வர்த்தக தொலைதொடர்பு செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்த ஸ்பேஸ்X பால்கான் 9 ராக்கெட்.!

இந்த பால்கான்9 ன் முதல்தளமானது, கடந்த ஜனவரி மாதம் ப்ளோரிடாவில் இருந்து செலுத்தப் பயன்பட்டது. இந்த முறை ஸ்பேஸ் எக்ஸ் மீள்வதற்கான முயற்சிகளை எடுக்கவில்லை.

|

அமெரிக்க-ஜெர்மனின் 2 அறிவியல் செயற்கைகோள்கள் மற்றும் 5 வர்த்தக தொலைதொடர்பு செயற்கைகோள்களை செவ்வாயன்று கலிபோர்னியாவில் இருத்து செலுத்திய ஸ்பேஸ் எக்ஸ் பெல்கான்9 ராக்கெட் வெற்றிகரமாக நீள்வட்டப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது.

வர்த்தக தொலைதொடர்புசெயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்த ஸ்பேஸ்X ராக்கெட்

வான்டென்பர்க் ஏர்போர்ஸ் தளத்தின் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து 12:47க்கு புறப்பட்ட ராக்கெட், லாஸ்ஏஞ்சல்ஸ் மேற்கே உள்ள பசிபிக் பெருங்கடல் வழியாக தென் துருவத்தை நோக்கிப் பயணப்பட்டது.

இரிடியம்

இரிடியம்

நீள்வட்டப்பாதையை அடைந்த சில நிமிடங்களிலேயே, அதன் மேல்தளம் ஆராய்ச்சி செயற்கைகோள்களை நிலைநிறுத்தியது. அடுத்த தலைமுறை இரிடியம் தொலைதொடர்புக்கான செயற்கைகோள்கள், செலுத்தப்பட்ட ஒரு மணிநேரத்திலேயே செயல்பட ஆரம்பித்தது. இந்த பால்கான்9 ன் முதல்தளமானது, கடந்த ஜனவரி மாதம் ப்ளோரிடாவில் இருந்து செலுத்தப் பயன்பட்டது. இந்த முறை ஸ்பேஸ் எக்ஸ் மீள்வதற்கான முயற்சிகளை எடுக்கவில்லை.

நாசா

நாசா

நாசா மற்றம் ஜெர்மன் புவி அறிவியல் மையத்தின் புவிஈர்ப்புவிசை மீட்டல் மற்றும் காலநிலை சோதனை நடத்தும் நிறுவனத்திற்காக 15ஆண்டுகள் பணியாற்றி அக்டோபரில் முடிவுக்கு வந்த இரு செயற்கைகோள்களுக்கு பதிலாக இவை செலுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் மூலம் பூமியில் நீர் துகள்களின் ஓட்டம், பூமிக்குள்ளே ஏற்படும் துகள்களின் மாற்றங்களை , இரு கோள்களுக்கு இடையே உள்ள தூரத்தில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக வரும் ஏற்றிஇறக்கத்தின் வாயிலாக கண்டறியலாம். அந்த தூரம் நீள்வட்டப்பாதையிலிருந்து 137மைல்கள் மட்டுமே. ஆனால் லாஸ் ஏஞ்சல் மற்றும் சான்டியாகோ இடையேயான தூரம் 304 மைல்கள்.

புவிஈர்ப்பு விசை

புவிஈர்ப்பு விசை

புவிஈர்ப்பு விசையை தொடர்ந்து கண்காணித்து வருவதன் மூலம் பூமியின் பனிப்படுகைகள், ஏரி மற்றும் கடல் மட்டத்தில் ஏற்படும் மாற்றங்களை கண்டறியலாம்."இந்த திட்டமானது நீர் சுழற்சி மற்றும் எப்படி கடந்த 10,15 ஆண்டுகளில் காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை கண்டறியும் புரட்சிகரமான திட்டம்" என்கிறார் கிரேஸ்-போ திட்டத்தின் விஞ்ஞானி பிராங் வெப்.
இந்த தொழில்நுட்பத்தின் மூலம், கீரின்லாந்து மற்றும் அண்டார்டிகா அதீத மாற்றங்கள் ஏற்பட்டு, பெருமளவிலான நீர் கடலில் சேர்ந்துள்ளது என்பதை கண்டறிந்தது. இந்த கிரேஸ் திட்டத்தின் மூலம் கடந்த சில ஆண்டுகளாக மத்திய கலிபோர்னியாவில் எப்படி வறட்சி ஏற்பட்டது என்பதையும் கண்டறிய முடிந்தது.

 77 மில்லியன்

77 மில்லியன்

இந்த திட்டத்திற்காக நாசா தனது பங்களிப்பாக 430மில்லியன் டாலர்களையும்(ரூ2,900 கோடி), ஜெர்மன் 77 மில்லியன் யூரோவும் அளித்துள்ளன. இதன் வர்த்தக ரீதியிலான பகுதியில், உலகின் மொத்த மொபைல் கம்யூனிகேசன் செயற்கைகோள்களையும் இரிடியம் கம்யூனிகேசனாக மாற்றும் 3பில்லியன் டாலர்(ரூ20,500 கோடி) திட்டம் ஆகும்.

செயற்கைகோள்கள்

செயற்கைகோள்கள்

வெர்ஜினியாவை சேர்ந்த மெக்லீன் நிறுவனத்தின் 55 இரிடியம் நெக்ஸ்ட் செயற்கைகோள்கள் ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்டு செயல்படுகின்றன. இன்னும் இரு முறை ஏவும் போது இந்த எண்ணிக்கை 75ஆக உயரும். அதில் 66 செயல்படுபவை, 9 மாற்று செயற்கைகோள்கள் அடக்கம். இன்னும் ஆறு செயற்கோள்களை பூமியில் இருக்கும். தேவைப்படின் ஏவப்படும்.

இந்த இரிடியம் செயற்கைகோள்கள் விண்வெளியை அடிப்படையாக கொண்ட, ஏர் டிராபிக் மேனேஜ்மெண்ட் தளத்தையும் வழங்கும். யூனைடேட் கிங்டம்-ஐ சார்ந்த ஏர் டிராபிக் மேனேஜ்மெண்ட் நிறுவனமான நாட்ஸ் கடந்த வாரம் இதில் 69மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
SpaceX Falcon 9 Rocket Successfully Launches Commercial and Science Satellites Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X