங்களையும் டிராகன் விண்கலம் கொண்டு சென்றுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
SpaceX Launches 'Flying Brain' AI Robot for ISS Crew : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X