Home
Scitech

விண்வெளிக்கு வீரர்களை அழைத்துச் செல்வதற்கான இறுதிக்கட்ட செயல்பாடுகள் குறித்து SpaceX விளக்கம்!

அனைத்து வகையான பாதுகாப்பு அம்சங்களும் உறுதி செய்யப்பட்டாலும் விண்வெளிப் பயணம் என்பது ஆபத்து நிறைந்தது என்பதை அனைவரும் உணர்ந்திருக்கின்றனர்

By Abu Bakker Fakkirmohamed

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மிகப் பெரிய கனவுத் திட்டம் நிறைவேறப் போகிறது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) வீரர்களை அனுப்புவதற்காக போயிங் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் (Boeing and SpaceX) ஆகிய இரு தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்துள்ளது நாசா விண்வெளி நிறுவனம். வணிக ரீதியான இந்த விண்வெளித் திட்டம் அதனுடைய இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நாசா நிறுவனம் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்க விண்வெளி வீரர்களை இந்த இரு தனியார் நிறுவனங்கள் மூலமாக விண்வெளிக்கு அனுப்பவிருக்கிறது.

இரண்டாம் கட்ட சோதனை 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெறும்: SpaceX.

விண்கலத்தில் வீரர்களைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்று, மீண்டும் திரும்ப பூமிக்கு அழைத்து வருவதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், “க்ரூ டிராகான்” (Crew Dragon) என்னும் விண்கலத்தை வடிவமைத்து உள்ளது. இதில் பயணம் செய்வதற்காக ஒன்பது நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அவர்களுள் நால்வர் கடந்த திங்கட்கிழமையன்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்கு வந்திருந்தனர். விண்வெளிப் பயணத்துக்கான இறுதிக்கட்டப் பணிகளில் அடுத்தடுத்து நிகழவிருக்கின்ற முக்கிய நிகழ்வுகள் குறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விவரித்துள்ளது.

முதல் கட்டம்

முதல் கட்டம்

ஆட்கள் இல்லாமல் விண்கலத்தை சோதித்துப் பார்ப்பது முதல் கட்டச் சோதனையில் அடங்கும். வெப்ப வெற்றிடச் சோதனை மற்றும் ஒலியியல் சோதனைகள், ஓஹியோ மாநிலத்தில் அமைந்துள்ள நாசாவின் பிளம் புரூக் நிலையத்தில் நடைபெறும். பிறகு சோதனைக்காக, ஃபுளோரிடாவில் அமைந்துள்ள நிலையத்திற்கு வரவேண்டும். முதல் கட்ட சோதனை நவம்பர் மாதத்தில் நடைபெறும்.

வெளியேற்றும் சோதனை

வெளியேற்றும் சோதனை

விண்வெளிப் பயணத்தின் போது விபத்து ஏற்பட்டால் மிக விரைவாக விண்வெளி வீரர்களை டிராகான் கேப்சூல் மூலமாகப் பாதுகாப்பாகத் தரையிறக்கும் திறனைச் சோதித்து நிரூபிக்க வேண்டிய கடமை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு உள்ளது. இந்தச் சோதனை ஆளில்லா விண்கலம் மூலமாக நிகழ்த்தப்படும். இந்தச் சோதனை புளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ள கென்னடி விண்வெளி நிலையத்தில் நடைபெறும். இந்தச் சோதனை எப்பொழுது நடைபெறும் என்பதை நாசா அல்லது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஆகிய இரண்டுமே தெரிவிக்கவில்லை. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தச் சோதனை நடைபெறும் எனத் தெரிகிறது.

இரண்டாம் கட்டச் சோதனை

இரண்டாம் கட்டச் சோதனை

முதற்கட்ட சோதனை மற்றும் வெளியேற்றச் சோதனைக்குப் பிறகு, இரண்டாம் கட்ட சோதனைக்குத் தன்னை தயார்படுத்திக் கொள்கிறது ஸ்பேஸ் எக்ஸ். விமானப் படையைச் சேர்ந்த பாப் பெங்கென் (Bob Behnken) மற்றும் கப்பல் படை விமானி ஹர்லி (Doug Hurley) ஆகிய இருவரும்தான் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்படவுள்ள டிராகான் கலத்தில் பறக்கவிருக்கின்ற முதல் விண்வெளி வீரர்களாவர். ஹர்லி கடந்த 18 ஆண்டுகளாக நாசாவோடு தொடர்பில் இருக்கிறார். விண்வெளிப் பயணத்திற்கான வெள்ளைநிற உடையை அணிந்த போது மிகவும் பரவசம் அடைந்ததாக ஹர்லி தெரிவிக்கிறார். "விண்வெளிப் பயணத்திற்காக முன்பு வடிவமைக்கப்பட்ட உடைகள் மிகவும் கனமானதாக இருந்தன. ஆனால் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வடிவமைத்துள்ள உடை மிகவும் அழகாக உள்ளது. நான் இதற்கு முன்னர் இருபது முறை விண்வெளி உடையை அணிந்துள்ளேன். ஆனால் இந்த உடை மிகவும் கனம் குறைந்ததாகவும், வசதியாவும் உள்ளது" என ஹர்லி தெரிவித்தார்.

போயிங்

போயிங்

இரண்டாம் கட்ட சோதனை 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் எனத் தெரிகிறது. விண்வெளிக்கு வீரர்களை முதலில் அழைத்துச் செல்வது யார்? என்பதில் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் போயிங் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் இடையே போட்டி நிலவினாலும், இரு நிறுவனங்களுமே பாதுகாப்பான பயணத்திற்காக மிகுந்த முக்கியத்துவம் தருகின்றன.

நாசா

நாசா

"பாதுகாப்பாக விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ள முடியும் என உறுதி செய்த பிறகுதான் நாங்கள் எங்களுடைய பயணத்தைத் துவக்குவோம்" என உறுதிபடக் கூறுகிறார், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன செயல் அதிகாரி, வைன் ஷாட்வெல் (Gwynne Shotwell). வெற்றிகரமான பயணத்திற்கான அனைத்து வழிமுறைகளையும் தவறாது கடைப்பிடித்து வருகிறோம். அமெரிக்க வீரர்களை விண்வெளிக்குஅழைத்துச் செல்லும் பணியை நாசா அனுமதிக்கும் வரை தொடர்ந்து செய்ய எங்களைத் தயார்படுத்துகிறோம்" என்கிறார் இவர். "இரண்டாம் கட்ட சோதனை நிறைவு பெற்ற பிறகு, விண்கலத்திற்கான சான்றிதழையும், விண்வெளிப் பயணத்திற்கு வீரர்களை அழைத்துச் செல்வதற்கான அனுமதியையும் நாசா வழங்கும். மைக் ஹாப்கின்ஸ் மற்றும் விக்டர் குளோவர் ஆகிய இருவரும் எங்களுடைய முதல் பயணத்திட்டத்தில் இடம் பெறுவர்" என்றும் ஷாட்வெல் கூறுகிறார்

அனைத்து வகையான பாதுகாப்பு அம்சங்களும் உறுதி செய்யப்பட்டாலும் விண்வெளிப் பயணம் என்பது ஆபத்து நிறைந்தது என்பதை அனைவரும் உணர்ந்திருக்கின்றனர். "என் குடும்பத்தை விட்டுப் பிரிந்து இருப்பது மட்டும்தான் என்னை பயமுறுத்துகிறது" என்கிறார் திருமணமாகி நான்கு குழந்தைகளுக்குத் தந்தையாக உள்ள விக்டர் குளோவர்.

Best Mobiles in India

English summary
SpaceX Details Next Big Steps It Needs to Take to Carry Astronauts: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X