ஸ்பேஸ் ஐஎல் - விண்வெளியில் தடம் பதிக்கும் முதல் தனியார் நிறுவனம்

அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஜப்பான், இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் வரிசையில் இஸ்ரேல் முதல்முறையாக நிலவுக்கு செயற்கைகோளை அனுப்பி உள்ளது.

|

இரவில் கண்ணுக்கு குளிர்ச்சியாக, இரவின் மடியில் அழகாக, கார் வானத்தில் வெள்ளை புள்ளியாய், கை நீட்டினால் தொடும் தூரத்தில் தெரியும் நிலவை தொட்டவர் சிலரே. மனிதரைவிட இயந்திரங்களே நிலவை அதிக எண்ணிக்கையில் முத்தமிட்டு உள்ளன.

ஸ்பேஸ் ஐஎல் - விண்வெளியில் தடம் பதிக்கும் முதல் தனியார் நிறுவனம்

அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஜப்பான், இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் வரிசையில் இஸ்ரேல் முதல்முறையாக நிலவுக்கு செயற்கைகோளை அனுப்பி உள்ளது. இந்த செயற்கைக்கோள் ஸ்பெஸ்ஐஎல் (SpaceIL) என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது.

ஸ்பெஸ்ஐஎல்

ஸ்பெஸ்ஐஎல்

ஸ்பெஸ்ஐஎல் (SpaceIL) நிறுவனத்தின் பியர்ஷீட் (Beresheet) என்ற நிலவில் தரையிறங்கும் வாகனம் அமெரிக்காவில் கேப் கனவரல் விண்வெளி ஏவுதளத்திலிருந்து டெஸ்லா நிறுவனத்தின் ஸ்பேஸ் எக்ஸ் பால்கான் 9 (SpaceX falcon 9) உதவியுடன் பிப்ரவரி 21ம் தேதி ஏவப்பட்டது. இந்த வாகனம் ஏப்ரல் மாதம் நிலவில் தரை இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு மாத கால பயணம் நிலவை நோக்கி நீள்வட்டப் பாதை அதிகரிப்பின் மூலம் பயணிக்கிறது.

பியர்ஷீட் என்பதற்கு ஆரம்பம் என்று பொருள். இஸ்ரேல் விண்வெளி ஆராய்ச்சியில் நிலவின் ஆரம்பம் என்பதை குறிக்க இந்த பெயர்

நிலவுக்கு செலுத்தப்படும் விண்வெளிக் கலங்கள்

நிலவுக்கு செலுத்தப்படும் விண்வெளிக் கலங்கள்

நிலவுக்கு செலுத்தப்படும் விண்வெளிக் கலங்கள் அரசாங்க நிறுவனங்கள் மூலம் நிதி உதவி பெற்று விண்வெளிக்கு பயணித்துக் கொண்டிருந்தன. இஸ்ரேல் நிறுவனத்தின் விண்வெளி வாகனம் முற்றிலும் தனியார் பங்களிப்பு மூலம் உருவாக்கப்பட்ட திட்டமாகும். இந்த விண்கலம் வெற்றிகரமாக நிலவில் கால் பதித்தால் தனியார் நிலவு வாகனமாக கருதப்படும். இந்த விண்கலம் குறைந்த முதலீட்டில் அதிக தன்னார்வலர்களால் உருவாக்கப்பட்ட செயல் திட்டம் ஆகும்.

யாரிவ் பாஷ்

யாரிவ் பாஷ்

கணினிப் பொறியாளர் யாரிவ் பாஷ் 2010ஆம் ஆண்டில் பேஸ்புக் மூலம் " யாருக்கெல்லாம் நிலவுக்கு போக ஆசை " என்ற ஒரு பதிவின் மூலம் இந்த திட்டத்திற்கு விதையிட்டார். பாஷ் மற்றும் அவருடன் இருந்த இரு முதலீட்டாளர்கள் 2012ஆம் ஆண்டு சிறிய தண்ணீர் பாட்டில் அளவில் விண்கலத்தை நிலவில் ஏவலாம் என யோசித்தனர். இந்த திட்டம் முதலில் கூகிள் நிறுவனத்தின் 20 மில்லியன் பரிசினை அடைய ஏற்படுத்த பட்ட முயற்சி ஆகும்.

20 மில்லியன் டாலர்

20 மில்லியன் டாலர்

அதற்காக 20 மில்லியன் டாலர் முதலீட்டை பெற முயற்சி செய்தனர். அதிர்ஷ்டமாக 20 மில்லியன் முதலீட்டிற்கு பதில் 100 மில்லியன் முதலீடு கிடைத்தது. பின்னர் பல ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் இந்தத் திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். நிறுவனத்தின் ஊழியர்களில் 80% தன்னார்வலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


எதிர்பார்த்ததை விட பலமும் ஆர்வமிக்க ஊழியர்களும் முதலீடும் கிடைத்ததனால் திட்டம் மீண்டும் மெருகேற்றப்பட்டது. 2015ஆம் ஆண்டு spaceX நிறுவனத்தின் மூலம் விண்கலத்தை ஏவலாம் என திட்டமிடப்பட்டது. விண்கலத்தை செலுத்த ஆகும் செலவை குறைக்கும் பொருட்டு விண்கலத்துடன் மேலும் சில விண்கலங்களை இதனுடன் இணைத்து spaceX நிறுவனத்தின் ராக்கெட் மூலம் செலுத்த முடிவு எடுக்கப்பட்டது.

 காந்தப்புலத்தை ஆராய்ச்சி செய்யும்

காந்தப்புலத்தை ஆராய்ச்சி செய்யும்

SpaceIL நிறுவனத்தின் விண்கலன் நான்கு கால்களுடன் நிலவில் இறங்குவதற்கு ஏற்றார்போல் வடிவமைக்கப்பட்டது அதன் எடை 596 கிலோகிராம் ஆகும். இந்த விண்கலம் நிலவில் காந்தப்புலத்தை ஆராய்ச்சி செய்யும் உபகரணங்களுடன் பயணிக்கிறது.

மென்பொருள் மாற்றும் கருவி

மென்பொருள் மாற்றும் கருவி

இந்த விண்கலம் மேம்படுத்தப்பட்ட வன்பொருள் மற்றும் மென்பொருள் கொண்டு இயக்கப்படுகிறது. இந்த விண்கலத்தின் அளவு இதனுடன் பயணிக்கும் மேலும் இரண்டு விண்கலத்தின் இடப்பங்கீடுகளால் குறைந்துள்ளது. எனவே இந்த விண்கலத்தில் அவசர பராமரிப்பு மற்றும் கூடுதல் இடர் மேலாண்மை கருவிகள் மற்றும் மென்பொருள் மாற்றும் கருவி (software updater) ஆகியவை இடம் பெறவில்லை. பூமியின் நேர்கோட்டில்இருந்து மறையும் போது நட்சத்திரங்களை அறிவதில் இடர்பாடு ஏற்பட்டால் அதை தவிர்க்கும் தானியங்கி வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தன்னார்வலர்கள்

தன்னார்வலர்கள்

பியர்ஷீட் விண்கலம் பூமியை முறை நீள் வட்டபாதையில் சுற்றும். ஒவ்வொரு முறையும் நீள் வட்டத்தின் ஆரம் அதிகரிக்கும். மூன்று முறை பூமியை சுற்றிய பின்னர் விண்கலத்தின் பாதை நிலவின் பாதையில் பயணிக்க தொடங்குகிறது. நிலவை இரண்டு சுற்றுகள் சுற்றிய பின்னர் விண்கலம் நிலவில் தரை இறங்கும்.


விண் கலத்தின் முன்னேற்றத்தை பொருட்டு நிறுவனத்தின் தன்னார்வலர்கள் ஒரு மாதத்தில் 20000 மாணவர்களை சந்தித்து பியர்ஷீட் விண்கலத்தை பற்றியும் அதன் பயணத்தை பற்றியும் விளக்குகின்றனர்.

Best Mobiles in India

English summary
SpaceIL's Beresheet Lunar Lander: Israel's 1st Trip to the Moon: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X