நிலவின் குகைகள், எரிமலைக் குழாய்களை ஆராய ஸ்பைடர் போன்ற 'வாக்கிங்' ரோபோட்!

|

வாஷிங்டன்: ஸ்பேஸ்பிட் நிறுவனத்தின் தவழும்-ஊர்ந்து செல்லும் ஸ்பைடர் போன்ற ரோபோக்கள் விரைவில் சந்திரனில் உள்ள மர்மமான குகைகள் மற்றும் எரிமலைக் குழாய்களை ஆராய உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்பேஸ்பிட் ரோபோ

புதிய ஸ்பேஸ்பிட் ரோபோ

ஸ்பேஸ்பிட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அண்மையில் நடைபெற்ற கலந்தாய்வில் இந்த புதிய ரோபோக்கள் பற்றிய தகவலை வெளியிட்டார். அக்டோபர் 10 ஆம் தேதி, 2021 ஆம் ஆண்டில் யுனைடெட் கிங்டத்தின் முதல் தனியார் மூன் ரோவர் நிலவிற்கு அனுப்பப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

நான்கு நீண்ட கால்களுடன் ரோபோட்

நான்கு நீண்ட கால்களுடன் ரோபோட்

ஸ்பேஸ்பிட் நிறுவனம் உருவாகியுள்ள ரோபோட்கள் நான்கு நீண்ட கால்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. சக்கரங்களுடன் இருக்கும் ரோவர்களை போன்று இல்லாமல் இவை தங்களின் கால்களைப் பயன்படுத்தி நிலவில் உள்ள மர்மமான குகைகள் மற்றும் எரிமலைக் குழாய்களை ஆராயும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ஜ் இறங்காத குவாண்டம் பேட்டரி! ப்ளூபிரிண்ட் தயாரித்த விஞ்ஞானிகள்..சார்ஜ் இறங்காத குவாண்டம் பேட்டரி! ப்ளூபிரிண்ட் தயாரித்த விஞ்ஞானிகள்..

சிங்கள் யூனிட் கியூப்சாட் வடிவம்

சிங்கள் யூனிட் கியூப்சாட் வடிவம்

அதேபோல் இந்த வாக்கிங் ரோபோட்கள், நகர்ந்து செல்வதைப் பார்ப்பதற்கு ஸ்பைடர் போன்று இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர். இதில் அதிநவீன கேமரா மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ரோபோட்கள் அனைத்தும் சிங்கள் யூனிட் கியூப்சாட் வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரத்தியேக மதர்ஷிப் ரோவர்

பிரத்தியேக மதர்ஷிப் ரோவர்

இது போன்ற 8 ரோபோட்கள் பிரத்தியேக மதர்ஷிப்ரோவர் மூலம் நிலவிற்கு அனுப்பப்படும் என்றும், நிலவின் ஆராய்ச்சியின் போது ரோபோட்களை பாதுகாக்க நிலவின் சூழலைச் சமாளிக்கும் விதத்தில் இந்த ரோவர் உருவாக்கப்பட்டுள்ளதாக ஸ்பேஸ்பிட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாவ்லோ தனஸ்யுக் கூறியுள்ளார்.

பலகட்ட ஆராய்ச்சி

பலகட்ட ஆராய்ச்சி

அடுத்த 50 ஆண்டுகளில் மனிதர்கள் நிலவில் இல்லாவிட்டாலும், இதுபோன்றபல நிறுவனங்களின் பல விதமானரோபோட்கள் நிச்சயம் பலகட்ட ஆராய்ச்சிகளை நிலவின் மேற்பரப்பில் நடத்தும் என்றுஸ்பேஸ்பிட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாவ்லோ தனஸ்யுக் கூறியுள்ளார்.

Best Mobiles in India

English summary
Spacebit 'Walking' Robots Will Explore Lunar Crevices and Caves : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X