TRENDING ON ONEINDIA
-
கூட்டணி உறுதியானதால் குஷி.. அமித்ஷா இன்று மாலை சென்னை வருகை
-
டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் இணைந்து 13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மெகா மோசடி... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
நடிகையாகும் பிரபல ஹீரோவின் மகள்: பொண்ணு ரொம்பத் தெளிவு
-
இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் கெட்ட நேரம் ஆரம்பிச்சிடுச்சு... கொஞ்சம் கவனமா இருங்க
-
பாகிஸ்தான் இராணுவத்தை தலை பிச்சுக்க விட்ட இந்திய ஹேக்கர்கள்.!
-
தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா? ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா?
-
இந்த ஊர்ல ஒருவரின் சராசரி வருமானமே 3.2 கோடி ரூபாய்.. எந்த ஊர் தெரியுமா..?
-
ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது
ஸ்பேஸ் எக்ஸ்-ன் ஃபால்கோன் ஹெவி ராக்கெட் மூலம் முதன்முதலாக செலுத்தப்பட்ட எலன் மஸ்கின் சிவப்பு நிற டெஸ்லா ரோட்ஸ்டர், விண்ணில் செலுத்திய ஓராண்டிற்கு பிறகு, காஸ்மிக் கதிர்களின் காரணமாக அந்த ரோட்ஸ்டர் வாகனம் எதிர்பார்த்தபடி இயங்காது என கார்பேக்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.
டெஸ்லா மற்றும் அதன் அழிவில்லா இயக்கி முதன்முதலில் இன்பைனிடி மூலம் விண்வெளிக்கு சென்றபோது, ஸ்டார்மேன் ஒரு பில்லியன் ஆண்டுகள் செயல்படும் என ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் நம்பியது. ஆனால் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில் சற்று குறைவான வானியல் கணிப்பு வெளியாகியுள்ளது. சில மில்லியன் வருடங்களுக்கு பிறகு விண்கலம் பூமி அல்லது வெள்ளியில் மோதுவதற்கு முன்னரே (ஒரு வருடத்திற்கு முன்னர் எலன் மஸ்க், இந்த விண்கலம் வெள்ளியில் மோதாது என கற்பனை செய்தார்), விண்வெளியில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கவுள்ளது.
6 சதவீத வாய்ப்பு மட்டுமே உள்ளது
வளிமண்டலத்தின் வழியாக பூமியை தாக்கவரும் அந்த விண்கலத்தைப் பற்றி அதிகம் கவலை கொள்ள தேவையில்லை. விண்கலம் மீண்டும் பூமியை வந்தடைவதற்கு 6 சதவீத வாய்ப்பு மட்டுமே உள்ளது, மேலும் அது வெள்ளி கிரகத்தின் மீது மோதிக் கொள்ள 2.5 சதவீத வாய்ப்பே உள்ளது. ஒருவேளை அது மோசமான வெப்பத்தின் காரணமாக உருகுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
ஆஸ்ட்ரோ-மேனேக்யூன் க்ரூஸ்
கடந்த வருடம் சூரியனின் சுற்றுப்பாதையிலும், புதனை தாண்டியும் ஆஸ்ட்ரோ-மேனேக்யூன் க்ரூஸ் பயணம் செய்தபோது, அவரது ரோட்ஸ்டர் நுண்துகள்களால் நிரப்பப்பட்டதன் காரணமாக, அதன் பிரகாசமான சிவப்புநிற வெளிப்புற பகுதி மாறியது. இது தொடர்ந்து சிவப்பு நிறமாக இருக்க வாய்ப்பில்லை. காஸ்மிக் கதிர்கள் மற்றும் சூரிய கதிர்வீச்சு காரணமாக, விண்கலத்தின் பிளாஸ்டிக், தோல், மற்றும் துணி கூறுகளில் உள்ள கார்பன் பிணைப்புகள் சிதைக்கப்படுகிறது. சிவப்பு வண்ணப்பூச்சு ஏற்கனவே டயர் மற்றும் லுக்ஸ் லெதர்ஸ் போன்றவற்றுடன் சேர்ந்து போயிருக்கலாம்.
வேதிபொருட்கள்
"அந்த சூழலில் உள்ள வேதிபொருட்கள் ஒரு வருடம் கூட தாக்குபிடிக்காது "என்கிறார் வேதியியலாளர் வில்லியம் கரோல்.
எலும்புக்கூடாக மட்டுமே இருக்கும்
டெஸ்லா அநேகமாக இன்னும் ஒரு மில்லியன் ஆண்டுகளுக்குகூட சுற்றுப்பாதையில் இருக்கும், ஆனால் அது வெறும் அலுமினிய எலும்புக்கூடாக மட்டுமே இருக்கும். இது ஏற்கனவே தனது உத்தரவாதத்தை சுமார் 10,000 மடங்கு அதிகப்படுத்தியது. டெஸ்லாவின் தற்போதைய ரோட்ஸ்டரின் உத்தரவாதமானது 50,000 மைல் ஆகும். ஸ்டார்மான் ஏற்கனவே 470 மில்லியன் மைல்களுக்கு விண்வெளியில் நிறைவுசெய்துள்ளது.
சொந்த கிரகத்திற்கு திரும்புவதாக இருக்கலாம்
வளிமண்டலத்திலிருந்து ஏதேனும் ஒரு விசித்திரமான பொருள் விழுவதை நீங்கள் பார்க்கிறீர்கள் என்றால், அது எலன் மஸ்ஸின் டெஸ்லா விண்கலம் அதன் சொந்த கிரகத்திற்கு திரும்புவதாக இருக்கலாம்!