நிலவைச் சுற்றிக் காட்ட நாங்க தயார்! பயணிக்க நீங்க தயாரா? ஸ்பேஸ் எக்ஸ் அறிவிப்பு!

  சுற்றுலாப் பயணிகளை விண்ணுக்கு அழைத்துச் சென்று நிலவைச் சுற்றிக் காட்டும் வகையில் அமைந்த புதிய திட்டத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
  விண்வெளிக்குச் செல்ல வேண்டும் என்னும் கனவோடு இருக்கும் நபர்களைப் பெரிய ஃபால்கன் ராக்கெட் (BFR) மூலமாக வானுக்கு அழைத்துச் செல்லும் வகையில் அனுமதி பெற்றுள்ள உலகின் முதல் தனியார் விண்வெளி போக்குவரத்து நிறுவனமாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் திகழ்கிறது.

  இந்தப் பயணத் திட்டம் தொடர்பான விரிவான தகவல்களை வரும் வாரத்தில் இந்நிறுவனம் அறிவிக்கவுள்ளது.

  மின்சாரக் கார் தாயாரிக்கும் நிறுவனமான தெஸ்லாவின் (Tesla) தலைமைச் செயல் அதிகாரியான எலன் மஸ்க் (Elon Musk) , விண்வெளிப் போக்குவரத்துக்காகத் தொடங்கிய நிறுவனம்தான் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஆகும். இதனுடைய தலைமையகம் கலிபோர்னியாவில் அமைந்துள்ளது. விண்வெளிக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்வது தொடர்பாக இந்நிறுவனம் இது போன்ற அறிவிப்புகளை அடிக்கடி வெளியிட்டு விண்வெளி ஆர்வலர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டி விடுகிறது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  ராக்கெட்

  நிலவைச் சுற்றிப் பார்ப்பதற்காக உலகின் முதல் இரண்டு விண்வெளிச் சுற்றுலாப் பயணிகளை 2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் விண்வெளிக்கு அழைத்துச் செல்வோம் என 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.

  டிராகான் விண்வெளி வாகனத்தின் (Dragon crew vehicle) மூலமாகப் பயணிகளை அழைத்துச் செல்வதற்குத் திட்டமிடப்பட்டடு இருந்தது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்குத் (International Space Station) தேவையான பொருட்களை எடுத்துச் செல்ல விண்வெளி சரக்கு வாகனத்தையும் தொடர்ச்சியாக இயக்கப் போவதாகவும் இந்நிறுவனம் அறிவித்திருந்தது. ஃபால்கான் கனரக ராக்கெட் மூலமாக இவை விண்ணில் ஏவப்படும் எனவும் இந்நிறுவனம் அறிவித்திருந்தது.

  நிலவில் தடம் பதித்த மனிதர்கள்

  ஆனால் இந்தத் திட்டங்களின் செயற்பாடுள் குறித்து எந்தத் தகவல்களையும் சமீபகாலமாக இந்நிறுவனம் தெரிவிக்கவில்லை.

  தன்னுடைய திட்டங்கள் தொடர்பான விரிவான தகவல்களை வருகின்ற திங்கட்கிழமை மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் இந்நிறுவனம் அறிவிக்க உள்ளது.

  நிலவில் தடம் பதித்த மனிதர்கள்
  1972 ஆம் ஆண்டு அப்போல்லோ ராக்கெட் மூலமாக மனிதர்கள் நிலவுக்குச் சென்று வந்ததற்குப் பிறகு, இதுவரை யாரும் நிலவுக்குச் செல்லவில்லை.

  அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரர்களான நீல் ஆம்ஸ்டிராங் மற்றும் ஆல்டிரின் (Neil Armstrong and Buzz Aldrin) ஆகிய இருவரும்தான் நிலவில் தரையிறங்கிய முதல் மனிதர்கள் ஆவர். நிலவில் காலெடுத்து வைத்த சமயத்தில், "தனி மனிதன் எடுத்து வைக்கும் இந்தச் சிறிய எட்டு, மனித சமூகத்தைப் பொறுத்த வரை மிகப் பெரிய பாய்ச்சல் ஆகும் " என நீல் ஆம்ஸ்டிராங் உதிர்த்த வார்த்தைகள் உலகப் புகழ்ப் பெற்றவையாகத் திகழ்கின்றன. இது வரை 24 விண்வெளி வீரர்கள் மட்டுமே நிலவுக்குச் சென்றுள்ளனர்.

  டொனால்டு டிரம்ப்

  அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டொனால்டு டிரம்ப் அந்நாட்டு விண்வெளித் திட்டங்களுக்கு மிகுந்த ஊக்கம் அளித்து வருகிறார். விண்கற்கள் (asteroids) மற்றும் செவ்வாய் கிரகத்தை நிலவில் இருந்து ஆராயும் வகையில் ஒரு நுழைவாயில் தளத்தை (lunar gateway) அமைக்கும் முயற்சியில் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

  நாசா நிறுவனத்தின் வணிக ரீதியான கூட்டு நிறுவனமாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் திகழ்கிறது. அடுத்த ஆண்டு சர்வதேச விண்வெளி நிறுவனத்துக்கு ராக்கெட்டை அனுப்பும் திட்டத்தோடு இவ்விரு நிறுவனங்களும் இணைந்து பணியாற்றி வருகின்றன.

  2019 ஆம் ஆண்டில் விண்வெளிக்குப் பயணிகளை அனுப்பும் நோக்கத்தோடு போயிங் நிறுவனமும் முழு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

  நாசா

  ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நாசா நிறுவனத்துடன் 1.6 பில்லியன் டாலர் (ஏறக்குறைய 11,400 கோடி) அளவுக்கு ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிறுவனத்தில் ஆய்வை மேற்கொண்டுள்ள அமெரிக்க விண்வெளி வீரர்களுக்குத் தேவையான பொருட்களை டிராகான் விண்வெளி ஓடத்தின் மூலமாகக் கொண்டு செல்ல வேண்டியது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் வேலையாகும். இந்த விண்வெளி ஓடத்தை விண்ணில் ஏவுவதற்கு ஃபால்கன் 9 என்னும் ராக்கெட் பயன்படுத்தப்பட இருக்கிறது.

  2022 ஆம் ஆண்டுக்குள்

  பெரிய ஃபால்கன் ராக்கெட் (BFR) ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் புதிய தாயாரிப்பு ஆகும். மிகச் சக்தி வாய்ந்த 31 இஞ்சின்கள் இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்டு உள்ளது. 150 டன் எடையை விண்வெளிக்குச் சுமந்து செல்லும் திறனுடையது.

  2022 ஆம் ஆண்டுக்குள், பெரிய ஃபால்கன் ராக்கெட் (BFR) மூலம், சரக்கு விண்வெளி ஓடங்களை வானுக்கு ஏவி அவற்றைச் செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கச் செய்ய உள்ளதாக கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் எலன் மஸ்க் தெரிவித்திருந்தார்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  SpaceX Announces New Plan to Send Tourist Around Moon: Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more