100-க்கு 99 பேர்.. இந்த போட்டோவில் தெரிவது என்னவென்று கண்டுபிடிக்க மாட்டாங்க!

|

சத்தியமாக.. இது ஒரு 'ஆப்டிக்கல் இல்லுஷன்' போட்டோ அல்ல; இது மிகவும் சாதாரணமான ஒரு புகைப்படம் தான்!

அதாவது மனித கண்களை ஏமாற்றாத, எந்தவிதமான மாயத்தோற்றத்தையும், பிம்பத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தாத.. மிகவும் சாதாரணமான ஒரு போட்டோ தான்!

இதை.. பல முறை பார்த்து இருப்போம்!

இதை.. பல முறை பார்த்து இருப்போம்!

நம்மில் பலரும் இந்த போட்டோவில் இருக்கும் "விஷயத்தை" பல முறை பார்த்து இருப்போம். சிலர் டிவி அல்லது இணையம் வழியாக பார்த்து இருக்கலாம், சிலர் நேரடியாக கூட பார்த்து இருக்கலாம்.

ஆனாலும் கூட இது என்னவென்று அவ்வளவு சுலபமாக கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால்... இது முற்றிலும் வித்தியாசமான.. வேறொரு கோணத்தில் இருந்து புகைப்படமாக்கப்பட்டுள்ளது!

70 ஆண்டுக்கு 1 முறை தான் 70 ஆண்டுக்கு 1 முறை தான் "இது" வானத்தில் தெரியும்! எப்படியாவது பார்த்துடுங்க!

அதாவது மேல் இருந்து கீழ் நோக்கி எடுக்கப்பட்டுள்ளது!

அதாவது மேல் இருந்து கீழ் நோக்கி எடுக்கப்பட்டுள்ளது!

இன்னும் தெளிவாக கூற வேண்டும் என்றால்.. இது வானத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் ஆகும்.

நம்பினால் நம்புங்கள்.. இந்த புகைப்படத்தில் நீங்கள் பார்ப்பது ஒரு ராக்கெட் (Rocket) ஆகும்.

அட ஆமாங்க! பூமியில் இருந்தபடி விண்வெளிக்குள் செல்லும் ராக்கெட்டை நாம் பலமுறை பார்த்து இருப்போம்.

ஆனால் விண்வெளியில் இருந்தபடியே, விண்வெளிக்குள் நுழையும் ஒரு ராக்கெட்டை கண்டிப்பாக பார்த்து இருக்க மாட்டோம். அந்த நுழைவு - இப்படித்தான் இருக்கும்!

கொடுத்து வைத்த சமந்தா... போஸ்ட் செய்த போட்டோ!

கொடுத்து வைத்த சமந்தா... போஸ்ட் செய்த போட்டோ!

இதுபோன்ற அற்புதமான காட்சியை - எல்லைகள் அல்லது பிராந்தியங்கள் இல்லாத விண்வெளியில் மிதக்கும் - சர்வதேச விண்வெளி நிலையத்தில் "வசிக்கும்" ஒரு சிலரால் மட்டுமே காண முடியும்.

அப்படியான ஒரு அதிர்ஷ்டசாலி தான் - இத்தாலியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை ஆன சமந்தா கிறிஸ்டோஃபோரெட்டி (Samantha Cristoforetti)!

செவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம்.. அதுவும் 4 முறை கேட்டது! என்னது அது?செவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம்.. அதுவும் 4 முறை கேட்டது! என்னது அது?

கஜகஸ்தானில் இருந்து கிளம்பிய ராக்கெட்!

கஜகஸ்தானில் இருந்து கிளம்பிய ராக்கெட்!

விண்வெளி வீராங்கனை ஆன சமந்தா, இந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் விண்வெளி நிலையத்தில் இருந்தபடி, தனது "ஆய்வு நாட்களை" கழித்து வருகிறார்!

அவர் கஜகஸ்தானில் இருந்து விண்ணிற்குள் செலுத்தபட்ட சோயுஸ் விண்கலத்தின் (Soyuz spacecraft) ராக்கெட் லான்ச்சை தான் இவ்வளவு அழகாக புகைப்படம் எடுத்து உள்ளார்!

அந்த சோயுஸ் விண்கலத்திற்குள்!

அந்த சோயுஸ் விண்கலத்திற்குள்!

கஜகஸ்தானில் இருந்து ஏவப்பட்ட சோயுஸ் விண்கலமானது, மூன்று மணி நேரத்திற்கு பிறகு மைக்ரோ கிராவிட்டி ஆய்வகத்துடன் (Microgravity Lab) இணைக்கப்பட்டது.

அந்த விண்கலத்திற்குள் மூன்று விண்வெளி வீரர்கள் இருந்தனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

லண்டன் அருகே விழுந்த விண்கல்லுக்குள் இருந்த நம்ப முடியாத லண்டன் அருகே விழுந்த விண்கல்லுக்குள் இருந்த நம்ப முடியாத "பொருள்"!

ஒரே விண்கலத்தில்.. ஒரு அமெரிக்கர்.. இரண்டு ரஷ்யர்கள்!

ஒரே விண்கலத்தில்.. ஒரு அமெரிக்கர்.. இரண்டு ரஷ்யர்கள்!

சோயுஸ் விண்கலம் வழியாக விண்வெளி நிலையத்திற்கு வந்த மூவரில் ஒருவர் - அமெரிக்காவை சேர்ந்த ஃபிராங்க் ரூபியோ ஆவர்; மீதமுள்ள இருவரும் ரஷ்யாவை சேர்ந்த செர்ஜி ப்ரோகோபியேவ் மற்றும் டிமிட்ரி பெட்லின் ஆவார்கள்.

இந்த 3 விண்வெளி வீரர்களும் ஆய்வு நோக்கத்திற்காக, ஆறு மாத காலத்திற்கு விண்வெளியில் தங்க உள்ளனர்; மேலும், கடந்த வசந்த காலத்தின் துவக்கத்தில் இருந்து அங்கு (விண்வெளி நிலையத்தில்) வாழும் மற்ற சில விண்வெளி வீரர்களுக்கு "மாற்றாகவும்" பணி புரிவார்கள்!

சோயுஸ் - மிக மிக பழைய விண்கலம்!

சோயுஸ் - மிக மிக பழைய விண்கலம்!

விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான வரலாற்றில்.. கடந்த பல ஆண்டுகளாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் வேலையை (Longest operational human spacecraft programme) செய்து வரும் ஒரு விண்கலம் என்றால் - அது சோயுஸ் தான்!

அறுபதுகளின் தொடக்கத்தில், சோவியத் யூனியனால் உருவாக்கப்பட்டிருந்தாலும் கூட, சோயுஸ் விண்கலம் இன்றும் பயன்படுத்தப்படுகிறது; அதே சமயம் அதில் முக்கியமான மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது!

செவ்வாய் கிரகத்தில் ஓட்டை போட்ட NASA.. உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!செவ்வாய் கிரகத்தில் ஓட்டை போட்ட NASA.. உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!

பழசு தான்.. ஆனாலும் கெத்து!

பழசு தான்.. ஆனாலும் கெத்து!

ஏனென்றால், சோயுஸ் விண்கலமானது இதுவரை 140 க்கும் மேற்பட்ட விண்வெளி பயணங்களை "வெற்றிகரமாக" நிகழ்த்தி உள்ளது!

இது "அந்த கால" சோவியத் விண்வெளி திட்டத்திற்காக, கொரோலெவ் டிசைன் பீரோவால் (Korolev Design Bureau) வடிவமைக்கப்பட்டது; ஆனாலும் இன்னமும் சும்மா "கல்லு" மாதிரி இருக்கு!

Photo Courtesy: Samantha Cristoforetti Twitter Page, NASA, ESA, Wikipedia

Best Mobiles in India

English summary
Soyuz Rocket Launch Photographed From Space

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X