இந்தியாவிற்கு எதிராக சீனாவுடன் கூட்டு வைத்த பாக்: பின்னனி என்ன?

அதாவது, "வருகிற 2022 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் ஒரு மனிதரை விண்வெளிக்கு அனுப்பி வைக்கும்" என்கிற தகவலை அமைச்சர் ஃபவத் சவுத்ரி கடந்த வியாழக்கிழமை அன்று அன்று அறிவித்து உள்ளார்.

|

விண்வெளி ஆராய்ச்சி என்று வந்து விட்டால் யாரு கெத்து? ஹாலிவுட் படம் ஒன்று எடுக்குற செலவுல செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பிய நம்ம இஸ்ரோவா.? இல்லை, எல்லாத்துக்கும் புள்ளையார் சுழி போடும் நாசாவா? என்று, நாம் இங்கு சீரியஸாக சண்டை போட்டு கொண்டு இருக்கும் நேரத்தில், நமது பங்காளியான பாகிஸ்தான் சத்தமின்றி ஒரு வேலையை பார்த்துள்ளது, அதுவும் சீனாவின் சப்போர்ட் உடன்.!

<strong>டார்க் வெப் : யாரும் அறிந்திராத இணையத்தின் மறுப்பக்கம்.!! </strong>டார்க் வெப் : யாரும் அறிந்திராத இணையத்தின் மறுப்பக்கம்.!!

இந்தியாவிற்கு எதிராக சீனாவுடன் கூட்டு வைத்த பாக்: பின்னனி என்ன?

அப்படி என்ன வேலை பார்த்தது?
எல்லைகளிலும், கிரிக்கெட் / ஹாக்கி போட்டிகளிலும் மட்டும் தான் இந்தியா- பாகிஸ்தான் மோதல்கள் நடக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த நமக்கு, பாகிஸ்தான் நாட்டின் தகவல் மற்றும் ஒளிபரப்புக்கான மத்திய அமைச்சரான ஃபவத் சவுத்ரி வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலொன்று (சிலருக்கு) ஆச்சரியத்தையும், (சிலருக்கு) சிரிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

<strong>ஸ்டீஃபன் ஹாகிங் பற்றிய 10 உண்மைகள்.! உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.!</strong>ஸ்டீஃபன் ஹாகிங் பற்றிய 10 உண்மைகள்.! உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.!

அதாவது, "வருகிற 2022 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் ஒரு மனிதரை விண்வெளிக்கு அனுப்பி வைக்கும்" என்கிற தகவலை அமைச்சர் ஃபவத் சவுத்ரி கடந்த வியாழக்கிழமை அன்று அன்று அறிவித்து உள்ளார்.

 இதில் ஆச்சரியப்படுவதற்கும், சிரிப்பதற்க்கும் என்ன இருக்கிறது?

இதில் ஆச்சரியப்படுவதற்கும், சிரிப்பதற்க்கும் என்ன இருக்கிறது?

ஆச்சரியம் என்னவெனில், கூறப்பட்டுள்ள அதே 2022 ஆம் ஆண்டில், இஸ்ரோவும், விண்வெளிக்குள் மனிதர்களை அனுப்பும் திட்டம் ஒன்றை கையில் வைத்துள்ளது என்பது தான். அமெரிக்காவின் நாசா உட்பட பெரும்பாலான உலக நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும், அவைகளின் விண்வெளி ஆராய்ச்சிகளுக்கும் உதவி புரிந்து வரும் இஸ்ரோவிற்கு போட்டியாக பாகிஸ்தான் களம் இறங்கி உள்ளதென்பது, நிச்சயமாக ஆச்சரியப்பட வேண்டிய ஒரு விடயம் தான்.

மறுப்பக்கம் சிரிப்பதற்கான காரணம் என்னவெனில், அடுத்த 2022 ஆம் ஆண்டு நிகழவிருக்கும் பாகிஸ்தானின் இந்த முதல் விண்வெளி திட்டமானது சீனாவின் உதவியுடன் நடக்க உள்ளது என்பது தான். அதையும் பாகிஸ்தானே பகிரங்கமாக அறிவித்துள்ளது.

இது ஒரு ரகசிய திட்டமா? அல்லது அதிகாரபூர்வமான கூட்டணியா?

இது ஒரு ரகசிய திட்டமா? அல்லது அதிகாரபூர்வமான கூட்டணியா?

பாகிஸ்தான் நாட்டின் பிரதம மந்திரியான இம்ரான் கான், வருகிற நவம்பர் 3 ஆம் தேதி தொடங்கி சீனாவிற்கு தனது முதல் பயணத்தை மேற்கொள்ளப்போவதும், அதற்கு முன்பே 2022 ஆம் ஆண்டு நிகழவிருக்கும் விண்வெளி ஆராய்ச்சி சார்ந்த அதிகாரபூர்வ அறிவுப்புகளை நிகழ்த்த வேண்டும் என்பதற்காகவே கடந்த வியாழன் அன்று, அமைச்சரவை கூட்டம் நடந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆகமொத்தம், இதை ஒரு அதிகாரப்பூர்வமான கூட்டணி என்றே எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில், இது சார்ந்த அறிவிப்பு வெளியாகும் முன்பே, பாகிஸ்தான் விண்வெளி மற்றும் மேல் வளிமண்டல ஆய்வு ஆணையம் (சுபர்கோ) மற்றும் ஒரு சீன நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒப்பந்தம் ஏற்கெனவே கையொப்பமிடப்பட்டு விட்டது. உடன் இந்த ஆராய்ச்சியை, இந்தியாவிற்கு எதிராக சீனா மட்டும் பாகிஸ்தான் நடத்தும் நடவடிக்கையாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

பாகிஸ்தானின் திடீர் விண்வெளி போட்டிக்கு பின்னால் உள்ள காரணம்?

பாகிஸ்தானின் திடீர் விண்வெளி போட்டிக்கு பின்னால் உள்ள காரணம்?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் திட்டத்தின் படி அனைத்தும் நடக்குமானால், வருகிற 2022 ஆம் ஆண்டின் போது, விண்வெளிக்குள் மனிதர்களை அனுப்பிய நான்காவது உலக நாடு என்கிற மைல்கல்லை இந்தியா எட்டிப் பிடிக்கும். அந்த சாதனையை தன்வசப்படுத்திக் கொள்ளத்தான், பாகிஸ்தான் சீனாவுடன் கூட்டணி சேர்ந்துள்ளது என்பதை வெளிப்படையாகவே உணர முடிகிறது.

இதனால் சீனாவிற்கு என்ன லாபம்?

இதனால் சீனாவிற்கு என்ன லாபம்?

வெறும் கண்களால் பார்த்தால், இதனால் சீனாவிற்கு ஒரு லாபமும் இல்லை. ஏனெனில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய நாடுகளின் பட்டியலில் சீனா ஏற்கனவே இடம் (மூன்றாவது) பிடித்து விட்டது. ஆனால் சற்று கூர்ந்து கவனித்தால் - முதல் இடத்தில் ரஷ்யாவும், இரண்டாவது இடத்தில் அமெரிக்காவும் உள்ள நிலைப்பாட்டில் - நான்காவது இடத்திற்கான போட்டியில், இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானை உள் நுழைக்க, சீனா முயற்சிக்கிறதா அல்லது பாகிஸ்தானே இந்த விண்வெளி போட்டியில் தன் முனைப்புடன் ஈடுபடுகிறதா என்பதை இப்போதைக்கு உறுதி படுத்த முடியாது, ஆக பாகிஸ்தானிற்கு உதவும் சீனாவின் உள் நோக்கத்தையும் நம்மால் அறிந்துகொள்ள முடியாது.

இதற்கு முன் பாகிஸ்தானிற்கு சீனா உதவி உள்ளதா?

இதற்கு முன் பாகிஸ்தானிற்கு சீனா உதவி உள்ளதா?

பாகிஸ்தான் மற்றும் சீனா ஏற்கனவே வலுவான பாதுகாப்பு உறவுகளைக் கொண்டுள்ளன. சீனாவின் இராணுவ வன்பொருட்களை வாங்குவோர்களின் பட்டியலின் முதல் இடத்தில் இஸ்லாமாபாத் இருப்பதே அதற்கான ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். இந்த ஆண்டுக்கு முன்னதாக, பாகிஸ்தானின் இரண்டு ஏவுகணை செயற்கைக்கோள்கள், ஒரு சீன ராக்கெட் உதவியுடன் விண்வெளிக்குள் செலுத்தப்பட்டதும், அவைகள், சீனாவின் கோபி பாலைவனத்தில் அமைந்துள்ள ஜியுவான் சாட்டிலைட் லான்ச் சென்டரிலிருந்து, சீனாவின் லாங் மார்ச் (எல்எம் -2சி) ராக்கெட் கொண்டு ஏவப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் வெளிப்படையான பலவீனம்!

பாகிஸ்தானின் வெளிப்படையான பலவீனம்!

ஏவப்பட்ட இரண்டு செயற்கைகோள்களில் ஒன்று, பூமியை கண்காணிப்பது மற்றும் ஆப்டிகல் தொடர்பாடல் என்கிற இரண்டு நோக்கங்களை கொண்ட ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள் (பிஆர்எஸ்எஸ்1) ஆகும். மற்றொன்று, பாகிஸ்தான் விண்வெளி மற்றும் மேல் வளிமண்டல ஆய்வு ஆணையத்தின் மூலம் உருவாக்கம் பெற்ற சோதனை செயற்கைகோள் ஆன பாக் டெஸ் 1ஏ சாட்டிலைட் ஆகும். இந்த இரண்டு செயற்கைகோள்களுமே பாகிஸ்தானின் தொழில்நுட்ப வளர்ச்சியற்ற நிலைப்பாட்டின் காரணமாக சீனாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

பதறுமா இஸ்ரோ?

பதறுமா இஸ்ரோ?

அதற்கு வாய்ப்பில்லை. இருந்தாலும் பாகிஸ்தானின் இந்த "ஸ்பேஸ் ரேஸ்" நடவடிக்கையானது, இஸ்ரோவிற்கு பயத்தை கொடுக்காவிட்டாலும் கூட, சிறிய அளவிலான நெருக்கடியை கொடுக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம். அதை இஸ்ரோ எப்படி எதிர்கொள்கிறது, எப்படி சமாளிக்கிறது என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சிக்கியது : 13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்.!

சிக்கியது : 13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்.!

1954-இல் அமெரிக்க விமானப்படையைச் சார்ந்த ஆய்வாளர் ஒருவர் அளித்த தகவலின் மூலம் தான், இப்படி ஒரு விண்கலம் நமது பூமி கிரகத்தை மிகவும் மர்மமான முறையில் சுற்றி வருகிறதென்பது தெரிய வந்தது. விண்ணில் விண்கலங்களை செலுத்தும் தொழில்நுட்ப வசதிகளானது 1950-களில் தான் வளர்ந்து கொண்டிருந்தது. அம்மாதிரியான நிலைப்பாட்டில் வெளியான "பிளாக் நைட்" பற்றிய செய்தி உலகம் முழுவதும் காட்டுத்தீயாய் பரவியது.

பிளாக் நைட் சாட்டிலைட் (Black Knight satellite) என்பது ஒரு மர்மமான விண்கலமாகும். 'கருப்பு போர்வீரன் வேற்றுலக விண்கலம்' என்றும் இது அழைக்கப்படுகிறது. இதன் பெயர் கேட்பதற்கு காவியக்கதை போல் இருந்தாலும் இது வேற்றுலகத்தை சார்ந்தது என பெரும்பாலான ஆய்வாளர்களால் நம்பப்படுகிறது.

13,000 ஆண்டுகளாக.!

13,000 ஆண்டுகளாக.!

ஏனெனில், கருப்பு போர்வீரன் வேற்றுலக விண்கலம் (Black Knight satellite) என்று அழைக்கப்படும் இந்த விண்கலம் சுமார் 13,000 ஆண்டுகளாக விண்வெளியில் சுற்றி வருவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதற்கு என்ன ஆதாரம்.?

இதற்கு என்ன ஆதாரம்.?

யூஎப்ஓ (UFO) எனப்படும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள்களை (Unidentified flying object) ஆராயும் ஆய்வாளர்களும் இந்த கருத்துடன் ஒற்றுப்போகின்றனர். இதெல்லாம் உண்மையா.? இதற்கு என்ன ஆதாரம்.? இதை கண்டுபிடித்தது எப்படி.? போன்ற மிகவும் மர்மமான கேள்விகளுகான விடைகளை அலசுவோம் வாருங்கள்.

ஒரு விசித்திரமான சுற்றுப்பாதை.!

ஒரு விசித்திரமான சுற்றுப்பாதை.!

1954-க்கு பிறகு மீண்டும் 1960-ல் அமெரிக்க கடற்படையானது, இதே கருப்பு பொருள் ஆனது சுமார் 104.5 நிமிட சுற்று வேகத்தில் புவியைச் சுற்றிவருவதை கண்டறிந்தது. அதன்பின்னர் இது சார்ந்த தீவிரமான ஆய்வு தொடங்கப்பட்டது. ஒரு விசித்திரமான சுற்றுப்பாதையை கொண்ட இந்த கருப்பு பொருளுக்கும், பூமிக்கும் இடையேயுள்ள அதிகப்பட்ச தூரம் 1,728 கி.மீ என்றும், குறைந்தப்பட்ச தூரம் 216 கி.மீ என்றும் ஒவ்வொன்றாக கண்டறியப்பட்டது.

50 ஆண்டுகளுக்கும் மேலாக ரேடியோ சிக்னல்.!

50 ஆண்டுகளுக்கும் மேலாக ரேடியோ சிக்னல்.!

இந்த பிளாக் நைட் செயற்கைக்கோள் ஆனது, சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ரேடியோ சிக்னல்களை கடத்திக் கொண்டிருக்கிறது என்று உலகம் முழுவதுமுள்ள முகவர்கள் கண்கானித்துக் அறிவித்தனர். அதன் பின்னர், பல ஆண்டுகளாக விண்வெளி வளர்ச்சி யுத்தம் நடத்திக் கொண்டிருந்த அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு, இந்த பிளாக் நைட் விண்கலம் மீதொரு சிறப்பு கவனம் பிறந்தது.

நிக்கோலா டெஸ்லாவை நம்பவில்லை.!

நிக்கோலா டெஸ்லாவை நம்பவில்லை.!

1899-ஆம் ஆண்டு நிக்கோலா டெஸ்லா, இதே பிளாக் நைட் விண்கலத்தின் சமிக்ஞையை இடைமறிப்பு செய்திருந்தார் என்று கூறப்பட்டிருந்தது, அப்போது யாரும் இதை நம்பவில்லை, அதை வெறும் ஒரு புரளியாக கருதினர் என்பது குறிப்பிடத்தக்கது. தீவிரமான சந்தேகங்கள் கிளம்பிய பின்னரே இதன் மீதான ஆய்வில், 1930-களில் இருந்தே பிளாக் நைட் விண்கலத்தின் விசித்திரமான சிக்னல்களை பெற்றுவருவதாக உலகம் முழுக்க உள்ள விண்வெளி வீரர்கள் தெரிவித்தனர்.

தற்செயலாக புகைப்படத்தில் சிக்கியது.!

தற்செயலாக புகைப்படத்தில் சிக்கியது.!

1957-ஆம் ஆண்டு தான், இந்த மர்மமான பிளாக் நைட் விண்கலம் முதல் முறையாக புகைப்படத்தில் சிக்கியது. டாக்டர் லுயிஸ் கோராலோஸ் (Dr. Luis Corralos) என்பவர், சோவியத் ஒன்றியத்தினால் ஏவப்பட்ட ஸ்சுப்புட்னிக் 2 விண்கலம் (Sputnik 2) வெனிசுவேலாவின் தலைநகரமான கரகஸ் நகரை கடக்கும் போது புகைப்படம் எடுக்க முயற்சிக்கும் போது தற்செயலாக இந்த "பிளாக் நைட்" புகைப்படத்தில் சிக்கியது.

மர்ம விண்கலம் பற்றிய டைம்ஸ் கட்டுரை.!

மர்ம விண்கலம் பற்றிய டைம்ஸ் கட்டுரை.!

அதே 1957-ஆம் ஆண்டு ஸ்சுப்புட்னிக் 1 விண்கலத்தில் இருந்த விண்வெளி வீரர்கள், அடையாளம் காணமுடியாத ஒரு பொருள், போலார் சுற்றுவட்டப்பாதையின் அருகே நிழலாடுவதாக அறிக்கை செய்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பின்னர் ஒரு அதிகாரப்பூர்வமானத் தன்மையை அடைந்த இந்த மர்ம விண்கலம் பற்றிய கட்டுரை மார்ச் 7-ஆம் தேதி 1960-ஆம் ஆண்டு பிரபல டைம்ஸ் நாளிதழில் வெளியானது.

மேப்பிங் மற்றும் கண்காணிப்பு.!

மேப்பிங் மற்றும் கண்காணிப்பு.!

1957-ஆம் ஆண்டிலிருந்து, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளுமே போலார் சுற்று வட்டப்பாதைக்குள் விண்கலம் ஒன்றை செலுத்த முயன்று 1960-ஆம் ஆண்டு உலகின் முதல் வானிலை செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்ட அந்த போலார் செயற்கைகோள் ஆனது பூமியின் மேப்பிங் மற்றும் கண்காணிப்பு ஆகிய பிரதான பணிகளை செய்வதோடு, அவ்வப்போது போலார் சுற்றுவட்டப்பாதையில் தென்படும் பிளாக் நைட் பற்றிய தகவல்களையும் சேகரிக்க உதவுமென நம்பப்பட்டது.

சுமார் 10 டன் வரை எடை.!

சுமார் 10 டன் வரை எடை.!

எதிர்பார்த்தபடியே, 1960-களில் மீண்டும் பிளாக் நைட் விண்கலம் போலார் சுற்று வட்டப்பாதையில் தென்பட்டுள்ளது. அப்போது தான் அந்த விண்கலமானது சுமார் 10 டன் வரை எடை கொண்டதாய் இருக்குமென விண்வெளி வீரர்களும், அறிவியலாளர்களும் தங்களது கணிப்புகளை தெரிவித்தனர். அந்த காலக்கட்டத்தில் விண்ணில் மிதக்கும் மிக கனமான விண்கலமாய் (Heaviest Artificial Satellite) பிளாக் நைட் பார்க்கப்பட்டது.

அடுத்த 7 மாதம் கழித்து.!

அடுத்த 7 மாதம் கழித்து.!

தொடர்ச்சியான கண்காணிப்புகளுக்கு பின்னர் பிளாக் நைட் முதல் முறையாக ரேடாரில் சிக்கியது. அடுத்த 7 மாதம் கழித்து 'ட்ராக்' செய்யப்பட்டு மீண்டும் பிளாக் நைட் புகைப்படத்தில் சிக்கியது. இந்த பணியில் க்ரூமன் ஏர்கிராஃப்ட் கார்ப்ரேஷன் (Grumman Aircraft Corporation) மிகவும் உதவியதென்பது குறிப்பிடத்தக்கது. எல்லாவற்றை விடவும் மிக சுவாரசியமான விடயம் என்னவெனில், பிளாக் நைட் விண்கலத்தில் இருந்து கிடைத்த சிக்னல்களை டீகோட் (decode) செய்த பின், அது 13000 ஆண்டுககளுக்கு முன் உருவான 'எப்சிலன் பூட்ஸ் ஸ்டார் சிஸ்டம்' (Epsilon Bootes Star System) என்ற இரட்டை நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டதென்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அடுத்த முறை சிக்கும்போது.!

அடுத்த முறை சிக்கும்போது.!

இவ்வளவு தான், நம்மால் அதிகபட்சம் கண்டறிய முடிந்த விடயங்களாகும். இது ஏன் பூமி கிரகத்தை சுற்றி திரிகிறது.? அதுவும் ஒரு மர்மமான சுற்றுப்பாதையில் மர்மமான வடிவமைப்பில்.? இது பூமியை கண்காணிக்கிறதா.? அப்படி கண்காணிக்கிறது என்றால், இது வேற்றுகிரகத்தை சேர்ந்த விண்கலமா.? அப்போது நாம் இந்த அண்டத்தில் தனியாக இல்லையா.? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை அடுத்த முறை பிளாக் நைட் விண்கலம் நமது மிகவும் சக்தி வாய்ந்த விண்வெளி தொலைநோக்கிகள் கண்களில் சிக்கும்போது நிச்சயம் கிடைக்கும்.!

Best Mobiles in India

English summary
Space race with India? Pakistan plans manned mission with China help: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X